Published:Updated:

மல்லை சத்யாவின் இன்னொரு முகம்

'ஃபைப் ஸ்டார்' அரசியல்வாதி!

##~##
மல்லை சத்யாவின் இன்னொரு முகம்

'கத்தி உள்ளிட்ட ஆயு​தங்களுடன் பலரும், கைகளையே ஆயுத​மாகக் கொண்டு பலரும் வந்திருந்தனர்... எதிரியை வீழ்த்​துவது ஒன்றே அவர்​களுடைய நோக்​கமாக இருந்தது...’ - பில்டப் போதும், விஷயத்துக்கு வாங்க என்கிறீர்களா? சரி. 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மாமல்லபுரம் ஸ்தல சயனப் பெருமாள் கோயில் வளாகத்தில் இரண்டு நாட்கள் நடந்த தேசிய அளவிலான மன்சூர்யா குங்ஃபூ போட்டியில் கலந்துகொள்ள வந்தவர்கள்தான் நாம் மேலே சொன்னவர்கள். ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யாவும் இந்தப் போட்டியில் கலந்து கொண்டார்.

முதல் நாள் போட்டியை கொடி ஏற்றித் தொடங்கி வைத்தார் டைரக்டர் மிஷ்கின். 500-க்கும் மேற்பட்டவர்கள் அன்று போட்டியில் மோதினர். இரண்டு மேடைகளில் போட்டிகள் நடந்தன. இரவு 10 மணி வரை இரண்டு ரவுண்டுகள் முடிந்தன. மறுநாள் காலை மூன்றாவது ரவுண்ட் போட்டிகள் தொடங்கி, மாலையில் நிறைவு பெற்றது. அப்போது, மேடைக்கு வந்த திருப்போரூர் எம்.எல்.ஏ. மனோகரன், வெற்றி வீரர்களுக்குப் பரிசு வழங்கினார்.

மல்லை சத்யாவின் இன்னொரு முகம்

இதற்குப் பிறகுதான் மேடை ஏறினார் மல்லை சத்யா.

அவருக்கு இரு பக்கமும் இரண்டு பேர் ஓடுகளை அடுக்கிப் பிடித்தனர். சத்யாவின் ஒவ்வொரு உதையிலும் ஓடுகள் தூள்துளாகச் சிதறின. கூட்டத்தில் விசில் சத்தம் காதைக் கிழித்தது. மன்சூர்யா குங்ஃபூ நிறுவனரும் கிரான்ட் மாஸ்டருமான ஷிபு சேகர் நம்மிடம், ''எங்கள் அமைப்பு 14 நாடுகளில் செயல்படுகிறது. இது 42-வது தேசிய சாம்பியன் போட்டி. 20 ஆண்டுகளுக்கு முன் அஸ்ஸாம், மணிப்பூர் ஆகிய மாநில மக்களே குங்ஃபூவில் ஆதிக்கம் செலுத்தினர். அப்போது, தமிழகத்தில் இருந்து சென்ற மல்லை சத்யா, அந்த மாநிலங்களில் பல சாம்பியன்களை வீழ்த்தி வெற்றி வாகை சூடினார். ஜெர்மன் போன்ற நாடுகளில் இருந்து மாமல்லபுரம் வரும் கராத்தே, குங்ஃபூ வீரர்கள் சத்யாவுடன் போட்டி இடுவார்கள். அவர்களை வீழ்த்தி சத்யா தனது திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்...'' என்று சந்தோஷத்தை வெளிப்படுத்தினார்.

இந்தப் போட்டியில் கலந்துகொண்ட மல்லை சத்யா, ''சாளுக்கியருடன் போர் புரிவதற்காகவும், மண்ணை மீட்பதற்காகவும் நரசிம்ம வர்ம பல்லவ மன்னன், இளைஞர்களை தயார்ப்படுத்தினான். அதற்காக, இளைஞர்களுக்குப் போர்ப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இந்த மண், வீரர்களை உருவாக்கிக் கொடுத்து உள்ளது. அது, வாழையடி வாழையாகத் தொடர்ந்து வருகிறது. 18 ஆண்டுகளுக்கு முன்பே குங்ஃபூ பயிற்சி பெற்றேன். 1991 மற்றும் 1992-ம் ஆண்டுகளில் தேசிய சாம்பியன்ஷிப் பட்டம் வென்றேன். அதற்கு, ஷிபு மாஸ்டர் கொடுத்த ஊக்கமும் பயிற்சியும்தான் காரணம். போட்டி என்றாலே உற்சாகம் வந்து விடும். குங்ஃபூ கலை எல்லா தற்காப்புக் கலைகளுக்கும் தாய் போன்றது. பாம்பு, புலி, குரங்கு போன்ற விலங்குளின் செயல்பாடுகளிலும் பயிற்சிகள் அடங்கி இருக்கும். உடலைப் பலப்படுத்தவும் தற்காத்துக் கொள்ளவும் குங்ஃபூவில் இது போன்ற பயிற்சிகள் ஏராளமாக இருக்கின்றன.

மல்லை சத்யாவின் இன்னொரு முகம்

இந்திய அளவில் நடைபெறும் மன்சூர்யா குங்ஃபூ டோர்னமென்ட் போட்டி, இந்த ஆண்டு மாமல்லபுரத்தில் நடத்தப்பட்டது சந்தோஷமாக இருக்கிறது. நான் ஏற்கெனவே பிளாக் பெல்ட் வாங்கி இருக்கிறேன். இப்போது, உடல் தகுதியை எங்கள் மாஸ்டர் ஷிபு சேகர் மீண்டும் சோதனை செய்கிறார். என் உடல் தகுதியை உறுதிசெய்ய கடந்த ஒரு மாதமாக மீண்டும் கடுமையான பயிற்சிகள் செய்தேன். இதற்காக, காலை மாலை என இரு வேளையும் இங்கிருந்து 7 கிமீ தூரத்தில் உள்ள குங்ஃபூ கோயிலுக்குச் சென்று பயிற்சி செய்வேன். ஆரம்ப காலத்தில் செய்த கடும் பயிற்சிதான் இப்போதும் பலத்தை நிரூபிக்க உதவியது. என்னைச் சுற்றி ஒரு கூட்டம் உருவாவதற்குக் காரணமே குங்ஃபூதான். மாநிலங்களைக் கடந்து எனக்கு நண்பர்கள் இருக்கின்றனர். மும்பை, மணிப்பூர் போன்ற இடங்களில் தேசிய அளவில் வெற்றி பெற்றபோது, அந்த வெற்றி எனக்கான அடையாளத்தையும் அங்கீகாரத்தையும் கொடுத்தது. இதற்கு முன் நான் குங்ஃபூவில் மூன்று ஸ்டார்களை பெற்று இருந்தேன். இப்போது மீண்டும் எனது உடல் தகுதியை வெளிப்படுத்தியதன் மூலம் கூடுதலாக இரண்டு ஸ்டார்களை பெற்று 'ஃபைவ் ஸ்டார்’ தகுதியைப் பெற்றுள்ளேன்!'' என்றார் உற்சாகமாக.

எதிர்க் கட்சிகள் இனி மல்லையிடம் உஷாராக இருக்கவேண்டும்!

- பா.ஜெயவேல்