Published:Updated:

'பொறுப்பு' இல்லாத அமைச்சர்கள்!

தொடர்கிறது புதுச்சேரி கலாட்டா

'பொறுப்பு' இல்லாத அமைச்சர்கள்!

தொடர்கிறது புதுச்சேரி கலாட்டா

Published:Updated:
##~##
'பொறுப்பு' இல்லாத அமைச்சர்கள்!

'வேண்டா வெறுப்புக்குப் புள்ள பெத்து, காண்டா மிருகம் என்று பெயர் வைப்பது’ போல், அமைச்சர்களை அறிவித்துவிட்டு, இன்னும் துறைகளை ஒதுக்காமல் இருக்கிறார் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி! ''பொறுப்பு ஏற்று ஒரு மாதம் கழித்து, அதுவும் அரசியல் நெருக்கடியின் காரணமாக, கடந்த 8-ம் தேதி வேண்டாவெறுப்பாக அமைச்சர்கள் பட்டியலை அறிவித்தார், ரங்கசாமி. ஆனால், இந்நாள் வரை அவர்களுக்கான துறைகளை ஒதுக்காமல் இருப்பதால் அனைத்துப் பணி களும் பாதிக்கப்பட்டு உள்ளது...'' என்று புலம்புகிறார்கள், புதுச்சேரிவாசிகள்! 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தேர்தல் முடிவு வெளிவந்து, வெற்றியைக் கொண்டாடும் முன்பே கூட்டணிக்குள் குழப்பம்! ஜெயலலிதாவின் கோபத்தை சம்பாதித்துக்கொண்ட ரங்கசாமி, அதில் இருந்து விடுபட்டு நாள், நட்சத்திரம் பார்த்து, வளர்பிறை தினத்தில்தான் அமைச்சரவை சகாக்களைத் தேர்வு செய்தார். ஐந்து பேர் கொண்ட பட்டியலை கவர்னரிடம் கொடுத்தார். ஆனால், இந்தப் பட்டியல் வெளியானதில் இருந்து ரங்கசாமிக்குப் போதாத நேரம் துவங்கியது. புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பதால், அமைச்சர்கள்

'பொறுப்பு' இல்லாத அமைச்சர்கள்!

பட்டியல் டெல்லி உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் பெறவேண்டும். அதற்காகச் சென்ற பட்டியலில் முதல்வர் ரங்கசாமி சிபாரிசு செய்த ஐந்து பேரில் சந்திரகாசு, ராஜவேலு, கல்யாணசுந்தரம், பன்னீர்செல்வம் ஆகிய நான்கு பேருக்கும் ஒப்புதல் அளித்த உள்துறை, ஐந்தாவது நபரான அசோக் ஆனந்த் பெயரில் சி.பி.ஐ. வழக்கு இருப்பதால் ஒப்புதல் அளிக்க மறுத்தது.

மேலும், ரங்கசாமியின் புதிய அமைச் சரவையில் கல்யாணசுந்தரம், பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் புதிய முகங்கள். இதனால் கட்சியில் இருக்கும் சீனியர்கள் அதிருப்தி அடைந்தனர். அதோடு, ரங்கசாமி அரசுக்கு ஆதரவு அளித்து வரும் சுயேச்சை எம்.எல்.ஏ. வி.எம்.சி.சிவக்குமார், தனக்கு நிச்சயம் அமைச்சர் பதவி கிடைக்கும் என்று காத்திருந் தார். பட்டியலில் தன் பெயர் இல்லை என்றதும், கடும் அதிருப்தி அடைந்தார். 30 எம்.எல்.ஏ-க்கள் கொண்ட புதுச்சேரியில் சுயேச்சை எம்.எல்.ஏ. வி.எம்.சி.சிவக்குமாரின் ஆதரவு இருந்தால்தான் ரங்கசாமியால் மெஜா ரிட்டியை நிரூபிக்க முடியும்.

எஞ்சி இருக்கும் ஒரே ஒரு அமைச்சர் பதவிக்கு தன் சொந்தக் கட்சிக்குள்ளேயே கடுமையான போட்டி துவங்க... இதில் எந்த ஒருவருக்கு அமைச்சர் பதவி கொடுத்தாலும் மீதம் இருப்பவர்கள் போர்க்கொடி உயர்த்துவார்கள் என்ற சூழல். இந்த இக்கட்டான நிலையில் சபாநாயகர் தேர்வு மற்றும் பட்ஜெட் தாக்கலில் ஆட்சிக்கு சிக்கல் ஏற்படலாம் என்று நினைத்தார் ரங்கசாமி. அதனால் டெல்லிக்குச் சென்று சோனியாவை மரியாதை நிமித்தம் சந்திக்கச் சென்றார். 'இது மரியாதை நிமித்தமான சந்திப்பு’ என்றாலும், தனது ஆட்சிக்கு காங்கிர ஸால் எவ்வித குடைச்சலும் வந்துவிடக் கூடாது என்பதுதான் காரணமாக இருக்கலாம் என்கிறார்கள். தென் மாநிலங்களில் ஆந்திரா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் கடும் சரிவை சந்தித்து வரும் காங்கிரஸ், ரங்கசாமியின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள வாய்ப் புள்ளது என்றும் சொல்கிறார்கள்.

'பொறுப்பு' இல்லாத அமைச்சர்கள்!

மீண்டும் ரங்கசாமியின் காங்கிரஸ் படை எடுப்பைக்கண்டு அதிர்ந்த  புதுச்சேரி காங்கிரஸ் பிரமுகர்கள், தேர்தலுக்குப் பின்பு முதல் முறையாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், முன்னாள் முதல்வர் வைத்திலிங்கம் மற்றும் முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் ரங்கசாமி அரசின் செயல்பாடுகள் குறித்துக் கண்டித்தனர். ''என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி அமைத்தால், முதியோர் உதவித்தொகை

'பொறுப்பு' இல்லாத அமைச்சர்கள்!

2,000 என்று உயர்த்தப்படும் என்று தேர்தல் அறிக்கையில் வாக்களித்த ரங்கசாமி,  

'பொறுப்பு' இல்லாத அமைச்சர்கள்!

750 என்று இருந்ததை இந்த மாதம் முதல்

'பொறுப்பு' இல்லாத அமைச்சர்கள்!

1,000 என்று உயர்த்தி உள்ளார். அதேநேரம், முதியோர் உதவித்தொகை பெறத் தகுதி இல்லாதவர்கள் என்று 8,000 பேரை பட்டியலில் இருந்து நீக்கி உள்ளார். மேலும் தினக்கூலி மற்றும் பகுதிநேர ஊழியராகப் பல்வேறு அரசுத் துறைகளில் கடந்த ஆட்சியில் பணிக்கு அமர்த்தப்பட்ட 3,000 பேரை பணியில் இருந்து நீக்கி உள்ளார். முந்தைய ஆட்சியில் பணி அமர்த்தப்பட்டவர்களை புதிதாக ஆட்சிப் பொறுப்புக்கு வருபவர்கள் நீக்கும் வழக்கம் இதுவரை புதுவை அரசியலில் இல்லாத ஒன்று. இதனால் பாதிக்கப்படப்போவது பொது மக்கள்தான்!'' என்று சாடினார்கள்.

மேலும், அமைச்சர்களுக்குத் துறை ஒதுக்காதது பற்றி, ''அவர் அமைச்சர்களுக்கு துறை ஒதுக்கலாம்; ஒதுக்காமல் இருக்கலாம். அது அவரது சொந்தக் கட்சிப் பிரச்னை. அவர் எளிய முதல்வர், நன்றாக அரசை நடத்துவார் என்ற நம்பிக்கையில்தான் மக்கள் வாக்களித்து முழு மெஜாரிட்டி அளித்துத் தெளிவான தீர்ப்பு வழங்கி உள்ளனர். அவர் சிறப்பாக, திறமையாக ஆட்சி புரிவார் என்று நம்புகிறோம்!'' என்று கிண்டலாகக் கூறியவர்கள்,

''நாங்கள் கவலைப்படுவது எல்லாம் பொது மக்களைப் பற்றிதான். எங்களின் பார்வை சட்டமன் றத்தையோ, அதிகாரத்தையோ நோக்கி அல்ல. எங்களுக்கென்று ஒரு தலைமை உண்டு. அன்னை சோனியாவின் வழிகாட்டுதலின் பேரில் காங்கிரஸ் தொடர்ந்து மக்களுக்கான கோரிக்கைகளை வலியுறுத்தி சிறந்த எதிர்க்கட்சியாகச் செயல்படும்...'' என்று கூறினார்கள்.

தனித்தோ அல்லது காங்கிரஸுடன் இணைந்தோ, எப்படி இருந்தாலும் விரைவில் அமைச்சர் களுக்குத் துறைகள் ஒதுக்கப்பட்டு, மக்கள் பணி தொடங்கவேண்டும் என்பதே புதுச்சேரி மக்க ளின் ஏகோபித்த குரல். அசைந்துகொடுப்பாரா ரங்கசாமி?

- டி.கலைச்செல்வன்

படங்கள்: ஜெ.முருகன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism