Published:Updated:

மூடப்பட்ட பள்ளி... நடுத்தெருவில் மாணவர்கள்!

சிக்கலில் சீர்காழி லயன்ஸ் கிளப்

மூடப்பட்ட பள்ளி... நடுத்தெருவில் மாணவர்கள்!

சிக்கலில் சீர்காழி லயன்ஸ் கிளப்

Published:Updated:

சிறிய கீற்றுக் கொட்டகையில் பள்ளி ஆரம்பித்து, அதன் லாபத்தால் இன்று பல மாடி கட்டடங்களைக் கட்டி கல்வித் தந்தைகளாக பலர் உலா வரும் தமிழ்நாட்டில் தான், நடத்தி வந்த மெட்ரிக் பள்ளியை நடத்த முடியாமல் மூடிவிட்டது லயன்ஸ் கிளப்! 

மூடப்பட்ட பள்ளி... நடுத்தெருவில் மாணவர்கள்!

நாகை மாவட்டம் சீர்காழியில் 1984-ம் ஆண்டு சர்வதேச சங்கத்தின் நிதியைப் பெற்று, 'ஏழை மாணவர்களும் மெட்ரிக் கல்வி பெற வேண்டும்’ என்ற உண்மையான அக்கறையில் ஆரம்பிக்கப்பட்டது லயன்ஸ் கிளப் மெட்ரிகுலேஷன் பள்ளி. மிகக் குறைந்த கட்டணம் என்பதால், 400-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை ஆர்வத்துடன் அந்தப் பள்ளியில் சேர்த்தார்கள். பள்ளியின் செயல்பாடுகளைப் பார்த்த கடைக்கண் விநாயகநல்லூர் எஸ்டேட் நிர்வாகத்தினர், பல லட்சம் மதிப்புள்ள 10 ஏக்கர் நிலத்தை வெறும்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மூடப்பட்ட பள்ளி... நடுத்தெருவில் மாணவர்கள்!

3 லட்சத்துக்குக் கொடுத்தனர். அதில் கட்டடங்கள் கட்டி பல வருடங்களாக நல்ல முறையில் நடந்து வந்த பள்ளியை, தற்போது எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் மூடி, பெற்றோர்களைத் தவிக்கவைத்து உள்ளது பள்ளி நிர்வாகம்.

மூடப்பட்ட பள்ளி... நடுத்தெருவில் மாணவர்கள்!

கடந்த 20-ம் தேதி பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்ட செய்தி கேட்டு பள்ளிக்கு விரைந்தோம். ஸ்வேதா, கயல்விழி என்ற இரண்டு பெண் குழந்தைகளைக் கையில் பிடித்துக்கொண்டு பரிதாபமாக நின்ற கோவிந்தராஜன், ''என்ன அநியாயம் சார் இது? போன வருடம் தேர்வு முடிந்தவுடன் சொல்லி இருக்கலாம். இல்லை, எல்லோருக்கும் ரிசல்ட் அனுப்பும்போது சொல்லி இருக்கலாம். அதைவிட்டு, '15-ம் தேதி ஸ்கூல் திறக்கும்போது வேன் வரவில்லையே’ என்று நாங்கள் வந்து பள்ளியில் கேட்கும் போதுதான், 'பள்ளியை மூடப்போகிறோம்’ என்று அலட்சியமாக பதில் சொல்கிறார்கள். இப்படிப்

மூடப்பட்ட பள்ளி... நடுத்தெருவில் மாணவர்கள்!

பெற்றோர் ஒவ்வொருவராக வந்து கேட்டவுடன், பள்ளி நிர்வாகிகள் 17-ம் தேதி பெற்றோர்கள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து, 'பள்ளி நஷ்டத்தில் இயங்குகிறது, அதனால் மூடுகிறோம்’ என்று தன்னிலை விளக்கம் சொல்கிறார்கள். எல்லாப் பள்ளிகளிலும் அட்மிஷன் முடிந்துவிட்ட இந்த நேரத்தில், நாங்கள் எங்கேபோய் பிள்ளைகளைச் சேர்ப்பது?'' என்று கொந்தளித்தார் கோவிந்தராஜன்.

இங்கு வேலை பார்த்த பள்ளி முதல்வர், 15 ஆசிரியர்கள் மற்றும் 10-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் அத்தனை பேரின் எதிர்காலமும் கேள்விக்குறியே!

மூடப்பட்ட பள்ளி... நடுத்தெருவில் மாணவர்கள்!

''அங்கே சொல்லி இருக்கோம்... இங்கே சொல்லி இருக்கோம்னு சொல்லி சமாளிக்கிறாங்களே தவிர, எந்தப் பள்ளிக்கூடத்திலேயும் எங்க குழந்தைகளை சேர்த்துவிடறதைப் பத்தி இவங்க நடவடிக்கை எடுக்கவே இல்லை. இவங்க மூடினது நஷ்டத்தாலா... இல்லை, வேற ஏதாவது உள் காரணம் இருக்கான்னும் தெரியலை!'' என்றார் மூன்றாம் வகுப்பு படிக்கும் ஹரிஜா பீவியின் தந்தை புகாரி.

''அப்படி என்ன உள் காரணம் இருக்க முடியும்?'' என்று பள்ளி வட்டாரத்திலும், லயன்ஸ் கிளப் வட்டாரத்திலும் விசாரித்தோம். ''பள்ளிக்கூடத்தில் தற்போது 96 மாணவர்கள்தான் படிக்கிறார்கள். அதில் பாதி பேர் ஃபீஸ் கட்டாமல் இருக்கிறார்கள். தனியார் பள்ளிக்கூடம் என்றால் அவர்களின் நிர்ப்பந்தத்துக்குப் பயந்து கட்டணம் கட்டும் பெற்றோர், இங்கு கொஞ்சம் அலட்சியமாகவே இருக்கிறார்கள். ஆனால், அது மட்டும் பள்ளியை மூடக் காரணம் இல்லை. இந்தப் பள்ளியை, இங்கு உள்ள அறக்கட்டளை பிரமுகர் ஒருவரிடம், தற்போது

மூடப்பட்ட பள்ளி... நடுத்தெருவில் மாணவர்கள்!

பள்ளி நிர்வாகப் பொறுப்பில் இருக்கும் ஒருவர் விலை பேசி இருப்பதாகத் தகவல்கள் கசிகின்றன...'' என்கிறார்கள். விலை பேசி இருக்கும் அந்த நபர் கேட்டுக்கொண்டதன் பின்னணியில்தான் பள்ளி மூடப்படுகிறதாம்.

பள்ளியின் நிர்வாகக் குழு தலைவர் சுரேஷ்சந்த் ஜெயினை சந்தித்து இது பற்றிக் கேட்டோம். ''பள்ளியை மூடுவதற்கு நஷ்டம் மட்டும்தான் காரணம். கடந்த நான்கு ஆண்டு களாகவே வருடத்துக்கு

மூடப்பட்ட பள்ளி... நடுத்தெருவில் மாணவர்கள்!

2 லட்சம் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டது. அதையும் ஏற்றுக்கொண்டுதான் தொடர்ந்து நடத்தி னோம். 'இனியும் நடத்த முடியாது’ என்று பள்ளி நிர்வாகக் குழு கூடி முடிவு எடுத்த பின்னர்தான் மூடுகிறோம். அதனால், பள்ளியில் படித்த மாணவர்களை அப்படியே விட்டுவிட மாட்டோம். சீர்காழி நகரில் இருக்கும் நான்கு முக்கியப் பள்ளிகளில் பேசி இருக்கிறோம். நிச்சயமாக இந்த வாரக் கடைசிக்குள் அந்தப் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்த்துவிடுவோம்!'' என்று உத்தரவாதம் கொடுத்தவரிடம், ''பள்ளியை விலை பேசிவிட்டீர் களாமே?'' என்று கேட்டோம். ''அப்படி எதுவும் இல்லை. இந்த இடம் தொடர்ந்து லயன்ஸ் கிளப் வசம்தான் இருக்கும். இதில் மருத்துவமனை போன்ற மக்கள் நலனுக்கான திட்டங்கள் எதையாவது கொண்டுவரத் திட்டம் இட்டு இருக்கிறோம். நிச்சயம் அடுத்தவரிடம் கொடுக்க மாட்டோம்!'' என்று இன்னொரு உத்தரவாதத்தையும் கொடுத்தார்.

லயன்ஸ் கிளப் மேல் மக்கள் மிகுந்த நம்பிக்கைவைத்து இருக் கிறார்கள். ஆகவே, மீண்டும் பள்ளியைத் திறக்க ஆவன செய்ய வேண்டும்!

- கரு.முத்து

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism