Published:Updated:

நோயாளிகளை விரட்டும் வேலூர் மருத்துவமனை

சீட்டு இங்கே.. மருந்து அங்கே!

##~##
நோயாளிகளை விரட்டும் வேலூர் மருத்துவமனை

'வேலூரில் கடந்த ஏழு ஆண்டுகளாக மூடிக்கிடந்த பென்டலேன்ட் அரசு மருத்துவமனையை, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் வி.எஸ்.விஜய் சமீபத்தில் திறந்து வைத்தார். அன்று முதல், இந்த மருத்து வமனைக்கு வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை எதுவும் அளிக்காமல், அடுக்கம்பாறையில் உள்ள தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதையே பணியாகச் செய்கிறார்கள்’ என்று ஜூ.வி. ஆக்ஷன் செல் (044-42890005) அலறவே, சம்பவ இடத்துக்கு விரைந்தோம். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

  ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1917-ம் ஆண்டு வில்லியம் பென்ட்லேன்ட் என்பவர், வேலூரில் மருத்துவமனை தொடங்கினார். பிற்காலத்தில் இதுவே, பென்ட்லேன்ட் அரசு மருத்துவமனையாக மாற்றப்பட்டது. முந்தைய அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் இந்த மருத்துவமனை மூடப்பட்டு, அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை அடுக்கம்பாறையில் தொடங்கப்பட்டது. இந்நிலையில் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் பென்ட்லேன்ட் மருத்துவமனை மீண்டும் திறக்கப்பட்டு சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது.

நோயாளிகளை விரட்டும் வேலூர் மருத்துவமனை

சிகிச்சைக்கு வந்திருந்த நோயாளிகளிடம் பேசினோம். ''வேலூர் டவுனில் இருந்து, அடுக்கம்பாறைக்கு போகணும்னா 10 கி.மீ. ஆகும். அதனால டவுன்லயே இருக்குற பென்ட்லேன்ட் ஆஸ்பத்திரிய திரும்பவும் திறக்க வேண்டும் என்று அப்போ இருந்த எம்.எல்.ஏ. ஞானசேகரன்கிட்ட மனு குடுத்தோம். ஆனா, அவர் கண்டுக்கவே இல்ல. இப்போ அமைச்சர் விஜய், சொன்ன மாதிரியே மருத்துவமனையைத் திறந்து வெச்சுட்டார். ஆனா, டாக்டர்கள் ஒழுங்கா வருவதே கிடையாது. இங்க சீட்டு எழுதிக் குடுத்து மாத்திரை, மருந்துகளை அடுக்கம்பாறை ஆஸ்பத்திரியில போய் வாங்கிக்கச் சொல்றாங்க. இதுக்கு எதுக்குங்க இந்த ஆஸ்பத்திரியைத் திறக்கணும்? கழிவறை, குடிநீர் எதுவும் கிடையாது. இந்த ஆஸ்பத்திரியை திறந்ததும் ஒண்ணுதான், மூடி வெச்சிருக்கிறதும் ஒண்ணுதான்!'' என ஆதங்கப்பட்டனர்.

பென்ட்லேன்ட் மருத்துவமனை டாக்டர்கள் சார்பில், ''இங்கு 30 டாக்டர்களை நியமிக்கிறதா அமைச்சர் சொல்லி இருக்கார், இப்போ, 12 பேர் மட்டுமே இருக்கிறோம். கடுமையான நோய்க்கு மட்டும்தான் அடுக்கம்பாறைக்கு அனுப்புறோம். இந்த மருத்துவமனை திறந்து ஒரு மாதம்தான் ஆகிறது என்பதால் எல்லாப் பிரச்னைகளும் சரியாக சில மாதங்கள் ஆகலாம். அதுவரை, நோயாளிகள் பொறுமையாகத்தான் இருக்க வேண்டும்!'' என்று விளக்கம் கொடுத்தனர்.

- கே.ஏ.சசிகுமார், படங்கள்: ச.வெங்கடேசன்