Published:Updated:

தேன்மொழிக்கு வந்த சோதனை!

மதுரை மீட்புப் போராட்டம்

தேன்மொழிக்கு வந்த சோதனை!

மதுரை மீட்புப் போராட்டம்

Published:Updated:
##~##
தேன்மொழிக்கு வந்த சோதனை!

துரை மாநகராட்சியில் ஊழல், முறைகேடு புகார்கள் என எத்தனையோ வரிசை கட்டி நிற்க, 320 சதுரஅடி பிரச்னையால், லஞ்ச வழக்கில் சிக்கிக்கொண்டு முழிக் கிறார் மேயர் தேன்மொழி! 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மதுரை மதிச்சியம் வடக்குத் தெருவில் மாநகராட்சிக்குச் சொந்தமான சமுதாயக்கூடம் உள்ளது. அதன் அருகே இருந்த காலிமனையை, அப்பகுதியைச் சேர்ந்த தி.மு.க. இலக்கிய அணி துணைச் செயலாளர் சுந்தர்ராஜன் ஆக்கிரமித்து வீடு கட்ட, மாநகராட்சிக்குப் புகார் போனது. அதை யாரும் கண்டுகொள்ளாமல் போகவே, மேயர் மீது வழக்குப் போட்டார் வக்கீல் ஜெயராம்!

அவரைச் சந்தித்தோம். 'மாநகராட்சி  இடத்தை ஒருவர் ஆக்கிரமிப்பு செய்தால் மேயரோ, கமிஷனரோ நேரடியாக நடவடிக்கை எடுப்பதோடு, சம்பந்தப்பட்ட நபர் மீது போலீஸில் புகார் கொடுக்க வேண்டும். ஆனால், இங்கே காம்பவுண்ட் சுவரைக்கூட இடித்துவிட்டு, மாநகராட்சி நிலத்தை ஆக்கிரமித்து இரண்டு

தேன்மொழிக்கு வந்த சோதனை!

மாடி கட்டடமே கட்டிவிட்டார்கள். எட்டு மாதங்களாகத் தொடர்ந்து புகார் கொடுத்தும் பதில் இல்லை. காரணம், சுந்தர்ராஜன் தி.மு.க-காரர் மட்டும் அல்ல, மேயரின் கணவர் கோபிநாதனுக்கு நெருக்கமான கான்ட்ராக்டர் மாணிக்கம் பிள்ளைக்கு வேண்டியவர். அதனால்,  பல லட்சம் மதிப்புள்ள அந்த நிலத்தையே அவருக்குப் பட்டா போட்டுக் கொடுக்க ஆயத்தமாகிவிட்டனர்.

ஆகவே, லஞ்ச ஒழிப்புத் துறை துணைக் கண்காணிப்பாளருக்குப் புகார் அனுப்பினேன். அதற்கும் பதில் இல்லை. உடனே, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குப் போட்டேன். என் புகாரின்படி லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும், இல்லை என்றால் உயர் நீதிமன்றத்தில் மனுதாரர் தனிநபர் வழக்குப் போடலாம் என்று 24.2.11 அன்று நீதிமன்றம் உத்தரவு இட்டது.

சுந்தர்ராஜனிடம் லஞ்சம் வாங்கியவர்களில் ஒருவரான சர்வேயர் குருசாமி, 'நீ எந்தக் கோர்ட்டுக்கு போனாலும், கடைசியில் ரிக்கார்டுக்கு எங்ககிட்டதான வரணும்?’ என்று மமதையாக சொன்னார். சொன்னதுபோலவே, அந்த இடத்தை ராமமூர்த்தி என்பவரிடம் இருந்து, சுந்தர்ராஜனின் மனைவி ரங்கம்மாள் பெயருக்கு கிரையம் பண்ணியதாக போலி ஆவணமும் ரெடி பண்ணிட்டாங்க.

தேன்மொழிக்கு வந்த சோதனை!

உயர் நீதிமன்ற உத்தரவு நகலை லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநருக்கு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் தொடங்கவில்லை. அதனால் நீதிமன்றம் கொடுத்த 2-வது வாய்ப்பின்படி, மதுரை தலைமை நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டேன். அதை விசாரித்த நீதிபதி, மேயர் தேன்மொழி, கான்ட்ராக்டர் மாணிக்கம்பிள்ளை, ஆணையாளர் செபாஸ்டின், நகரமைப்பு அதிகாரி முருகேசன், சர்வேயர் குருசாமி, தி.மு.க. பிரமுகர் சுந்தர்ராஜன், அவரது மனைவி ரங்கம்மாள் உள்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு இட்டது!' என்றார்.

மேயர் சார்பில் பேசிய அவரது கணவர் கோபிநாதன், 'இதுவரை இந்த விஷயம் மேயரின் கவனத்துக்கு வரவே இல்லை. நேற்றுதான் நகரமைப்பு அதிகாரியிடம் கேட்டேன். சுந்தர் ராஜன், மத்திய அரசின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ்,

தேன்மொழிக்கு வந்த சோதனை!

1 லட்சம் நிதி உதவியுடன் கட்டிய வீடு

தேன்மொழிக்கு வந்த சோதனை!

அது. வீட்டின் மொத்த பரப்பே 320 சதுரடி(!)தான். தாசில்தார், நகராட்சி இன்ஜினியர் உள்ளிட்ட அதிகாரிகள்... 'அந்த இடத்துக்குப் பட்டா, பத்திரம் சரியாக இருக்கிறதா?’ என்று ஆய்வு செய்த பின்னரே வீடு கட்ட அனுமதி கொடுத்தார்கள். வீடு கட்டும்போது மாநகராட்சி இடத்தில் இரண்டு அடி இழுத்துக்கட்டிவிட்டதாக புகார் வந்ததால், ஆக்கிரமிப்பு செய்த இடத்தை மட்டும் இடித்தனர். மொத்த வீட்டையும் இடிக்க வேண்டும் என்று வீம்பு செய்த ஜெயராம், நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு உள்ளார். இந்தப் பிரச்னைபற்றி மேயரைச் சந்தித்து இதுவரை ஒரு மனுகூட அவர் கொடுத்தது இல்லை. மண்டலங்கள்தோறும் நடத்தப்படும் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திலும் அவர் மனு கொடுக்கவில்லை. பிறகு ஏன் சம்பந்தமே இல்லாமல் மேயரை வழக்கில் சேர்த்தார் என்றே தெரியவில்லை. அவர் அ.தி.மு.க. வக்கீல் என்பதால் திட்டம் இட்டு அசிங்கப்படுத்துகிறார்!' என்றார்.

விஜிலன்ஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, 'நீதிமன்ற உத்தரவுப்படி மேயர் உள்ளிட்ட 13 பேர் மீது 3 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து உள்ளோம். அவர்கள் மீதான குற்றம் நிரூபணமானால், குறைந்தது ஓர் ஆண்டு முதல் அதிகபட்சம் 7 ஆண்டுவரை சிறைத் தண்டனை கிடைக்கும்!'' என்றார்.

இதற்கிடையே, மேயர் தேன்மொழி முன்ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து உள்ளார். இன்னும் என்னென்ன புகார்கள் கிளம்பப் போகிறதோ?

- கே.கே.மகேஷ்

படங்கள்: க.கார்த்திக்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism