Published:Updated:

போலீஸ் கூட்டணியில் சுருளி மலை கொடூரம்

இரட்டைக் கொலை... 22 கற்பழிப்பு!

போலீஸ் கூட்டணியில் சுருளி மலை கொடூரம்

இரட்டைக் கொலை... 22 கற்பழிப்பு!

Published:Updated:
##~##
போலீஸ் கூட்டணியில் சுருளி மலை கொடூரம்

'கல்லூரி மாணவி கஸ்​தூரியும் அவரது காதலன் எழில்முதல்வனும் தேனி மாவட்டம்சுருளி மலையில் கொலை செய்யப்பட்ட வழக்கில், கட்டத்தேவன் என்ற திவாகரனை உத்தமபாளையம் போலீஸார் கைது செய்து உள்ளனர். அவனுடன் சம்பந்தப்பட்ட நால்வரை போலீஸார் மறைத்துவிட்டார்கள்’ என்று ஜூ.வி. ஆக்ஷன் செல்லுக்குத் (044-42890005) தகவல் வரவே, களத்தில் இறங்கினோம். மலை அடிவாரத்தில் கடை வைத்திருக்கும் நபரிடம் பேசினோம். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''சுருளி அருவிக்கு வரும் காதல் ஜோடிகளை மிரட்டிப் பணம் பறிக்கும் கும்பல் பல காலமாக இந்த மலைப் பகுதிகளில் உலவி வருகிறது. மலையின் அடர்ந்த பகுதிக்குள் காதல் ஜோடிகள் நுழைந்தால் முதலில் இந்த பகுதியைச் சேர்ந்த சில கடைக்காரர்கள் வனத் துறைக்குத் தகவல் சொல்வார்கள். காதல் ஜோடி தனியாக ஒதுங்குவதைக் கண்காணிக்கும் வனத் துறையினர், அவர்களுக்கு நெருக்கமான ரவுடிக் கும்பலுக்கு சிக்னல் கொடுக்கின்றனர். காதல் ஜோடி சற்று நெருக்கமாக இருக்கும் போது, அருகில் செல்லும் அந்தக் கும்பல் 'போலீஸுக்குத் தகவல் கொடுப்போம்’ என மிரட்டி பணம், செல்போன் மற்றும் நகைகளைப் பறிப்பார்கள். சில நேரங்களில் பெண்களை பலாத்காரம் செய்வார்கள். இந்தக் கும்பலிடம் சிக்குபவர்கள் பெரும்பாலும் கல்லூரி ஜோடிகள் என்பதால், 'விஷயம் வெளியே தெரிந்தால் கேவலம்’ என நினைத்து யாரும் வெளியே சொல்வதில்லை. காவல் துறை இந்த விவகாரங்கள் அறிந்தும் எதுவும் நடவடிக்கை எடுக்காமல் ஒதுங்கிக் கொள்ளும்.

போலீஸ் கூட்டணியில் சுருளி மலை கொடூரம்

வனத் துறை - போலீஸ் - கடைக்காரர்கள் இந்த மூன்று தரப்புக்கும் பங்கு போய்விடுவதால், இந்தக்

போலீஸ் கூட்டணியில் சுருளி மலை கொடூரம்

கொள்ளை பல காலமாக எந்தப் பிரச்னையும் இல்லாமல் நடந்தது. இப்போது, இரட்டைக் கொலை நடந்து விட்டதால்தான், வெளிஉலகத்துக்கு தெரிய வந்துள்ளது!'' என்று சொன்னார்.

நடந்த கொலையைப் பற்றி, பெயர் வெளியிட வேண்டாம் என்ற கோரிக்கையோடு பேசிய போலீஸ் அதிகாரி ஒருவர், திவாகரன் வாக்குமூலத்தில் தெரிவித்த தகவல்களைச் சொன்னார்.

'நானும் எனது கூட்டாளிகளும் கஸ்தூரியின் தோழியை​யும் அவளது காதலனையும் அரை நிர்வாணமாகப் பார்த்தோம். என் கூட்டாளி ஒருத்தன் அந்தப் பெண்ணை, குகைக்குள் தூக்கிச் சென்றான். அந்தப் பையனிடம் இருந்த பணம் செல்போனை நான் பிடுங்கினேன். 'அவளை ஒன்றும் செய்யாதீங்க’ என்று காலில் விழுந்து கதறினான். என் கூட்டாளி, குகையில் இருந்து வந்தவுடன் இன்னொருவன் உள்ளே நுழைந்தான். பிறகு, வெளியே வந்த அந்தப் பெண்ணும் ''எங்களை விட்டுடுங்க அண்ணே...'' என காலில் விழுந்து கதறியவள் சொன்ன தகவல்படிதான் கஸ்தூரி இருக்கிற பக்கம் சென்றோம்.

அங்கே எழில்முதல்வனும் கஸ்தூரியும் உல்லாசமாக இருந்ததைப் பார்த்தோம். அந்தப் பையன் கழுத்தில் அரிவாளை வைத்தேன். அவன், 'வேணாம் வேணாம்’ என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, கஸ்தூரியை எங்க ஆட்கள் தூக்கிட்டுப் போனாங்க. இதைப் பார்த்து அவன் என்னை தள்ளிவிட முயற்சி செய்தான். அரிவாளை அழுத்தமாக கழுத்தில் நான் வைத்து இருந்ததால் அது, தொண்டையை அறுத்து விட்டது. ரத்தம் குபுகுபுவெனக் கொட்டியது. கொஞ்ச நேரத்தில் உயிர் போயிடுச்சு. நடந்ததை என் கூட்டாளியிடம் சொன்னேன். நாங்கள் பேசியதைப் புரிந்து கொண்ட கஸ்தூரி அலறினாள். 'கத்தாதே’ என கூட்டாளி ஒருவன் அவளைக் காலில் வெட்டினான். 'என்னை விட்டுடுங்க...’ என கையெடுத்துக் கும்பிட்டாள். அரிவாளை எடுத்து வீசினேன்... கும்பிட்ட இரண்டு கைகளும் துண்டானது. நிலைகுலைந்து சாய்ந்தாள். அவள் கத்தாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, தொண்டையைத் துணியால் இறுக்கினேன். கஞ்சா போதை வெறியில், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த கஸ்தூரியைக் கற்பழித்தேன். அப்போது, அவள் உயிர் பிரிந்தது’ என்று வாக்குமூலத்தைக் கூறியவர் அதற்குப் பிறகு நடந்தது குறித்து திவாகரன் கூறி இருப்பதையும் விவரித்தார்.

போலீஸ் கூட்டணியில் சுருளி மலை கொடூரம்

'எங்களிடம் பங்கு வாங்கும் க்ரைம் டீம் போலீஸ்காரருக்கு செல்போனில் விஷயத்தைச் சொன்னோம். அங்கேயே இருங்க வர்றேன் என்றவர், ராத்திரி வந்தார்.

போலீஸ் கூட்டணியில் சுருளி மலை கொடூரம்

  2 லட்சம் கொடுத்தால் காப்பாற்றுவதாகச் சொன்னார். சம்மதித்தோம். 'பிணம் அழுகும் வரையில் மலைப்பக்கம் யாரையும் உள்ளே விடக்கூடாது. பிணம் அழுகி விட்டால் அடையாளம் தெரியாத பிணமாகி விடும். கற்பழித்ததும் மருத்துவப் பரிசோதனையில் தெரியாது’ என்றார். சுருளி பாரஸ்ட்காரங்களை கூப்பிட்டு, 'மலைக்குள் யாரையும் விடாதீங்க. விஷயம் வெளியானால் அத்தனை பேரும் கொலை வழக்கில் சிக்கிடுவீங்க’ என மிரட்டினார்!'' என்று கூறி இருக்கிறான்.

'கஸ்தூரியைக் காணாமல் தேடிய பெற்றோர், கடமலைக்குண்டில் உள்ள தோழியிடம் விசாரித்து உள்ளனர். கஸ்தூரியின் உறவினர்கள், சுருளிமலைக்கு வந்த போது வனத் துறையினர் தடுத்து விட்டனர். பிணம் அழுகிவிட்டதை உறுதி செய்த பிறகுதான், அனுமதி கொடுத்தனர். அழுகிக் கிடந்த பிணங்களை, காணாமல் போன ஆறு நாட்களுக்குப் பிறகு உறவினர்களேதான் கண்டுபிடித்தனர். கஸ்தூரியின் தோழி கொடுத்த தகவலின் அடிப்படையில் கட்டத்தேவன் என்ற திவாகரனை உத்தமபாளையம் போலீஸார் கைது செய்தனர்.

இதுவரை 22-க்கும் மேற்பட்ட பெண்களிடம் தவறாக நடந்ததாகவும், பணம் பறித்ததாகவும் ஒப்புக்கொண்டு இருக்கிறானாம் திவாகரன். அவனுடன் சேர்ந்தவர்களை மட்டுமின்றி, அவனுக்கு ஆதரவாக இருந்த கடைக்காரர்கள், வனத் துறையினர், காவல் துறையினர் அனைவரும் ஒட்டுமொத்தமாக கைது செய்யப்பட வேண்டும்!

- இரா.முத்துநாகு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism