Published:Updated:

''முடக்கப்பட்டதா தேவர் ஆய்வு?''

ஃபார்வர்ட் பிளாக் பரபர குற்றச்சாட்டு

''முடக்கப்பட்டதா தேவர் ஆய்வு?''

ஃபார்வர்ட் பிளாக் பரபர குற்றச்சாட்டு

Published:Updated:
##~##
''முடக்கப்பட்டதா தேவர் ஆய்வு?''

டந்த 1995-ல் சென்னை சேமியர்ஸ் சாலையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலையைத் திறந்துவைத்த முதல்வர் ஜெயலலிதா, ''மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தேவர் ஆய்வு இருக்கை ஒன்று தொடங்கப்பட்டு, தேவரின் வாழ்க்கை வரலாறு, சமுதாயப் பணிகள் குறித்து ஆய்வுகள் நடத்தப் படும்!'' என்று அறிவித்தார். அதன்படியே 1996-ம் ஆண்டு ஜனவரியில் ஆய்வு இருக்கை தொடங்கப்பட்டு, அரசின் சார்பில்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''முடக்கப்பட்டதா தேவர் ஆய்வு?''

15 லட்சம் சுழல் நிதி அளிக்கப்பட்டது. இருந்தாலும், கடந்த 15 ஆண்டுகளில் தேவர் இருக்கை யின் செயல்பாடுகள் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை! 

இது குறித்து நம்மிடம் பேசினார், ஃபார்வர்ட் பிளாக் (நேதாஜி) பிரிவு மாநிலத் தலைவர் நவமணி. ''பசும் பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரால் ஒரு ஆய்வு  இருக்கையை ஏற்படுத்தினார் ஜெயலலிதா. இதற்குத் தமிழக அரசு ஒதுக்கிய நிதியுடன் எம்.நடராஜன் ஆரம்பித்த பூலித்தேவன் அறக்கட்டளை

''முடக்கப்பட்டதா தேவர் ஆய்வு?''

1 லட்சமும், மதுரை ஆதீனம் ஆரம்பித்த அறக்கட்டளை

''முடக்கப்பட்டதா தேவர் ஆய்வு?''

25 ஆயிரமும், காங்கிரஸ் எம்.பி-யான என்.எஸ்.வி. சித்தன் தன் தந்தையார் வீரபத்ரதேவர் பெயரில் ஆரம்பித்த அறக்கட்டளை

''முடக்கப்பட்டதா தேவர் ஆய்வு?''

25 ஆயிரமும் டெபாசிட் செய்தார்கள். இதன் வட்டியில் இருந்து தேவர் ஆய்வு இருக்கையில், ஆண்டு தவறாமல் தொடர் நிகழ்ச்சிகளை நடத்தித் தேவரின் புகழைப் பரப்பவேண்டும்.

''முடக்கப்பட்டதா தேவர் ஆய்வு?''
''முடக்கப்பட்டதா தேவர் ஆய்வு?''

ஆரம்பத்தில் இதெல்லாம் ஒழுங்காகத்தான் நடந்தன. காமராஜர் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுப் பேராசிரியர் ஜெயரா மனை இயக்குநராகப் போட்டு இருந்தார்கள். 2008-ல் அவர் ஓய்வு பெற்ற பிறகு இந்த இருக்கையே முடங்கி விட்டது. 2008-ல் தேவர் நூற்றாண்டு விழாவில் இந்த பிரச்னையைக் கிளப்பினோம். உடனே சயின்ஸ் டிபார்ட்மென்ட் பேராசிரியர் டாக்டர் முத்துச்செழியனை இயக்குநராக நியமித்தார்கள். இரண்டு மூன்று கருத்தரங்கங்களை நடத்தினார் முத்துச் செழியன். அதன் பிறகு எந்த நிகழ்ச்சியும் நடக்கவில்லை!'' என்றார்.

தேவர் இருக்கை யின் இப்போதைய நிலை குறித்து அதன் இயக்குநர் பேராசிரியர் நல்லகாமனிடம் கேட்டோம். ''கடந்த இரண்டு ஆண்டுகளில் தேவர் இருக்கையில் சொல்லும்படியாக எதுவும் நடக்கவில்லை என்பது முற்றிலும் உண்மை. நான் இங்கு பொறுப்பேற்று மூன்று மாதங்கள்தான் ஆகிறது. இதுவரை இரண்டு செமினார்களை நடத்தி இருக்கிறேன். கூடிய விரைவில் இன்னும் இரண்டு செமினார்களை நடத்த இருக்கிறோம். தேவர் இருக்கையை, துறையாக மாற்றுவதற்கான முயற்சிகளும் நடந்து வருகிறது. இதற்காக

''முடக்கப்பட்டதா தேவர் ஆய்வு?''

6 கோடி நிதியை அரசாங்கம் ஒதுக்கி உள்ளது. துறையாக மாற்றுவது தொடர்பாக நாங்கள் அனுப்பிய கோப்பில் சில விளக்கங்கள் கேட்டார்கள். அதையும் அனுப்பி இருக்கிறோம். கூடிய சீக்கிரம் தேவர் துறை வந்துவிடும்!'' என்றார் நம்பிக்கையாக.

- குள.சண்முகசுந்தரம்

படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism