Published:Updated:

கலர் டி.வி. கையாளும் கட்டணத்தில் மோசடியா?

புகார் கிளப்பும் தஞ்சை அலுவலர்கள்

கலர் டி.வி. கையாளும் கட்டணத்தில் மோசடியா?

புகார் கிளப்பும் தஞ்சை அலுவலர்கள்

Published:Updated:
##~##
கலர் டி.வி. கையாளும் கட்டணத்தில் மோசடியா?

'கடந்த தி.மு.க. ஆட்சியின் சாதனைத் திட்ட மாகச் சொல்லப்பட்ட இலவச கலர் டி.வி. கொடுக்கப்பட்டதில், லட்சக்கணக்கான ரூபாய் மோசடி நடந்துள்ளது’ என்று ஒரு குபீர் புகார்! 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்து இருக்கும் கிராம நிர்வாக அலுவலர் கள் சங்கத்தினரை சந்தித்தோம்.

''தமிழகம் முழுவதும் 2006-ம் ஆண்டு முதல் கடந்த ஜனவரி மாதம் வரை இலவச கலர் டி.வி-க்கள் கொடுக்கப்பட்டன. இதில், தஞ்சாவூர் வட்டத்தில் கிராமப்புறங்களில் 70,000 டி.வி-க்களும், நகர்ப்புறங்களில் 75,000 டி.வி-க்களும் கொடுக்கப்பட்டன. அப்போதைய தமிழக அரசு டி.வி-க்களை ஏற்றுவதற்கும் இறக்கிவைப்பதற்கும், தனியாக நிதி ஒதுக்கீடு செய்தது. அந்தத் தொகையை கிராம நிர்வாக அலுவலர்களிடம் கொடுக்க வேண்டும். இந்த விதிகளைப் பின்பற்றி திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஒரு டி.வி-க்கு

கலர் டி.வி. கையாளும் கட்டணத்தில் மோசடியா?

10 வழங்கப்பட்டது. ஆனால், தஞ்சாவூர் வட்ட அலுவலகத்தில் அந்தத் தொகையில் முறைகேடுகள் நடந்து உள்ளன. ஏற்றி, இறக்குவதற்குக் கூலியாக 2010-11-ம் ஆண்டுக்கு

கலர் டி.வி. கையாளும் கட்டணத்தில் மோசடியா?

அரசாங்கத்திடம் இருந்து

கலர் டி.வி. கையாளும் கட்டணத்தில் மோசடியா?

3.50 லட்சம் மட்டுமே வந்துள்ளது. தற்போது இதில் பாதியை, அதாவது ஒரு டி.வி-க்கு

கலர் டி.வி. கையாளும் கட்டணத்தில் மோசடியா?

5 மட்டும் கொடுப்பதாகத் தெரிவிக்கின்றனர். ஏற்றி இறக்குவதற்குத் தனியாக நிதி உண்டு என்கிற விஷயமே எங்களுக்கு ஆரம்பத்தில் சொல்லப்படவில்லை. ஒரு டி.வி-க்கு

கலர் டி.வி. கையாளும் கட்டணத்தில் மோசடியா?

25 என ஒதுக்கப்பட்டு உள்ளது என்று அரசு அறிக்கையில் உள்ளது என்பதை தகவல் அறியும் சட்டத்தின் மூலமாகத்தான் தெரிந்துகொண்டோம். இது டி.வி. அடுக்கிவைக்கப்படும் அறை பாதுகாப்பு, ஏற்றி இறக்குவதற்கு, டோக்கன் அச்சிடுவதற்கு, ரிஜிஸ்டர் மற்றும் விளம்பரங்களுக்கு... எனப் பலவற்றுக்குமாக ஒதுக்கப்பட்ட தொகை. இதில் எங்களுக்குச் சேர வேண்டிய பணத்தை மட்டும் தரவில்லை. ஒரு டி.வி-க்கு என்று பார்க்கும்போது மிகச் சிறிய தொகைதான். ஆனால், தஞ்சாவூர் வட்டத்தில் மட்டும் 1,45,000 டி.வி-க்கள் என்றால், மாவட்டம் முழுவதும் எவ்வளவு என்று நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள். அதனால் உடனே விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்!'' என்று கொந்தளித்தனர்.

கலர் டி.வி. கையாளும் கட்டணத்தில் மோசடியா?

இந்தக் குற்றச்சாட்டு குறித்து துணை ஆட்சியர் (வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி பிரிவு) பழனியம் மாளிடம் கேட்டபோது, ''அரசாங்கமே, தான் அறிவித் தபடி

கலர் டி.வி. கையாளும் கட்டணத்தில் மோசடியா?

25 கொடுக்காமல்,

கலர் டி.வி. கையாளும் கட்டணத்தில் மோசடியா?

10 மட்டுமே கொடுத்தது. இதில்

கலர் டி.வி. கையாளும் கட்டணத்தில் மோசடியா?

5 பில் அச்சடிப்பது போன்ற கலெக்டர் அலுவலக வேலைகளுக்கும், மீதம்

கலர் டி.வி. கையாளும் கட்டணத்தில் மோசடியா?

5 கிராம நிர்வாக அலுவலர்களுக்கும் கொடுக்கப்பட்டது!'' என்றார்.

தஞ்சை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரனிடம் கேட்டபோது, ''புதிதாகப் பொறுப்பு ஏற்று இருப்பதால், அந்தப் புகார் கடிதம் என் கவனத்துக்கு வரவில்லை. உடனடியாக அதை விசாரணை செய்கிறேன். தவறு நடந்திருக்கும் பட்சத்தில், கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்!'' என உறுதி அளித்தார்.

- சி.சுரேஷ்

படங்கள்: கே.குணசீலன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism