Published:Updated:

கொ.மு.க-வை பழி வாங்குகிறதா அரசு?

திசை மாறுகிறது மயில்கள் மரணம்

கொ.மு.க-வை பழி வாங்குகிறதா அரசு?

திசை மாறுகிறது மயில்கள் மரணம்

Published:Updated:
##~##
கொ.மு.க-வை பழி வாங்குகிறதா அரசு?

தேசியப் பறவையான மயில்களை மருந்து வைத்துக் கொன்ற குற்றத்துக்காக விவசாயி ஒருவர் கைது செய்யப்பட... அவருக்கு ஆதரவாகக் களமிறங்கிய கொங்கு முன்னேற்றக் கழகத்தினரை போலீஸார் கைது செய்து இருப்பதுதான் இப்போது ஈரோடு ஹாட்! 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

  ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறையைச் சுற்றியுள்ள கிராமங்களில் திரும்பிய பக்கம் எல்லாம் மயில்களைப் பார்க்க முடியும். அதிக எண்ணிக்கையில் மயில்கள் நடமாட்டம் இருப்பதால், விவசாய நிலங்கள் பாதிப்பு அடைவது இந்த இடத்தின் நெடுநாள் பிரச்னை. இது குறித்து கடந்த 12.1.11 ஜூ.வி-யில், 'மயில் தொல்லை தாங்கலையே!’ என்று எழுதியிருந்தோம்.

கடந்த வாரத்தில் பெருந்துறை அருகே, பட்டக்காரன் பாளையத்தில் கந்தசாமி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் 15 மயில்கள் செத்துக் கிடந்தன. தகவல் அறிந்ததும் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார்கள். மயிலுக்கு மருந்து வைத்துக் கொன்றது விவசாயி கந்தசாமி என்பது உறுதியாகத் தெரிய வரவே, அவரை கைது செய்தனர்.

கொ.மு.க-வை பழி வாங்குகிறதா அரசு?
கொ.மு.க-வை பழி வாங்குகிறதா அரசு?

கந்தசாமி கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொ.மு.க. மாவட்ட செயலாளர் கே.கே.சி.பாலு தலைமையில் ஏராளமானவர்கள் உண்ணாவிரதம் இருந்தார்கள். உடனே உண்ணா விரதப் பந்தலில் இருந்த 242 பேரையும் கைதுசெய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தது, போலீஸ்.

பட்டக்காரன்பாளையத்தைச் சேர்ந்த விவசாயி சின்னத்தம்பியிடம் பேசினோம். ''மயில்களால் எங்கள் விவசாயமே நாசமாகிறது. நிலத்தை உழுதாலே போதும்... எப்படித் தான் இந்த மயில்களுக்கு தெரியுமோ? உடனே கும்பலாக வந்து

கொ.மு.க-வை பழி வாங்குகிறதா அரசு?

விதைகளைத் தின்றுவிடும். காட்டில் விளைகிற கடலை, சோளம், ராகி, தக்காளி, சூரியகாந்தி, அவரை, புடலைன்னு ஒன்றைக்கூட விட்டு வைக்காமல், அனைத்தையும் தின்று விடுகிறது. நிலக்கடலை போட்டால், திருடன் மாதிரி நிலத்தைப் பறித்துக் கடலையை மட்டும் தின்றுவிட்டு மண்ணை மூடிவிட்டுப் போகிறது. நாங்கள் செடியைப் பிடுங்கிப் பார்த்தால்... கடலை எதுவும் இருக்காது. இப்படி மயில்களால் விவசாயமே செய்ய முடியாமல் தவிக்கிறோம். நாங்களும் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்துக்கும், வனத்துறைக்கும் பல முறை இந்த மயில்களைப் பிடித்து வனத்தில் விடுங்கள். அது சாத்தியம் இல்லை என்றால் சரணாலயம் ஏற்படுத்துங்கள் என்று கோரிக்கை வைத்துக்கொண்டுதான் இருக்கிறோம். ஆனாலும் மயில்களைக் கொல்ல வேண்டும் என்பது எங்கள் நோக்கம் கிடையாது. எலிக்கு வைத்த மருந்தை மயில்கள் சாப்பிட்டு இருக்கலாம்...'' என்கிறார் வேதனை யோடு.

கொங்கு முன்னேற்றக் கழகத்தின் சார்பில், கட்சியின் ஒருங்கிணைந்த சேலம் மாவட்டச் செயலாளர்

கொ.மு.க-வை பழி வாங்குகிறதா அரசு?

ராஜா அம்மையப்பன் பேசினார். ''எங்கள் கொங்கு சமுதாய மக்களின் பூர்வீகத் தொழிலே விவசாயம்தான். பரம்பரை பரம்பரையாகப் பறவைகளையும், கால்நடைகளையும் பராமரித்து வருகிறோம். மயிலுக்குப் போர்வை கொடுத்த பரம்பரையில் வந்த எங்களுக்கு, விஷம் வைத்துக் கொல்ல மனம் வராது. விவசாயி கந்தசாமி மயிலுக்காக மருந்து வைக்கவில்லை. அதனால் கந்தசாமிக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருந்த எங்கள் கட்சிக்காரர்களை கைது செய்து உள்ளனர். மயில் பிரச்னையைத் தீர்க்கத் தேவையான நடவடிக்கை எடுப்பதை விட்டுட்டு கொ.மு.க. நிர்வாகிகளை கைது செய்வது நியாயமா? ஆளும் கட்சிக்கு கொ.மு.க. மீது உள்ள கோபத்தை, மயிலைக் காரணமாக வைத்துப் பழி தீர்க்கிறார்கள். ஆளும் கட்சி செய்யும் திட்டமிட்ட சதி இது!'' என்று கொந்தளித்தார்.

ஈரோடு மாவட்ட வனப் பாதுகாவலர் அருணிடம் பேசி னோம். ''மயில்கள் இறந்துகிடப்பதாக எங்களுக்குத் தகவல் கிடைத்து, ஸ்பாட்டுக்குப் போனோம். 15 மயில்கள் இறந்து கிடந்தன. பார்க் கவே மனசுக்கு கஷ்டமாக இருந் தது. மயில்களைப் போஸ்ட் மார்ட் டம் செய்ய அனுப் பினோம். விஷம் கலந்த மக்கா சோளத்தை சாப்பிட்டதால்தான் மயில்கள் உயிர் இழந்ததாக ரிப்போர்ட் வந்தது. கந்தசாமியோட தோட்டத்தில் இருந்த மக்காசோளத்தை சோதனை செய்து பார்த்ததில், அதிலேயும் விஷம் கலக்கப்பட்டு இருந்தது. அதற்குப் பிறகுதான் போலீஸுக்குத் தகவல் சொல்லி கந்தசாமியை கைது செய்ய வைத்தோம். எலிக்கு வைத்த மருந்து என்பது பொய். மயில்களைக் கொல்ல வேண்டும் என திட்டம் இட்டே கந்தசாமி இந்த வேலையைச் செய்து இருக்கிறார். மயில்களால் விவசாயத்துக்குப் பெரிய சேதம் ஏற்படாது. அப்படி ஏற்படும்பட்சத்தில் நிவாரணத் தொகை வழங்கிக் கொண்டுதான் இருக்கிறோம். ஏதாவது காரணம் காட்டி வன உயிரினங்களைக் கொல்ல நினைத்தால் நடவ டிக்கை கடுமையாகத்தான் இருக்கும்!'' என எச்சரித்தார்.

தமிழக வனத்துறை அமைச்சர் பச்சைமாலி டம் மயில் கொல்லப்பட்ட விவகாரம் பற்றிக் கேட்டபோது, ''வன விலங்குகளைக் கொல்வது மன்னிக்க முடியாத குற்றம். அதுவும் தேசியப் பறவையைக் கொல்வது தேச விரோதச் செயல். அதை யார் செய்தாலும் நிச்சயம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஈரோடு மாவட்டத்தில் மயில்களுக்கு சரணாலயம் அமைப்பது குறித்து முதல்வர் கவனத்துக்குக் கொண்டு செல்வேன்'' என்று சொன்னார்.

மயில்கள் பிரச்னைக்கு இனியாவது நிரந்தரத் தீர்வு கிடைக்கட்டும்!

- வீ.கே.ரமேஷ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism