Published:Updated:

''கொள்ளை அடித்தேனா... பிராத்தல் பண்றேனா..?''

மருத்துவக் கல்லூரித் தலைவர்தான் கேட்கிறார்!

''கொள்ளை அடித்தேனா... பிராத்தல் பண்றேனா..?''

மருத்துவக் கல்லூரித் தலைவர்தான் கேட்கிறார்!

Published:Updated:
##~##
''கொள்ளை அடித்தேனா... பிராத்தல் பண்றேனா..?''

''இப்படி எல்லாமா ஏமாத்துவாங்க?'' என்று மருத்துவ உலகத்தில் குற்றம் சாட்டுகிறார்கள் டி.டி.நாயுடுவை! டி.டி. மருத்துவக் கல்லூரியின் தலைவர் டி.தீனதயாள் நாயுடுதான் அவர். திருவள்ளூர் மாவட்டம், குன்னவலத்தில் கடந்த ஓர் ஆண்டுக்கு முன்பு அவரால் துவக்கப்பட்டது, டி.டி.மருத்துவக் கல்லூரி. கடந்த மார்ச் மாதம் இந்திய மருத்துவ கவுன்சில், கல்லூரியின் ஆவணங்களைப் பரிசீலனை செய்தபோது, இங்கு 32 டாக்டர்கள், பணியாற்றுவதாக போலியான போட்டோ மற்றும் ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு கையெழுத்துப் போடப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தப் போலிப் பட்டியலில் ஓய்வுபெற்ற துணை மருத்துவக் கல்வி இயக்குநர், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியின் முன்னாள் டீன் ஆகியோரும் அடக்கம் என்பதுதான் வேதனை! 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இது குறித்து சென்னை முத்துக்குமரன் மருத்துவக் கல்லூரியில் பணிபுரியும் டாக்டர் ஜெயவேல், ''டி.டி. மருத்துவக் கல்லூரி துவக்கப்படும் முன்பு அவர்களின் மருத்துவமனையில் பணிபுரிந்தேன். சரியாக சம்பளம் தராததால், 2008-ம் ஆண்டே விலகிவிட்டேன். அப்போது நான் சமர்ப்பித்த ஆவணங்களைக்

''கொள்ளை அடித்தேனா... பிராத்தல் பண்றேனா..?''

கொண்டு, இப்போதும் பணியில் இருப்பதாகக் காட்டி இருக்கிறார்கள். பல மருத்துவமனைகளின் வெப் சைட்டுக்குள் சென்று, டாக்டர்களின் போட்டோக்களையும் கையெழுத்தையும் காப்பி செய்து, அங்கே பணிபுரிவது போல போலி ஆவணங்கள் தயாரித்து உள்ளனர்!'' என்றார் ஆவேசமாக.

''கொள்ளை அடித்தேனா... பிராத்தல் பண்றேனா..?''

ஓய்வு பெற்ற துணை மருத்துவக் கல்வி இயக்குநர் ராமசந்திர ரெட்டி, ''இப்படி ஒரு மோசடியை என் வாழ்க்கையில் பார்த்ததே இல்லை. குறிப்பிட்ட அளவு டாக்டர்கள், உள் கட்டமைப்பு வசதி இருந்தால்தான் மருத்துவக் கல்லூரிக்குக் குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஸீட் அனுமதிக்கப்படும். அதற்காக, நூற்றுக் கணக்கான டாக்டர்கள் இருப்பதாகப் போலியாகக் கணக்கு காட்டி 150 மருத்துவ ஸீட்களை அந்தக் கல்லூரி பெற்று உள்ளது. வருடத்துக்கு 150 மாணவர்கள் என்றால், ஐந்து வருடங்களுக்கு 750 மாணவர்களின் வாழ்க்கை கேள்விக்குறி ஆகும் முன்பு அந்தக் கல்லூரியைத் தடை செய்ய வேண்டும்!'' என்றார் கோபமாக. இதே போன்று ஆவணத்தில் இடம்பெற்று உள்ள நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியின் முன்னாள் டீன் டாக்டர் சரஸ்வதி, இந்த முறைகேட்டைக் கண்டித்து டி.டி. கல்லூரி மீது வழக்குத் தொடர இருக்கிறார்.

இந்தக் குற்றச்சாட்டு குறித்து தீனதயாள் கல்லூரித் தலைவர் தீனதயாளிடம் கேட்டோம். ''சிலர் மெடிக்கல் ஸீட் இலவசமா கேட்டாங்க. நான் மறுத்துட்டேன். அதனால இப்படிக் கிளப்பிட்டாங்க. அந்த டாக்டருங்க எல்லாம் என்கிட்ட வேலை பார்த்தது உண்மை. அவங்களோட டாக்குமென்ட்ஸும் உண்மை. சம்பள மும் வாங்கி இருக்காங்க...'' என்றவரிடம்,

''அவர்களுக்கு சம்பளம் கொடுத்ததற்கான ஆவணம் இருக்கிறதா?'' என்று கேட்டோம்.

''கொள்ளை அடித்தேனா... பிராத்தல் பண்றேனா..?''

''அவங்களுக்கு பேங்குல சம்பளம் போடலை. பணமாவே கையில வாங்கிட்டாங்க. இப்போ சிக்கல் வந்ததும் நாடகம் ஆடுறாங்க. எந்த டாக்டர் யோக்கியம்னு சொல்லுங்க? நான்

''கொள்ளை அடித்தேனா... பிராத்தல் பண்றேனா..?''

12,000 கோடி புராஜெக்ட்டுல தொழில் பண்றவன். நான் என்ன கொலை செய்றேனா? கொள்ளை அடிக்கிறேனா? இல்லை, பிராத்தல் பண்றேனா? செய்தி போட்டுக்குறதுன்னா தாராளமா போட்டுக்கங்க... அது என்னைப் பொறுத்த வரைக்கும் செலவு இல்லாத விளம்பரம்தான்!'' என்று போட்டுத் தாக்கினார்.

''கொள்ளை அடித்தேனா... பிராத்தல் பண்றேனா..?''

இது குறித்து விசாரணை நடத்தி வரும் தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலின் தலைவர் டாக்டர் பிரகாசம், ''இரண்டுகட்ட விசாரணை முடிந்து, டி.டி. கல்லூரியில் இருந்த ஆவணங்கள் போலியானவை என்று தெரியவந்துள்ளன. விசாரணை அறிக்கையை இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு அனுப்புவோம். அவர்கள்தான் நடவடிக்கை எடுக்க முடியும்...'' என்றார்.

சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் விஜய், ''டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்திடம் அந்தக் கல்லூரிக்கான அங்கீகாரத்தை ரத்து செய்யப் பரிந்துரைத்து உள்ளோம். இந்திய மருத்துவ

''கொள்ளை அடித்தேனா... பிராத்தல் பண்றேனா..?''

கவுன்சிலிடமும் அங்கே மாணவர் சேர்க்கையைத் தடை செய்யக் கேட்டுள்ளோம்!'' என்றார்.

இதற்கிடையே, டி.தீனதயாளின் பழைய வரலாற்றை நம்மிடம் புட்டு வைத்தார்கள். அதைக் கேட்கும் போது மலைப்பாக இருந்தது. ''தீனதயாளனனின் சொந்த ஊர் திருத்தணி அருகே ஆந்திரா எல்லையில் இருக்கும் அத்திமாஞ்சேரிப்பேட்டை. அங்கே 1986-ல் எஸ்.பி.ஐ. வங்கியில் லாரி வாங்கக் கடன் வாங்கினார். அதையும் அடைக்கவில்லை. அடுத்து, 88-ல் ரயில்வே ஒப்பந்தப் பணிகளுக்காக புரசைவாக்கம் வங்கியில் வாங்கியதையும் செலுத்தவில்லை. மெடிக்கல் ஸீட் வாங்கித்தருவதாக ஒரு மோசடி புகாரும் இவர் மீது கிளம்பியது. கடந்த 2003-ம் ஆண்டு பொறியியல் கல்லூரி தொடங்குவதாக, கார்ப்பரேஷன் வங்கியில் வாங்கிய கடனும் அப்படியே உள்ளது. அந்தப் பொறியியல் கல்லூரியில் ஏகப்பட்ட தில்லுமுல்லுகள் ஏற்பட்டதால் மாணவர் கலவரம் ஏற்பட்டு, அதுவும் இழுத்து மூடப்பட்டது.

கடந்த ஓர் ஆண்டுக்கு முன்பு மருத்துவக் கல்லூரி துவங்க அனுமதி பெற்றவர், அதற்காக தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் பெரிய அளவிலான தொகையைக் கடனாகக் கேட்டார். சில வங்கி அதிகாரிகள் உதவியுடன் அனுமதி பெற்றார். ஆனால், இவரைப் பற்றிய உண்மைகள் வெளியானதால், உதவி செய்த வங்கி அதிகாரிகள் துறைரீதியான விசாரணையில் சிக்கி இருக்கிறார்கள்...'' என்று அடுக்குகிறார்கள். அடேங்கப்பா..!

- டி.எல்.சஞ்சீவிகுமார்

படம்: ரஞ்சித்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism