Published:Updated:

மலை ரயிலுக்கு ஆபத்து?

ஊட்டியில் அதிர்ச்சி போராட்டம்

மலை ரயிலுக்கு ஆபத்து?

ஊட்டியில் அதிர்ச்சி போராட்டம்

Published:Updated:
##~##
மலை ரயிலுக்கு ஆபத்து?

ர்வதேச சுற்றுலாப் பயணிகளை தமிழகம் நோக்கிப் படையெடுக்க வைக்கும் பெருமை ஊட்டிக்கு உண்டு. அடர் வனத்தினுள் புகுந்து செல்லும் ஊட்டி மலை ரயிலுக்காகவே உலகின் சந்துபொந்துகளில் இருந்து எல்லாம் மக்கள் புறப்பட்டு வருகிறார்கள். யுனெஸ்கோ அமைப்பால், 'உலகப் பாரம்பரியச் சின்னம்’ என அறிவிக்கப்பட்ட இந்த மலை ரயிலைக் காக்கக் கோரி, கடந்த சில நாட்களாக தொடர் போராட்டங்கள். சமீபத்தில் குன்னூர் ரயில் நிலையத்தின் முன்பாக முற்றுகைப் போராட்டம் நடந்தது. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

போராட்டத்தை முன்னின்று நடத்திய 'பாரம்பரிய நீராவி ரதம்’ அறக்கட்டளை நிறுவனரான நடராஜன்''உலக அதிசயத்தில் ஒன்றாக சேர்க்கப்படவேண்டிய பெருமை உடையது இந்த மலை ரயில். ஆனால், ரயில்வே நிர்வாக மும், அரசாங்கமும் இந்த ரயிலை சீர்கெடுத்து வருகிறார்கள். கடந்த ஆறு மாதங்களில் மட்டும் மேட்டுப்பாளையம் - குன்னூர் மார்க்கத்தில் 45 நாட்கள் இந்த ரயில் கேன்சல் ஆகிவிட்டது. அப்படியே புறப்பட்டுப் போனாலும் நடுக்காட்டில் நின்றுவிடும். ரயிலின் மோசமான இன்ஜின்தான் இதுக்குக் காரணம். 1899-ம் ஆண்டு இந்த ரயில் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டது முதல், நிலக்கரியை எரிபொருளாகப் பயன்படுத்தி நீராவி மூலமாக ஓடியது. அப்போது பிரச்னைகள் வரவில்லை. சமீபத்தில் பர்னஸ் ஆயிலுக்கு மாற்றிய தில் இருந்துதான் மலையேற முடியாமல் முடங்கி விடுகிறது ரயில்.

மலை ரயிலுக்கு ஆபத்து?

நிலக்கரிப் பயன்பாட்டை நிறுத்தியதும், எதிர்ப்புக்குரல் எழுந்தது. ஆனால், அதை அலட்சியம் செய்தது

மலை ரயிலுக்கு ஆபத்து?

ரயில்வே நிர்வாகம். 'நிலக்கரியைப் பயன்படுத்தினால் அதிகப் புகை வெளியேறி நீலகிரி வனம் மாசுபடுது’ன்னு காரணம் சொல் கிறார்கள். ஆனால், உண்மையில்... நிலக்கரி மூலமாக ஏற்படும் மாசை விட பர்னஸ் ஆயில் மூலமாகத்தான் அதிகக் கேடு உருவாகிறது என்று வல்லுநர்கள் சொல்கிறார்கள். இப்போதைக்கு அடிக்கடி ரயிலை ரத்து செய்பவர்கள், நிரந்தரமாக இதைத் தடை செய்து விடலாம் என்ற பயத்தில்தான் போராட் டங்கள் நடத்துகிறோம்...'' என்று பதறினார்.

நீலகிரி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளரான பத்ரி ''ரயில்வேயில் போதுமான பணியாளர்களே இல்லை. மத்திய அரசாங்கத்தோட கவனத்துக்கு இதைக் கொண்டு போயும் எந்த பலனுமில்லை. சுவிட்சர்லாந்து நாடு, பழைய நீராவி இன்ஜின்களுக்கு பதிலா புதிய நீராவி இன்ஜின்களைத் தர முன்வந்துச்சு. ஆனா மத்திய அரசு அதை கண்டுக்காம மறுத்துட்டாங்க...'' என்கிறார் வேதனையோடு.

ரயில்வே நிர்வாகத் தரப்பில் பேசியபோது, ''நிலக்கரியால் மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை ரெண்டு மார்க்கத்துலேயும் ரயில் இயங்க ஒரு நாளைக்கு 4 டன் நிலக்கரி தேவைப்படுகிறது. இதை சேமிப்பது பெரிய சுமையாக இருக்கிறது. அதனால்தான் பர்னஸ் ஆயிலுக்கு மாறினோம். பெருமைமிக்க இந்த மலை ரயிலை நிறுத்தி வைப்பதில் எங்களுக்கும் சந்தோஷம் இல்லை. சுற்றுலா சந்தோஷத்துக்கு நிகராக, பயணிகள் பாதுகாப்பு முக்கியம் இல்லையா அதனால்தான் நிறுத்திவைக்கிறோம். மொத்தப் பிரச்னையும் கூடிய விரைவில் சரிசெய்யப்படும்...'' என்கிறார்கள்.

அடுத்த சீஸனுக்காவது சிக்கல் இல்லாத பயணம் கிடைக்கட்டும்.

- எஸ்.ஷக்தி

படங்கள்: ரா.கலைச்செல்வன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism