Published:Updated:

தி.மு.க. பொதுக்குழுவுக்கு, செக் வைக்கிறதா அ.தி.மு.க.?

ஆனந்தன் அரஸ்ட்... அதிர்ச்சியில் கோவை

##~##
தி.மு.க. பொதுக்குழுவுக்கு, செக் வைக்கிறதா அ.தி.மு.க.?

டந்த தேர்தலில் தி.மு.க. மிகவும் மோசமான தோல்வியை சந்தித்தது, கொங்கு மண்டலத்தில்தான். அதனால்தான் தேர்தலுக்குப் பிறகு நடக்க இருக்கும் தி.மு.க-வின்அதி முக்கிய நிகழ்வான பொதுக்குழு கூட்டத்தை வரும் ஜூலை 23 மற்றும் 24 தேதிகளில் கோவையில் நடத்தத் திட்டமிட்டு இருக்கிறார், கருணாநிதி. இதற்காக தி.மு.க-வினர் பரபரவெனப் பணியாற்றத் தொடங்கி இருக்கும் நிலையில்... அவர்களை நிலைகுலையச் செய்யும் வகையில் 'அரெஸ்ட்’ ஆயுதத்தை கையில் எடுத்து செக் வைத்து இருக்கிறது அ.தி.மு.க. அரசு. முதல் விக்கெட்ஆனந்தன். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கோவை மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளர், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் போன்ற வலுவான பதவிகளைக் கையில் வைத்திருப்பவர்தான் இந்த ஆனந்தன். அவிநாசி தொகுதியின் முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ. இளங்கோவின் மகன். அதனால் பெரிய எதிர்ப்புகள் எதுவும் இல்லாமல் அவிநாசி வட்டாரத்தில் மளமளவென வளர்ந்தார். 'க்ரீன் ஹோம் லேண்ட்ஸ்கேப்’ என்ற ரியல் எஸ்டேட்

தி.மு.க. பொதுக்குழுவுக்கு, செக் வைக்கிறதா அ.தி.மு.க.?

நிறுவனம் மூலம் கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில் அமோக வருவாய் பார்க்கும் பக்கா வியாபாரியும்கூட. திருப்பூர் மாவட்டம் தனியாகப் பிரிக்கப்பட்டபோது அவிநாசியும் அதனுடன் சேர்க்கப்பட்டதால் கோவை, திருப்பூர் இரு மாவட்டங்களிலும் ஆனந்தனுக்கு நல்ல செல்வாக்கு. கூடவே நீலகிரி தொகுதியின் எம்.பி-யான ஆ.ராசாவின் நம்பிக்கைக்கும் உரியவர். கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் நடக்கும் தி.மு.க. நிகழ்வுகளுக்கு பணம் மற்றும் ஆள் பலத்தைத் தந்து உதவுவதால், கட்சியில் ஆனந்தனுக்கு என்று தனிச் செல்வாக்கு உண்டு.

இவரைத்தான், ஸ்ரீசர்மா என்பவரின் பணத்தை மோசடி

தி.மு.க. பொதுக்குழுவுக்கு, செக் வைக்கிறதா அ.தி.மு.க.?

செய்ததாக குற்றம் சாட்டி கைது செய்திருக்கிறது, போலீஸ். வெளியில் முகம் காட்டத் தயங்கும் ஸ்ரீசர்மாவிடம் நீண்ட முயற்சிக்குப் பின் பேசியபோது, ''ஆனந்தனோட ரியல் எஸ்டேட் கம்பெனி சார்பில், தாளியூர் பஞ்சாயத்து கலிக்கநாயக்கன்பாளையத்துல 'வெஸ்டர்ன் வேல்ஸ்’ என்ற பெயரில் லே-அவுட் போட்டாங்க. முன்பணமாக

தி.மு.க. பொதுக்குழுவுக்கு, செக் வைக்கிறதா அ.தி.மு.க.?

20,000 செலுத்தி, ஒரு பண்ணை வீட்டுக்கான நிலத்தை புக் பண்ணினேன். மீதிப் பணத்தை மாசம்

தி.மு.க. பொதுக்குழுவுக்கு, செக் வைக்கிறதா அ.தி.மு.க.?

2,500 வீதம் செலுத்துறதாக ஒப்பந்தம். நான் தவணைப் பணத்தை ரொம்பவும் கரெக்டா கட்டிட்டு வந்தேன். கடைசி அஞ்சு மாச தவணை நிலுவையில் இருந்தப்ப திடீர்னு பணத்தை வாங்க மறுத்துட்டாங்க. சந்தேகப்பட்டு 2004-ம் வருஷம் 'வில்லங்க சான்று’-க்கு அப்ளை பண்ணி வாங்கிப் பார்த்தப்ப என் இடத்தோட ஒரு பகுதியை பாபு ஹென்றி சாமுவேல் என்பவருக்கும், இன்னொரு பகுதியை ராமமூர்த்தி என்பவருக்கும் வித்தது தெரிந்தது. உடனே ஆனந்தனை சந்திச்சுக் கேட்டப்ப, 'என் மேலே புகார் பண்ணினா நீ உயிரோடயே இருக்க மாட்ட. என்னோட பவரை யூஸ் பண்ணி உன்னை ஒண்ணுமில்லாம பண்ணிடுவேன்’னு மிரட்டினார். அப்போதே இது சம்பந்தமாக போலீஸில் புகார் கொடுத்தேன், ஆனா எந்த நடவடிக்கையும் இல்லை. அதனால் மூணு தடவை அந்த ஆபீஸுக்குப் போய் உண்ணாவிரதம்கூட உட்கார்ந்துட்டேன். அப்பவும், வெறும் மிரட்டல்தான் மிஞ்சியது. அதனால்தான் மறுபடியும் போலீஸுக்குப் போனேன், இப்போ அரெஸ்ட் பண்ணிட்டாங்க. ஆனந்தன்கிட்டே நான் இழந்த

தி.மு.க. பொதுக்குழுவுக்கு, செக் வைக்கிறதா அ.தி.மு.க.?

4,00,000 எனக்கு வேண்டும். அதே

தி.மு.க. பொதுக்குழுவுக்கு, செக் வைக்கிறதா அ.தி.மு.க.?

மாதிரி எனக்கும் என் குடும்பத்துக்கும் எந்த ஆபத்தும் வந்துடக்கூடாது!'' என்றார்.

ஆனந்தனுக்கு அடுத்து கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் அடுத்தடுத்து சில தி.மு.க. புள்ளிகளை ஹிட் லிஸ்ட்டில் வைத்திருக்கிறது மேற்கு மண்டல ஐ.ஜி. அலுவலகம். பண மோசடி விவகாரம் ஒன்றில் தற்போது எஃப்.ஐ.ஆர். போடப்பட்டு இருக்கும் உடுமலைப்பேட்டை சேர்மன் வேலுச்சாமி, நில அபகரிப்பு, ஆள்கடத்தல் விவகாரங்களில் சிக்கிய முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா என்று நீள்கிறது அந்த லிஸ்ட். கூடவே திருப்பூர் மேயர் செல்வராஜ் மீதும் ஒரு கண் வைத்திருக்கிறார்கள், காரமடை, சின்னகாரனூர் பகுதியில் திப்புசுல்தான் காலத்தில் ஏழை முஸ்லிம்களுக்குக் கொடுக்கப்பட்ட நிலத்தை, தி.மு.க. தொண்டரணியைச் சேர்ந்த புள்ளி ஒருவர் அபேஸ் பண்ணிவிட்டதாகவும் ஒரு தகவல். இதையெல்லாம் தாண்டி கருணாநிதிக்கு வேண்டப்பட்ட சினிமா தயாரிப்பாளராக வலம் வரும் 'லாட்டரி கிங்’ மார்ட்டினையும் நோக்கிக் காய் நகர்த்துகிறதாம் போலீஸ். தி.மு.க. நடத்த இருக்கும் பொதுக்குழு கூட்டத்துக்கு முன் இதையெல்லாம் நிறைவேற்றி, அந்த நிகழ்வை பிசுபிசுக்க வைக்கவேண்டும் என்பதே 'மேலிட’ உத்தரவாம்.

ஆனந்தன் நாம் தரப்பில் பேசியபோது ''2004-ல் நடந்த பிரச்னைக்கு இப்போது நடவடிக்கை எடுப்பதில் இருந்தே இது முழுக்க முழுக்கத் திட்டமிட்ட பழிவாங்கல் நடவடிக்​கை என்பது தெரியவில்லையா?! 2004-ல் ஜெயலலிதா ஆட்சிதானே நடந்தது? ஆனந்தன் தப்பு செய்து இருந்தால், அப்போதே கைது செய்திருக்க வேண்டியதுதானே! அரசின் பழிவாங்கும் போக்கை நாங்கள் தலை குனிந்து ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் எங்களிடம் நெருக்கமாக இருந்து 'அனுபவித்த’ அ.தி.மு.க-வினரின் பட்டியலை பகிரங்கமாக விரைவில் வெளியிடுவோம். அப்போது தெரியும் அந்தக் கட்சியின் லட்சணம்...'' என்றனர் கடுப்பாக.

ஆனந்தன் விவகாரம் ஒரு பக்கம் இருக்க, ம.தி.மு.க.வின் மாவட்ட துணை செயலாளரான கெம்பனூர் கதிரவன் தொண்டா​முத்தூர் காவல் நிலைய லேடி எஸ்.ஐ.யை மிரட்டியதாக கைது செய்யப்பட்டிருக்கிறார்.

- எஸ்.ஷக்தி, படங்கள்: தி.விஜய்