Published:Updated:

கண்ணீர்... கடிதம்... மரணம்!

சேலம் பள்ளி சோகம்

கண்ணீர்... கடிதம்... மரணம்!

சேலம் பள்ளி சோகம்

Published:Updated:
##~##
கண்ணீர்... கடிதம்... மரணம்!

சிரியர்களின் கோபம், கண்டிப்புகளைத் தாங்க முடியாமல் மனம் உடைந்து, மாண வர்கள் தற்கொலை செய்வது அதி கரித்து வருகிறது. சமீபத்திய அதிர்ச்சி சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி அரசினர் மேல்நிலைப் பள்ளி யில் பிளஸ் டூ படித்து வந்த மாணவன், சீனிவாசனின் மரணம். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஏழு பக்கத்துக்கு விலாவாரியாகக் கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு தூக்கில் தொங்கியிருக்கிறான் அந்த மாணவன். அந்தக் கடிதத்தில், ''என் மரணம் தானாக நடந்தது என்று கூற மாட்டேன். சிலரின் மிரட்டலால் நடந்தது. தமிழ் ஆசிரியர் இராமலிங்கம், இயற்பியல் ஆசிரியர், கணித ஆசிரியர் செந்தில், வேதியியல் ஆசிரியர் ஆகியோர் எனக்கு நெருக்கடி கொடுத்தார்கள். கடந்த 16-ம் தேதி கணித ஆசிரியர் போர்டு முழுவதும் கணக்கை எழுதிப் போட்டு விட்டு, எழுதிக் கொள்ளுங்கள் என சொன் னார். நான் எழுந்து நின்று, 'சார் எனக்கு எதுவுமே புரியவில்லை. ஸ்டெப் பை ஸ்டெப்பா சொல்லிக் கொடுங்க’ன்னு கேட்டேன். ஆனா,

கண்ணீர்... கடிதம்... மரணம்!

அவர் கோபமா போயிட்டார். அதனால மாணவர்கள் எல்லோருமா சேர்ந்து தலைமை ஆசிரியர் கிட்ட விஷயத்தைச் சொன்னோம்.

மறுநாள் கெமிஸ்டரி ஆசிரியர் என்னைக் கூப்பிட்டு மிரட்டினார். 'கணக்கு வாத்தியார் மேல கம்ப்ளைன்ட் பண்றியா’ன்னு ஒவ்வொரு சாரும் என்னைக் கூப்பிட்டு மிரட்டினாங்க. தமிழ் ஐயா இராமலிங்கம், 'நீ என்ன பெரிய ரவுடியா? இது என்ன காலேஜ்னு நினைச்சியா? இது அரசுப் பள்ளி. உனக்கு புரியலன்னா வேற ஸ்கூலுக்குப் போயிடு’ என்றார். 'டி.சி-யில் 'பேட்’ என்று எழுதிக் கொடுத்திடுவோம். வேற எங்கேயும் சேர முடியாது. பிராக்டிகல் மார்க் எங்க கையிலதான் இருக்கு’ன்னு மிரட்டினார். அரசு பள்ளின்னா கேள்வி கேட்கக் கூடாதா?

எப்படியாவது என் மரணத்தின் மூலம் அரசு பள்ளியில் ஒரு சிறு மாற்ற மாவது ஏற்படாதா? திறமையான ஆசிரியர்கள் நிறையப் பேர் அரசு வேலையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். மேல் நிலைக் கல்விக்கு தகுதியான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். இறுதியாக என் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்றால், என் பெற்றோர் எப்போதும் போல இருக்க வேண்டும்... அழக் கூடாது!’ என்று கண்ணீரில் நனைந்து முடிகிறது அந்தக் கடிதம்.

கண்ணீர்... கடிதம்... மரணம்!

சீனிவாசனின் வீட்டுக்குப் போனோம். வீட்டு வாசலில் அமர்ந்திருந்த சீனிவாசனின் அப்பா சேகர், ''நான் கட்டட வேலை பார்த்துட்டு இருக்கேன். என் பொண்டாட்டி விமலா காய்கறி வியாபாரம் செய்றாங்க. எங்களுக்கு மூன்று குழந்தைகள். சீனிவாசன் கடைசிப் பையன். 10-ம் வகுப்பில் 409 மார்க் வாங்கினான். 17-ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு வேலைக்குப் போயிட்டு வீட்டுக்கு வந்தேன். சீனி தூங்கிட்டு

கண்ணீர்... கடிதம்... மரணம்!

இருந்தான். எப்பவும் 10 மணிக்கு மேலதான் தூங்குவான். என்ன இப்பவே தூங்கிட்டான்னு கேட்டேன். ஸ்கூல்ல இருந்து சீக்கிரமே வந்துட்டான். சாப்பிடாமக்கூட அப்படியே படுத்துட்டான்னு அவுங்க அம்மா சொன்னா. அதுக்குப் பிறகு நான்தான் அவனை எழுப்பி சாப்பிட வைச்சேன். சாப்பிட்டு ரொம்ப நேரம் ஏதோ எழுதிட்டு இருந்தான். நாங்க தூங்கிட்டோம். மறுநாள் சனிக்கிழமை நாங்க வேலைக்குப் போயிட்டோம். திரும்பிவந்து பார்க்கும்போது தூக்குல தொங்கிட்டு இருந்தான்...'' என்று ஆற்றாமையுடன் சொன்னார்.

பனமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்குப் போனோம். தலைமை ஆசிரியர், ''இந்த விவகாரம் தொடர்பாக நான் எதுவும் பேசக் கூடாது.

கண்ணீர்... கடிதம்... மரணம்!

நீங்க எதுவாக இருந்தாலும் மாவட்டக் கல்வி அதிகாரியிடம் பேசிக்கோங்க..'' என்று சொல்லி அனுப்பினார்.

சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராஜ ராஜனை சந்தித்தோம். ''பனமரத்துப்பட்டியில் நடந்த சம்பவத்துக்காக கணக்கு ஆசிரியர் செந்திலை கைது செய்து இருக்கிறார்கள். மற்ற மூன்று ஆசிரியர்களும் தலைமறைவாகி விட்டார்கள். துறை ரீதியான விசாரணையும் நடந்து வருகிறது. மாணவன் சீனிவாசன் உணர்ச்சி வசப்பட்டு தவறான முடிவெடுத்து விட்டார். மாணவர்களுக்கு இனி எந்த பிரச்னை இருந்தாலும் என்னிடம் நேரடியாகவே 9443333135 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்!'' என்று சொன்னார்.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சேலம் மாவட்டத்தில் 3 மாணவர்களும், நாமக்கல் மாவட்டத்தில் 4 மாணவர் களும் தற்கொலை செய்து இருக்கிறார்கள். அதிக மார்க் வாங்க வைக்க வேண்டும் என்பதற்காக தனியார் பள்ளி நிர்வாகம் கொடுத்த டார்ச்சரினால்தான் இந்த தற்கொலைகள் நடந்துள்ளது. அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் காட்டும் அலட்சித்துக்கும், தனியார் பள்ளிகளில் அளவுக்கு அதிகமாக காட்டும் கெடுபிடிகளுக்கும் அரசு உடனடியாக கிடுக்கிப்பிடி போட வில்லை என்றால் மாணவர்களின் மரணம் தொடர்கதையாகி விடும்.

- வீ.கே.ரமேஷ்

படங்கள்: எம்.விஜயகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism