Published:Updated:

திகில் கிளப்பும் மேலூர் தில்லுமுல்லு

திகில் கிளப்பும் மேலூர் தில்லுமுல்லு

திகில் கிளப்பும் மேலூர் தில்லுமுல்லு

திகில் கிளப்பும் மேலூர் தில்லுமுல்லு

Published:Updated:
##~##
திகில் கிளப்பும் மேலூர் தில்லுமுல்லு

'எதையோ ஏவினால்... அது தன் வாலை ஏவும்’ என்பார்களே... அப்படித்தான் ஒரு சம்பவம் மேலூரில் அரங்கேறி இருக்கிறது! 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மதுரை மாவட்டம் மேலூர் உரிமையியல் நீதிமன்றத்தில் இடப்பிரச்னை தொடர்பான வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தபோது, 'இடம் தொடர்பான ஆவணங்களுடன் 16.6.11 அன்று கோர்ட்டில் ஆஜராக வேண்டும்’ என்று மேலூர் தாசில்தார் மோகனாவுக்கு உத்தரவிட்டார், நீதிபதி.

தாலுக்கா அலுவலக சட்ட ஒழுங்குப் பிரிவு இளநிலை அலுவலர் ஜெயபாண்டியை வரவழைத்த தாசில்தார், 'ஜமாபந்தி நிகழ்ச்சி நடப்பதால் நான் செல்ல இயலாது. அதனால் நீங்களே எனது சார்பில் ஆஜராகி இந்தத் தகவலை நீதிமன்றத்தில் தெரிவித்து விடுங்கள்!' என்று சொன்னார்.

திகில் கிளப்பும் மேலூர் தில்லுமுல்லு

அதன்பிறகு நடந்த கூத்தை விவரிக்கிறார் வழக்கறிஞர்கள் நல சங்க செயலாளர் ராஜேந்திரபிரசாத்.

திகில் கிளப்பும் மேலூர் தில்லுமுல்லு

'தாசில்தார் உத்தரவை ஏற்று ஒழுங்காக ஜெயபாண்டியே ஆஜராகி இருக்க லாம். ஆனால் அவரோ, புரோக்கர்களில் ஒருவரான நாராயணன் என்பவரை தனக்குப் பதில் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சொல்லி இருக்கிறார். நாராயணனும் 16-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகி, 'நான் தாலுக்கா அலுவலகத்தில் இளநிலை உதவியாளர். ஜமாபந்தி நடப்பதால் நீதிமன்றம் கேட்டிருந்த வழக்கு ஆவணங்களைத் தாக்கல் செய்ய தாசில்தார் வரமுடியவில்லை’ என்று கூறினார். அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

திகில் கிளப்பும் மேலூர் தில்லுமுல்லு

அந்த நாராயணனை எனக்கு நன்றாக தெரியும் என்பதால், தாசில்தார் மோகனாவிடம் இந்த விஷயத்தை விசாரித்தேன். அவரோ, 'நான் ஜெயபாண்டியைத்தானே ஆஜராகச் சொன்னேன்?’ என்றார். உடனே நாராயணன் மீது நீதிபதி ஜெய்குமாரிடம் புகார் கொடுத்தேன். அதிர்ச்சியடைந்த அவர், இதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு போலீ ஸாருக்கு உத்தரவிட்டார். அதன்படி, பொய் சாட்சி, ஆள்மாறாட்டம் போன்ற சட்டப் பிரிவுகளின் கீழ் ஜெயபாண்டி, நாராயணன் ஆகிய இருவர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்து இருக்கிறார்கள். ஆனால், இருவரையும் இன்னமும் கைது செய்யவில்லை!' என்றார்.

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் மாடசாமியிடம் கேட்டோம். 'ஹெட்கிளார்க் ரேங்கில் உள்ள ஜெய பாண்டியைக் கைது செய்தால் பிரச்னையாகும் என்றுதான் உடனே நடவடிக்கை எடுக்கவில்லை. தலைமறைவாக உள்ள நாராயணனைத் தீவிர மாகத் தேடி வருகிறோம்...'' என்றார்.

'இப்போதுகூட அவர் போலீஸ் நிலையம் முன்பு தான் நிற்கிறார்!' என்று நாம் சொல்ல, 'இதோ அவரைக் கைது செய்கி றேன்' என்று இணைப்பைத் துண் டித்தவர், சில நிமிடங்களில் மீண்டும் லைனில் வந்தார். 'வக்கீல்கள் நலச் சங்கம் சார்பில் ஒரு வக்கீல் கொடுத்த புகாரின் அடிப்படையில்தான் இந்த வழக்கே பதிவு செய்யப்பட்டது. ஆனால், குற்றவாளியைக் கைது செய்யும் நேரத்தில், அதே சங்கத்தைச் சேர்ந்த மற்றொரு வக்கீலே இருவரையும் பெயிலில் எடுத்துவிட்டார். நாங்கள் எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்?' என்றார் அப்பாவியாக.

நீதிபதியையும் அரசாங்கத்தையும் ஏமாற் றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இத்தனை அசட்டை ஏனோ?  

- கே.கே.மகேஷ்

படங்கள்: இ.ஜெ.நந்தகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism