Published:Updated:

நீச்சலுக்கு வந்த மாணவிகள் கர்ப்பமா?

சேலம் பரபரப்பு

நீச்சலுக்கு வந்த மாணவிகள் கர்ப்பமா?

சேலம் பரபரப்பு

Published:Updated:
##~##
நீச்சலுக்கு வந்த மாணவிகள் கர்ப்பமா?

''பள்ளி மாணவிகள் இருவர் கர்ப்பம் அடைந்து இருக்கிறார்கள்...'' என்கிற பதறவைக்கும் செய்திதான் சேலத்தை இப்போது பரபரப்பு அடையச் செய்துள்ளது! 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சேலம், காந்தி ஸ்டேடியம் அருகே உள்ளது, அரசுக்கு சொந்தமான நீச்சல் குளம். இந்தக் குளத்துக்கு நீச்சல் பயிற்சிக்கு வந்த மாணவிகளில் இருவர்தான் கர்ப்பம் அடைந்து விட்டதாகவும், அதற்கு நீச்சல் பயிற்சியாளர் ஞானசேகரன்தான் காரணம் என்றும் பரவி இருந்த தகவலை அடுத்து தீவிர விசாரணையில் இறங்கினோம்.

சிலரிடம் பேசியபோது,

''நீச்சல் பயிற்சிக்காக பள்ளி மாணவிகள் ஏராளமானோர் நீச்சல் குளத்துக்கு வருகிறார் கள். கடந்த இரண்டு மாதத்துக்கு முன்பு தென் மண்டல அளவிலான நீச்சல் போட்டி திருவனந்தபுரத்தில்

நீச்சலுக்கு வந்த மாணவிகள் கர்ப்பமா?

நடைபெற்றது. அந்தப் போட்டிக்காக பயிற்சியாளர் ஞானசேகரன் 15 மாணவிகளை சேலத்துல இருந்து அழைச்சிட்டுப் போனார். சில மாணவிகள் பெற்றோருடனும், சிலர் தனியாகவும் திருவனந்தபுரம் போயிருக்காங்க. அங்கேதான் ஏடாகூடமா நடந்திருக்கணும்.

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவிகள் இரண்டு பேர், இரண்டு வாரங்களுக்கு முன்பு தொடர்ந்து வாந்தி எடுத்து இருக்காங்க. அந்த மாணவிகளோட பெற்றோர், அவர்களை டாக்டர்கிட்ட அழைச்சிட்டுப் போய் காட்டியபோதுதான் இரண்டு பேருமே கர்ப்பமாக இருப்பது தெரிஞ்சிருக்கு. அந்த மாணவிகளோட பெற்றோர், ரொம்பவும் மனசு உடைஞ்சி போயிட்டாங்க. டாக்டர் அவர் களை சமாதானப்படுத்தி, மாணவி களிடம் விசாரித்தபோது, அந்த நீச்சல் பயிற்சியாளர் பற்றி சொல்லி இருக்காங்க.

டாக்டர்களின் ஆலோசனைப் படி, உடனடியாக மாணவிகளுக்கு கரு கலைப்பு செய்வதற்கான  மருந்துகளைக் கொடுத்துட்டாங்க. இந்த விஷயத்தை வெளியில் சொன்னா குழந்தைகளோட எதிர்காலமே பாழாகிவிடும் என்பதால்தான் பெற்றோர்கள் அமைதியாக இருந்துட் டாங்க. ஆனாலும் தங்களோட பெயரைக் குறிப்பிடாம, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்குப் புகார் அனுப்பி இருக்காங்க. அதுக்குப் பிறகுதான் இந்த விஷயம் வெளியே பரவிடுச்சு!'' என்றார் முகம் காட்ட விரும்பாத விளையாட்டு ஆணையத்தில் பணிபுரியும் அலுவலர் ஒருவர்.

நீச்சலுக்கு வந்த மாணவிகள் கர்ப்பமா?

சேலம் மாவட்ட விளையாட்டு அலுவலர் பிரதாப்குமாரிடம் இந்த பரபரப்புப் புகார் பற்றி கேட்டபோது, ''மாணவிகளின் பெற்றோர் யாரும் எங்களிடம் புகார் தெரிவிக்கவில்லை. எனவே, அது தொடர்பான விவரங்கள் எதுவுமே எனக்குத் தெரியாது...'' என்று சொன்னார்.

இந்தச் சூழ்நிலையில், கடந்த 17-ம் தேதி நீச்சல் பயிற்சி பெறும் குழந்தைகள் சிலரின் பெற்றோர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர். ''நீச்சல் குளத்தில் பயிற்சி பெற்ற மாணவிகள் இருவர் கர்ப்பம் என தவறான தகவல் பரப்பி இருக்காங்க. எங்க குழந்தைகளும் நீச்சல் பயிற்சிக்கு போயிட்டு இருப்ப தால், எங்களுக்கு மன உளைச்சலாக இருக்கிறது. மாணவிகள் கர்ப்பம் என்பதே தவறான தகவல். அப்படி இருந்தால், யார் என்று வெளிப்படையா சொல்ல வேண்டியதுதானே?  மாவட்ட விளையாட்டு அலுவ லருக்கும், நீச்சல் பயிற்சியாளருக்கும் ஏதோ தனிப்பட்ட பிரச்னை இருக்கிறது. அந்த விரோதம் காரணமாகத்தான் இப்படிப் புரளிகளைக் கிளப்பி விடுறாங்களோ என்று எங்களுக்கு சந்தேகமாக இருக்குது. எனவே, மாவட்ட ஆட்சியர் இந்த விஷயத்தை உடனடியாக விசாரித்து, உரிய நடவடிக்கை எடுப்பது அவசரமான விஷயம்!'' என்று மனு கொடுத்து இருக்கிறார்கள்.

நீச்சலுக்கு வந்த மாணவிகள் கர்ப்பமா?

கலெக்டர் மகரபூஷணமோ, ''மாணவிகள் கர்ப்பம் அடைந்து விட்டதாக எனக்கு எந்த பெற்றோரும் புகார் செய்யவில்லையே...'' என்று நழுவினார்.

நீச்சலுக்கு வந்த மாணவிகள் கர்ப்பமா?

பயிற்சி மையத்தில் இருந்த சிலரிடம் பேசினோம். ''ஞானசேகரன் இங்கே பயிற்சி யாளராக வந்த பிறகுதான் பல போட்டிகள்ல குழந்தைகள் ஜெயிச்சிருக்காங்க. ஞானசேகரனுக்கு பல தரப்புல இருந்தும் பாராட்டுக்கள் வந்துட்டே இருக்கும். மாவட்ட விளையாட்டு அலுவல ரால இதை ஜீரணிக்க முடியல. தன்னையும் தாண்டி ஞானசேகரனுக்கு பாராட்டுக்கள் போவதை தாங்கிக்க முடியாம அவர் மீது பழி போடத்தான் இப்படி ஒரு தகவலை வெளியில பரப்பி விடுறாரு. இது எல்லாத்துக்குமே அவருதான் காரணம். அவரை விசாரிச்சால் உண்மை வெளியில வரும். இந்த விவகாரம் துறை ரீதியிலான விசாரனையில இருக்கிறதால் ஞானசேகரன் உங்களிடம் நேரடியாக பேச முடியாது'' என்று சொல்கிறார்கள்.

தமிழ்நாடு மக்கள் உரிமை இயக்கம், இப்போது இந்த விவகாரத்தைக் கையில் எடுத்து இருக்கிறது. அதன் மாநிலத் தலைவரான பூமொழியிடம் பேசினோம். ''நீச்சல் குளத்தில் குற்ற சம்பவம் நடந்துள்ளது என்பதுதான் எங்களு டைய விசாரணையில் தெளிவாகத் தெரிகிறது. விஷயம் வெளியில் தெரிந்தால், மாவட்ட நிர்வாகத்துக்குக் கெட்ட பெயர் வந்துவிடும் என்ற காரணத்துக்காகவே கலெக்டர் உட்பட ஒட்டுமொத்த அதிகாரிகளும் சேர்ந்து மூடி மறைக்கிறார்கள். இந்த விஷயத்தை பெற்றோர் யாரும் வெளிப்படையாக வந்து சொல்ல மாட் டார்கள் என்பதை சாதகமாக எடுத்துக் கொள்கிறார்கள்.  தமிழக முதல்வர் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு உண்மையை வெளியே கொண்டுவர உத்தரவிட வேண்டும். இல்லை என்றால் இது தொடர்கதையாகி மேலும் பல மாணவிகள் பாதிக்கப்படலாம். இதுதவிர, சேலம் மாவட்ட விளையாட்டுத் துறையில் ஏகத்துக்கும் ஊழல்கள் நடக்கிறது. அதையும் விசாரிக்க உடனே உத்தரவிடணும்!'' என்று கோரிக்கை வைத்தார்.

நெருப்பில்லாமல் புகையாது என்பதால், இந்த விஷயத்தில் உறங்கும் உண்மைகளை வெளியில் கொண்டுவர தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சேலம் மக்களின் எதிர்பார்ப்பு!

- கே.ராஜாதிருவேங்கடம்

படங்கள்: க.தனசேகரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism