Published:Updated:

எகிறும் விபத்துகள்.. பறிபோகும் உயிர்கள்!

வேலூர் சோகம்

எகிறும் விபத்துகள்.. பறிபோகும் உயிர்கள்!

வேலூர் சோகம்

Published:Updated:
##~##
எகிறும் விபத்துகள்.. பறிபோகும் உயிர்கள்!

மிழகத்தில் தேசிய நெடுஞ்சாலையின் தூரம் அதிகம் உள்ள மாவட்டம், வேலூர். அதே போல, சாலை விபத்தில் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ள மாவட்டமும் இதுதான். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த குறைபாட்டை நீக்குவதற்காகக் குரல் கொடுக்க ஆரம்பித்திருக்கும் அணைக்கட்டு தொகுதி பா.ம.க. எம்.எல்.ஏ-வான கலையரசுவிடம் பேசினோம். ''மத்திய சுகாதாரத் துறையும், தேசிய நெடுஞ்சாலை அமைச்சகமும் இணைந்து, அப்போதைய அமைச்சர் அன்புமணியின் அறிவுறுத்தலின் காரணமாக ஒவ்வொரு 50 கிலோ மீட்டருக்கும் ஒரு நடமாடும் மருத்துவமனையை அமைக்க உத்தரவு இட்டது. அதன்படி, இன்று இந்தியா முழுவதும் நடமாடும் மருத்துவக் குழு சிறப்பாக இயங்கி வருகிறது. வேலூர் மாவட்டத்தில் மட்டும் அந்த மருத்துவக் குழு, இருக்கும் இடமே தெரியவில்லை. மாவட்டத்தின் தலைமை மருத்து​      வமனை அடுக்கம்பாறையில் உள்ளது. வேலூரைச் சுற்றி 50 கிலோ மீட்டரில் யாரேனும் விபத்தில் சிக்கினால், இங்குதான் வர வேண்டும். விபத்து நடந்தால் அங்கே உயிர்கள் போராடிக்கொண்டு இருக்கும். உயிர் காக்கும் நேரத்தை ஆங்கிலத்தில் 'கோல்டன் ஹவர்ஸ்’ என்று சொல்வார்கள். அதாவது, விபத்து நடந்த 30 நிமிடங்களில் அவர்களுக்கு முதலுதவி அளித்து மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல வேண்டும். ஆனால், வேலூர் மாவட்டத்தில் அதுக்கு வாய்ப்பே இல்லை. கடந்த மூன்று மாதங்களில் மட்டுமே 40 உயிர்களுக்கு மேல் பலியாகி இருப்பதைப் பார்த்தாலே அதிர்ச்சியாக இருக்கிறது. தேசிய நெடுஞ்சாலையில் வாலாஜா, பள்ளிகொண்டாவைத் தவிர வேறு எந்த மருத்துவம​னையும் அருகில் இல்லை. அப்புறம் எப்படி விபத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்ற முடியும்? எங்களைப் பொறுத்தவரை ஆட்சியில் இருக்கும் அ.தி.மு.க. அரசு இதுவரை நல்ல விதமாகவும், ஏழைகளை மனதில் கொண்டும் திட்டங்கள் தீட்டுகிறது. இதைப் போலவே, நெடுஞ்சாலைகளில் மருத்துவமனைகளை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். அப்போதுதான் உயிர் இழப்புகளைத் தடுக்கமுடியும்'' என்று அரசுக்கு கோரிக்கை வைத்தார்.

எகிறும் விபத்துகள்.. பறிபோகும் உயிர்கள்!
எகிறும் விபத்துகள்.. பறிபோகும் உயிர்கள்!

சுகாதாரத் துறை அமைச்சரும், வேலூர் தொகுதி எம்.எல்.ஏ-வுமான டாக்டர் விஜய் கவனத்துக்கு இந்த விஷயத்தைக் கொண்டுபோனோம்.

''இப்போது இருக்கும் சூழ்நிலையில், விபத்துகளைத் தடுக்க டிரைவர்களுக்கும், பொது மக்களுக்கும் விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகளை நடத்துகிறோம். அதே நேரம், ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்​கையை அதிகப்படுத்த உள்ளோம். '50 கிலோ மீட்டருக்கு ஒரு மருத்து​வமனை என்பது இப்போது உள்ள சூழ்நிலையில் முடியுமா?’ என தெரியவில்லை. இருந்தாலும், இந்த விஷயத்தை முதல்வர் கவனத்​துக்குக் கொண்டுசெல்வேன். நடமாடும் மருத்துவ மருத்துவமனைகளை முழுமையாக செயல்படும்படி முடுக்கி விடுவோம். நானும் டாக்டர் என்பதால், கோல்டன் ஹவர்ஸ் எவ்வளவு முக்கியம் என்பது எனக்கும் தெரியும்!'' என்றார்.

விபத்து தற்செயலாக நடப்பதாக இருக்கலாம். அதனைத் தடுத்து நிறுத்த முயற்சிப்பதும், விபத்துகள் நேர்ந்தபின் தேவையான நடவடிக்கை எடுப்பதிலும் சுணக்கம் வேண்டாமே!

- கே.ஏ.சசிகுமார், படங்கள்: ச.வெங்கடேசன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism