Published:Updated:

ச்சீச்சீ 'சிங்காரி' சென்னை!

மசாஜ் மாஃபியாக்கள்... பெண்கள் உஷார்

ச்சீச்சீ 'சிங்காரி' சென்னை!

மசாஜ் மாஃபியாக்கள்... பெண்கள் உஷார்

Published:Updated:
##~##
ச்சீச்சீ 'சிங்காரி' சென்னை!

'விபசாரத்தை ஒழிக்க முடியாவிட்டால், அதை சட்டபூர்வமாக ஆக்கிவிட வேண்டியதுதானே?’ - விதவிதமாக நடக்கும் விபசார யுக்திகளைப் பார்த்து வெறுப்பின் உச்சத்தில் உயர் நீதிமன்றம் சமீபத்தில் எழுப்பிய கேள்வி இது! காருக்குள் விபசாரம், பாருக்குள் விபசாரம், மசாஜ் சென்டரில் விபசாரம் என சிங்காரச் சென்னை, இப்போது 'சிங்காரி’ சென்னையாகவே மாறிவிட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 இதில் மசாஜ் சென்டர்களில் நடக்கும் விபசாரம் எல்லை மீறிப் போவதாகக் கவலை கொள்கிறார்கள், உண்மையான மசாஜை எதிர்பார்த்துச் செல்லும் வாடிக்கையாளர்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகை ஒருவரின் கணவர் சென்னையில் நடத்திவந்த மசாஜ் சென்டரில் வாடிக்கையாளர்களுடன் விபசாரத்தில் ஈடுபட வற்புறுத்துவதாக தாய்லாந்தைச் சேர்ந்த 15 பெண்கள், போலீஸில் புகார் அளித்தார்கள். அதற்கு சில மாதங்களுக்கு முன்பு, வளசரவாக்கத்தில் 'மசாஜ் சென்டரில் விபசாரம்’ என்று புகார் வந்ததை அடுத்து, அங்கு போலீஸார் ரெய்டு நடத்தி விபசாரத் தொழில் செய்த பெண் தாதா ஒருவர் கைது செய்யப்பட்டார். கடந்த மாதம் கோடம்பாக்கத்தில் 'தீர்க்காயுசு ஆயுர்வேதா மசாஜ் சென்டர்’ என்ற பெயரில் கேரளப் பிரமுகர் ஒருவர் நடத்திய மசாஜ்

ச்சீச்சீ 'சிங்காரி' சென்னை!

சென்டரில் விபசாரத்தில் ஈடுபட்ட பெண்களை போலீஸ் கைது செய்தது. இப்படி கைது செய்யப்பட்டவர்களில் கணிசமான பெண்கள் குடும்பப் பெண்கள் என்பதும், குடும்பத்துக்குத் தெரியாமல் ஈடுபட்டார்கள் என்பதும் அதிர்ச்சி தரும் தகவல்!

இந்த கும்பலிடம் குடும்பப் பெண்கள் எப்படிச் சிக்குகிறார்கள் என்று விபசாரத் தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டோம். ''சென்னையில் இருக்கும் பெரும்பாலான பெண்களுக்கு பியூட்டி பார்லர் என்பது அத்தியாவசியமாகிவிட்டது. பழக்கம் இல்லாத பெண்களும், உடன்பழகுபவர்களின் சிகை மற்றும் மிகை அலங்காரங்களைக் கண்டு தங்களையும் அதற்குப் பழக்கப்படுத்திக் கொள்கிறார்கள். முதலில் 'ஐ-ப்ரோ’ சீர் செய்துகொள்ள அங்கு செல்லத் துவங்கும் பெண்களை பியூட்டி பார்லர் நடத்தும் பெண்கள், பேசிப் பேசியே மசாஜ் செய்து கொள்வது வரைக்கும் இழுத்து வந்துவிடுவார்கள். அடுத்த கட்டமாக அக்கறையுடன் பேசுவது போல் அந்தப் பெண்களின் குடும்ப உள் விவகாரங்களைக் கறந்துவிடுகிறார்கள்.

தொடர்ந்து, 'மசாஜ் செய்ய கற்றுக் கொண்டால் கைத் தொழில் கற்றுக் கொண்டது போல இருக்கும்; தினமும் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாம்’ என்று ஆசைகாட்டி 'பார்ட் டைம்’ தொழிலுக்கும் இழுத்து வந்துவிடுகிறார்கள். முதலில் சில ஆயிரங்களைக் கண்ணில் காட்டுபவர்கள், பின்பு குறிப்பிட்ட நபருக்கு 'ஸ்பெஷல்’ மசாஜ் செய்தால் கணிசமான தொகை கிடைக்கும் என்று மனதைக் கரைத்து ஒரு கட்டத்தில், 'இது எல்லாம் தப்பே இல்லை’ என்று விபசாரத்தில் ஈடுபடுத்தி விடுகிறார்கள். தினசரி கஸ்டமர் வரும் நேரத்துக்கு மட்டும் இரண்டொரு மணி நேரம் வந்து போனாலே

ச்சீச்சீ 'சிங்காரி' சென்னை!

2,000 முதல்

ச்சீச்சீ 'சிங்காரி' சென்னை!

5,000 வரை கிடைப்பதால் சபலப்படும் சில குடும்பப் பெண்களும் இதில் சகஜமாகி விடுகிறார்கள்.

சமீபத்தில் வடபழனியில் ஒரு மசாஜ் சென்டரில் ரெய்டு நடத்தியபோது சிக்கிய ஆறு பெண்களில் நான்கு பேர் குடும்ப பெண்களே. கையும் களவுமாகப் பிடித்த​போது அவர்கள், எங்கள் காலில் விழுந்து, 'வீட்டுக்கு இந்த விஷயம் தெரிந்தால் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறுவழி இல்லை...’ என்று சொல்லி கழுத்தில் இருந்த தாலிச் சங்கலி வரைக்கும் கழற்றிக் கொடுக்க முன்வந்தார்கள்.

ச்சீச்சீ 'சிங்காரி' சென்னை!

குடும்பமே நாசமாகிவிடும் என்பதால், அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தோம். இவ்வளவுக்கும் அவுங்க எல்லோருமே நன்றாக படித்த பெண்கள்!'' என்றார் அவர்.

''சென்னையில் வெளியாகும் ஒரு ஆங்கில நாளிதழின் இணைப்பு இதழில் மட்டும் தினசரி சுமார் 200-க்கும் மேற்பட்ட மசாஜ் சென்டர்கள் விளம்பரங்கள் வெளி​யாகிறது. அவற்றில் பாதிக்குப் பாதி விபசாரத்தில் ஈடுபடுபவைதான்...'' என்கிறார் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் உயர் அதிகாரி. வங்கியில் மசாஜ் சென்டர் மற்றும் பியூட்டி பார்லர் நடத்த கடன்வாங்கிய அந்த சென்டர்கள் மட்டும், மாதந்தோறும் மிகச்சரியாக கடன் தொகையை செலுத்தி விடுகின்றன. இன்னும் சிலரோ கடன் காலம் முடியும் முன்பே கடனை கச்சிதமாகக் செலுத்தி விட்டார்களாம். 'எப்படி இப்படி?’ என்று அந்த அதிகாரி விசாரித்தபோதுதான் 'செய்யும் தொழிலே வேறு’ என்ற விவகாரம் அந்த அதிகாரிக்குத் தெரியவந்து... 'இத்தனை நாளும் விபசாரத் தொழிலுக்கா கடன் கொடுத்தோம்?’ என்று நொந்து போனார் அவர்!

மசாஜ் செய்வதில் ஆயில் மசாஜ், பவுடர் மசாஜ் என இரு வகை உண்டு. இதில் ஆயில் மசாஜுக்குதான் மவுசு அதிகம். அதிலேயே ஆயுர்வேதிக் ஆயிலில் ஆரம்பித்து வயாக்ரா ஆயில் வரை ஏகப்பட்ட வெரைட்டிகள் உண்டாம். மசாஜ் செய்துகொள்ளும் முன்பு இரண்டு பெண்கள் வாடிக்கையாளரின் ஒட்டு மொத்தத் துணி​யையும் உருவி, 'பப்பி ஷேம்’ ஆக்கிவிடுவார்கள். இடுப்பில் கையளவு மட்டுமே ஒரு வெள்ளைத் துணியை கட்டி விடுகிறார்கள். அவர்கள் தேய்க்கும் தேய்ப்பில் அந்தத் துணியும் சிறிது நேரத்தில் காணாமல் போய் விடும். மசாஜின் முடிவில், 'வேறு எதுவும் வேண்டுமா?’ என்று கேட்கிறார்கள். அந்த சமயத்தில், 'சரி’ என்று சொல்வதைத் தவிர வாடிக்கையாளருக்கு வேறு வழி இருக்காது. மசாஜுக்கு சுமார்

ச்சீச்சீ 'சிங்காரி' சென்னை!

1,500 தொடங்கி

ச்சீச்சீ 'சிங்காரி' சென்னை!

5,000 வரையும் விபசாரத்துக்கு

ச்சீச்சீ 'சிங்காரி' சென்னை!

5,000 முதல்

ச்சீச்சீ 'சிங்காரி' சென்னை!

10,000 வரையும் சுமார் ஒரு மணி நேரத்தில் கறந்துவிடுகிறார்கள்!

சபலப்படும் ஆண்களைவிட, குடும்பப் பெண்களே இதில் அதிகம் இழப்பவர்களாக இருக்கிறார்கள், உஷார்!

- நமது நிருபர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism