Published:Updated:

வாரம் ஒரு கொலை!

அலறும் வாணியம்பாடி

##~##
வாரம் ஒரு கொலை!

.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், சட்டம்-ஒழுங்கு கட்டுக்கோப்பாக இருக்கும் என்ற நம்பிக்​கையை தவிடுபொடி ஆக்கி இருக்​கிறது வாணியம்பாடி. கடந்த 40 நாட்களில் மட்டும் ஆறு பேர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட... திகிலில் திகைத்து நிற்கிறார்கள் ஊர்வாசிகள்! 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

வாணியம்பாடியில் சிலரிடம் பேசியபோது, ''இதுக்கு முன்ன இங்க இப்படித் தொடர்ச்சியா கொலைகள் நடந்ததே கிடையாது. ஆனா, இப்ப சொல்லி​வெச்ச மாதிரி வாரம் ஒரு கொலை நடக்கிறது.

கடந்த ஜூன் 20-ம் தேதி கோவிந்தா​புரத்தை சேர்ந்த ஆம்புலன்ஸ் டிரைவரை கொடூ​ரமான முறையில் பைபாஸ் ரோட்டுல வெட்டிக் கொன்னாங்க. யாரு கொலை செய்தாங்கன்னு ஒரு தடயத்தைக்கூட போலீஸால கண்டுபிடிக்க முடியலை! இதுக்கு ரெண்டு வாரம் முன்னாடி பெருமாள்பேட்டையில் இருக்கிற கமலக்கண்ணனை ஆடு வெட்டுற மாதிரி கண்டந்துண்டமா வெட்டி நடு ரோட்டுல வீசிட்டுப் போயிட்டாங்க. இதுக்கும் காரணம் யார்னு கண்டுபிடிக்​கலை... இத்தனைக்கும் இவர், தி.மு.க. கட்சியின் மாவட்ட பிரதிநிதியா இருந்தவர்.  செட்டியப்பனூர் தோப்பில் ஒரு கிணறு இருக்கு. கடந்த 6-ம் தேதி, அதில் இருந்து துர்நாத்தம் வீசிச்சு. போய்ப் பார்த்தா... வாணியம்பாடியில் மெக்கானிக் கடை வெச்சிருந்த சின்னராஜை அடிச்சுக் கொன்னு, அதுல தூக்கிப் போட்டு இருந்தாங்க. அப்புறம் போன 27-ம் தேதி அடையாளம் தெரியாத ஒருத்தரை வெட்டி ரோட்டுல வீசி இருக்காங்க. போலீஸ், கொலை நடந்த இடத்துக்குத் தவறாம வந்து, கடமைக்காக மோப்ப நாய் எல்லாம் விட்டுத் தேடுது! ஆனா, அது ஒரு வாரம்தான்... அதுக்குள்ள இன்னொரு கொலை நடந்துடுது, அதைப் பார்க்கப் போயிடுது!

வாரம் ஒரு கொலை!

இது போதாதுன்னு வாணியம்பாடியில் இருக்கிற ரயில்வே டிராக்கில் அதிக அளவில்

வாரம் ஒரு கொலை!

தற்கொலைகளும் நடக்குது. ஆனா, எல்லாமே தற்கொலைகளா... கொலைகளான்னு விசாரிக்கணும். வேலூர் மாவட்டத்தைப் பொறுத்த வரை, வாணியம்பாடி ரொம்ப அமைதியான பகுதி. சமீபகாலமா கொலைகள் அதிகரிப்பதால், நிம்மதியா தூங்க முடியலை. இந்த லட்சணத்துல வேலூர் மாவட்டத்துக்கு எஸ்.பி., டி.ஐ.ஜி-யை இன்னும் நியமிக்கலை. காவல் துறை இப்படி மெத்தனமா இருந்தா எப்படி சார்?'' என்றனர் கவலையாக.

இது குறித்து வாணியம்பாடி காவல் துறையினரிடம் கேட்டபோது, ''எங்க தரப்பில் எல்லா விதமான நடவடிக்கைகளையும் எடுத்து வருகி​றோம். குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடிப்​போம்!'' என்று அசட்டையாகச் சொன்​னார்கள்.

விஷயத்தை வடக்கு மண்டல ஐ.ஜி-யான சைலேந்திரபாபு வசம் கொண்டுசென்றோம். ''இந்தப் பகுதியில் கொலைகள் நடப்பது குறித்து விவாதித்து இருக்கிறோம். வேலூர் மாவட்டத்துக்கு எஸ்.பி. அல்லது டி.ஐ.ஜி. இல்லாததால்தான் இது போன்ற சம்பவங்கள் அதிகம் என்பது ஏற்புடையது அல்ல. குற்றவாளிகளைப் பிடிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்!'' என்றார்.

சொன்னால் மட்டும் போதாதுங்க...

- கே.ஏ.சசிகுமார்

படங்கள்: ச.வெங்கடேசன்