Published:Updated:

குழந்தை வரம் தரும் இளநீர்!

தஞ்சை நம்பிக்கை

குழந்தை வரம் தரும் இளநீர்!

தஞ்சை நம்பிக்கை

Published:Updated:
##~##
குழந்தை வரம் தரும் இளநீர்!

ஞ்சை மாவட்டம் பேராவூரணிக்கு அருகே உள்ளது ஆணைக்காடு என்ற குக்கிராமம். ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் கூட்டம் கூட்டமாக மக்கள், கடந்த 17 மற்றும் 18-ம் தேதிகளில் இங்கு குவிந்தனர். காரணம்... குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், இங்கு வந்து இளநீர் குடித்தால்... அடுத்த ஆண்டே குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை! 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அப்படி என்ன மகத்துவம் அந்த கிராமத்து இளநீருக்கு? ஆணைக்காடு கிராமத்துக்குச் சென் றோம். கிட்டத்தட்ட மூன்று கி.மீ. நீளத்துக்கு வரிசை நின்றது. மூன்று இடங்களில் கார் பார்க்கிங். வழி எங்கும் இளநீர்க் கடைகள்.  கூட்டத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு இருந்த குமார் மற்றும் ராஜாங்கத்திடம் விசாரித்தோம். 'சுந்தரராஜன் - வெள்ளையம்மாள் தம்பதிக்கு பல வருஷத்துக்கு முன்னாடி ஆண், பெண் என இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. அதில் பெண் குழந்தை லட்சுமி நாலு வயசு இருக்கும்போது, அம்மை நோய் வந்து இறந்துவிட்டது. அவங்க வயல்காட்டுலேயே லட்சுமியை அடக்கம் செஞ்சுட்டாங்க. ஒரு வருஷம் கழிச்சு வெள்ளையம்மாள் கனவுல லட்சுமி வந்து, 'என் நினைவு நாளில் என்னைக் கும்பிட்டு இளநீர் குடிச்சா... அவங்க வயித்துல நான் அவதரிப்பேன்’னு சொல்லி மறைஞ் சுருச்சு. அடுத்த நினைவு நாளில், நீண்ட நாளா குழந்தை இல்லாத உறவினர் ஒருவரை இளநீர் குடிக்கவைச்சாங்க. அடுத்த மாதமே அவங்க கர்ப்பமாகி, நல்ல முறையில் குழந்தையும் பெத்தெடுத்தாங்க. இது கொஞ்சம் கொஞ்சமாப் பரவிடுச்சு. சிங்கப்பூர், மலேசியாவில் இருந்தெல்லாம் இப்போ இங்க வர ஆரம்பிச்சுட்டாங்க. இந்த அளவுக்குக் கூட்டத்தை நாங்களே எதிர்பார்க்கலை...'' என்றனர்.

குழந்தை வரம் தரும் இளநீர்!

'லட்சுமி’ வீட்டுக்குள் சென்றோம். அந்த ஓட்டு வீட்டின் பின்புறம் இருக்கும் வேப்பமரத்தில் பலர் தொட்டில்கள் கட்டி இருந்த னர். தம்பதிகள் அதைச் சுற்றி வந்து சுந்தரராஜனிடம் விபூதி வாங்கிக் கொள்கின்றனர். பின்னர், தாங்கள் வாங்கி வந்திருக்கும் இளநீரில் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து, அதில் விபூதியையும் கலந்து குடித்தனர். லட்சுமி அடக்கமான இடத்தையும் சுற்றி வந்து வழிபடு கின்றனர். ஆரம்பத்தில்

குழந்தை வரம் தரும் இளநீர்!

20-க்கு விற்கப்பட்ட இளநீர், நேரம் செல்லச் செல்ல,

குழந்தை வரம் தரும் இளநீர்!

200 வரை விலை உயர்த்தப் பட்டது.

குழந்தை வரம் தரும் இளநீர்!

சிவகாசியில் இருந்து வந்திருந்த கிருஷ்ணகுமார் - நாகலெட்சுமி ஜோடியிடம் பேசினோம். 'எங்களுக்குக் கல்யாணம் ஆகி 15 வருஷம் ஆயிடுச்சு. நாங்க பாக்காத வைத்தியம் இல்லை. எங்களுக்கு குழந்தை வரம் கிடைச்சா... வாழ்நாள் முழுக்க ஆணைக்காட்டுக்கு நன்றியோட இருப்போம்!'' என்று உணர்ச்சிவசப்பட்டனர்.

மகப்பேறு மருத்துவத்தில் 40 வருடங்கள் அனுபவம் கொண்ட திருத்துறைப்பூண்டி மருத்துவர் தமிழரசி, 'இளநீர், 100 சதவிகிதம் தூய்மையான இயற்கை பானம். உடலுக்குக் குளிர்ச்சியானது. ஆனால், இளநீர் குடித்தால் குழந்தை உண்டாகும் என்பது மருத்துவ ரீதியாக சாத்தியமே இல்லை!'' என்றார்.

ஆயிரம் பெரியார்கள் தோன்றினாலும், நம்மவர்கள் திருந்த மாட்டார்கள்!

- சி.சுரேஷ், படங்கள்: கே.குணசீலன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism