Published:Updated:

வச்சக்காரப்பட்டி தலைவரை தாக்கி வஞ்சம் தீர்த்தது யார்?

வச்சக்காரப்பட்டி தலைவரை தாக்கி வஞ்சம் தீர்த்தது யார்?

வச்சக்காரப்பட்டி தலைவரை தாக்கி வஞ்சம் தீர்த்தது யார்?

வச்சக்காரப்பட்டி தலைவரை தாக்கி வஞ்சம் தீர்த்தது யார்?

Published:Updated:
##~##
வச்சக்காரப்பட்டி தலைவரை தாக்கி வஞ்சம் தீர்த்தது யார்?

விருதுநகர் அருகே நடந்து இருக்கும் ஒரு கத்திக்குத்துச் சம்பவம் பெரிய இடங்களை வளைக்கும் பூதமாகக் கிளம்பும் என்று சொல்ல ஆரம்பித்து உள்ளார்கள் விஷயம் அறிந்தவர்கள். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விருதுநகர் - சாத்தூர் செல்லும் சாலையில் தனியார் நிறுவனம் ஒன்று மின்சாரம் தயாரிக்கும் நிலையம் தொடங்கும் பணிகளைச் செய்து வருகிறது. இதற்கு வச்சக்காரப்பட்டி மற்றும் சுற்றியுள்ள 30 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். ''மின்நிலையம் அமைத்தால் ஊருக்குக் கடுமையான பாதிப்பு ஏற்படும்'' என்பதுதான், இவர்கள் தங்களது எதிர்ப்புக்குச் சொல்லும் காரணம். குறிப்பாக, வச்சக்காரப்பட்டி பஞ்சாயத்துத் தலைவர் ஆனந்தராமன் இந்தத் திட்டத்தை கடுமையாக எதிர்த்து வருகிறார்.

வச்சக்காரப்பட்டி தலைவரை தாக்கி வஞ்சம் தீர்த்தது யார்?

இதைத் தொடர்ந்து தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் விருதுநகர் மாவட்ட நிர்வாகம் ஆகியவை இணைந்து ஒரு கலந்துரையாடல் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து இருந்தது. மின் நிலையம் அமைப்பது தொடர்பாக பொதுமக்கள் தங்களது  கருத்துகளைச் சொல்லலாம் என்று அறிவிக்கப்பட்டது.

வச்சக்காரப்பட்டி தலைவரை தாக்கி வஞ்சம் தீர்த்தது யார்?

இக்கூட்டம் கடந்த 22-ம் தேதி விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் நடக்க இருந்தது. இதற்கு முதல் நாள், 21-ம் தேதி இரவு டூ வீலரில் சென்ற ஆனந்தராமனை நான்கு பேர் கொண்ட கும்பல் ஒன்று வழிமறித்துக் கத்தியால் குத்தியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த அவர் இப்போது விருதுநகர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். சுற்றுவட்டாரக் கிராமங்களில் இந்தச் சம்பவம் பரபரப்பாக பரவ... வச்சக்காரப்பட்டி, ஆவுடையாபுரம், குப்பம்பட்டி உள்பட பல கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் 20-க்கும் அதிகமான வாகனங்களில் வந்து, விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகை இட்டனர். 'பஞ்சாயத்துத் தலைவரை தாக்கியவர்களைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கோஷமிட்டு, தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

இதற்கிடையே, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் புது மின் நிலையம் தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டம் நடந்தது. ''ஏற்கெனவே இப்பகுதியில் உள்ள  ஆலையால், சுற்றியுள்ள கிராமத்தினருக்குக் குடிநீர் பிரச்னையும் சுற்றுச்சூழல் பாதிப்பும் உள்ளது. இதில் புது மின் நிலையம் அமைத்தால், மேலும் பிரச்னைகள் ஏற்படும். அதனால் அனுமதி தரக்கூடாது!'' என்று கிராம மக்கள் வலியுறுத்தினர். இதையடுத்து, மாவட்ட கலெக்டர் பாலாஜி, ''இது தொடர்பாக ஒரு வாரத்தில் விரிவான ஆய்வு நடத்துவோம். பிரச்னை இல்லை என்றால்தான் அனுமதி தருவோம்!'' என்று உறுதியளித்தார்.

ஆனந்தராமன் தாக்கப்பட்ட சம்பவத்துக்கும் இந்த மின்நிலைய எதிர்ப்பு விவகாரத்துக்கும் முடிச்சுப் போட்டுச் சிலர் பேச ஆரம்பித்து இருப்பதுதான் விருதுநகர் வட்டாரத்தின் ஹாட் டாபிக்!

மர்ம நபர்களால் தாக்குதலுக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஆனந்த ராமனை சந்தித்தோம். ''இப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனம், தனக்கு உள்ள  அரசியல் செல்வாக்கை வைத்துக்கொண்டு இஷ்டப்படி நடக்கிறது.  கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்கள் பயன்படுத்தி வந்த ரோட்டை மறித்து திடீரென்று காம்பவுண்ட் சுவர் கட்டினார்கள். 'பஞ்சாயத்து அனுமதி இல்லாமல் எப்படி கட்டினீர்கள்?’ என்று நான் போய் கேட்டதற்கு, 'பஞ்சாயத்திடம் எல்லாம் அனுமதி கேட்டுக் கட்டடம் கட்ட முடியாது. எங்களோட அரசியல் பவர் தெரியாமல் விளையாடுற நீ’ என்று மிரட்டி அனுப்பினார்கள். இப்போது, யாரிடமும் அனுமதி வாங்காமல் புது மின் நிலையம் அமைக்கும் வேலையை தொடங்கி உள்ளனர். ஏற்கெனவே  நிலத்தடி நீரை அதிக அளவில் உறிஞ்சுவதால், வச்சக்காரப்பட்டி, அக்கரகாரப்பட்டி, கன்னிச்சேரி, ஆவுடையாபுரம், கோட்ட நத்தம் உள்பட 40 கிராமங்களில் தண்ணீர் பஞ்சம் தலை விரித்தாடுகிறது. இதில், புது மின் நிலையத்தால் சுற்றுப்புறச் சூழல் மாசுபடுவதோடு பல பிரச்னைகள் ஏற்படும் என்பதால்தான் எதிர்ப்பு தெரிவித்தேன். அதில் இருந்தே அவர்களுக்கு என் மேல் பயங்கரக் கோபம்.

இந்த நிலையில், கடந்த 21-ம் தேதி இரவு விருதுநகர் - சாத்தூர் ரோட்டில் டூ-வீலரில் வந்தபோது எதிரில் இரண்டு பைக்கில் ஆட்கள் வந்தார்கள். அவர்கள் என் வண்டியை திடீரென நிறுத்தினார்கள். சுதாரிப்பதற்குள் என் கண்ணில் மிளகாய்ப் பொடியைத் தூவிவிட்டு, கத்தியால் குத்த வந்தனர். தடுத்தபோது, கையில் கத்திக்குத்துக் காயம் ஏற்பட்டது. தொடர்ந்து முதுகு மற்றும் காலில் கத்தியால் குத்திவிட்டுப் பறந்துவிட்டனர். உடனே செல்போன் மூலமாக எனது  வீட்டுக்குத் தகவல் சொல்லி, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன். என்னிடம் விசாரித்த போலீஸார், 'யார் மேல் சந்தேகம்?’ என்று கேட்டபோது, 'புது மின் நிலையம் சம்பந்தமாக சிலர் மீது சந்தேகம்’ என்றேன். ஆனால், 'சந்தேகத்துக்கு இடமான நான்கு  மர்ம நபர்கள்’ என்று கேஸ் எழுதி உள்ளனர்...'' என்றார்.

இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட அந்த தனியார் நிறுவன அதிகாரிகள் சிலரிடம் பேசியபோது, ''வச்சக்காரப்பட்டி உள்பட சுற்றியுள்ள பல கிராமங்களுக்குக் கண்மாய் தூர் வாருவது, புதுசா கட்டடம் கட்டுறதுன்னு பல நல்ல காரியங்கள் செய்திருக்கோம். ஆனா, எங்களுக்கு எதிரா மக்களை சிலர் தூண்டி விடுறாங்க. ஆனந்தராமன் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது. வேறு ஏதாவது முன்பகை காரணமாகக்கூட தாக்கப்பட்டு இருக்கலாம். போலீஸ்தான் கண்டுப்பிடிக்கணும்...’ என்று சொன்னார்கள்.

இது ஒருபுறம் இருக்க... ஆனந்தராமன் மீதான தாக்குதல் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி குற்றவாளிகளைக் கைது செய்வதில் போலீஸார் தயக்கம் காட்டுவதாக ஒரு வேதனை இந்தப் பகுதியில் நிலவுகிறது. ''மாமன்னர் பேரையும் முழுமுதல் கடவுள் பேரையும் கொண்ட இரண்டு பேருக்குக் கொடுக்கப்பட்ட 'அசைன்மென்ட்'தான் இந்த மிரட்டல் தாக்குதல் என்று சந்தேகப்படுகிறோம். அந்த இரண்டு வலதுகரங்களுக்குப் பின்னால் இருப்பது லோக்கல் முன்னாள் அமைச்சர் ஒருவரின் கண்மூடித்தனமான ஆதரவுதான். முயல் வேஷம் போட்டு நடமாடும்  புலிகளுக்கு அந்த முன்னாள் அமைச்சர் கடந்த ஆட்சியில் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வந்தார். ஆட்சி போன பிறகும் அவர் செல்வாக்கு இங்கே தொடர்வதுதான் புதிராக இருக்கிறது'' என்று புலம்புகிறார்கள் ஏரியாவாசிகள்.

- எம்.கார்த்தி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism