Published:Updated:

சொத்தைப் பறிகொடுத்து, திருட்டுப் பட்டம் சுமந்து...

நெல்லையில் மீண்டும் கந்து வட்டி பூகம்பம்!

##~##
சொத்தைப் பறிகொடுத்து, திருட்டுப் பட்டம் சுமந்து...

'நெல்லை மாவட்டத்தில் கந்து வட்டிக் கொடுமை, மீண்டும் தலைதூக்க ஆரம்பித்து இருக்கிறது. இதில் சிக்கித்​தவித்த ஒரு குடும்பத்தினர் காவல் துறையினரிடம் புகார் கொடுக்கச் சென்ற நிலையில், அவர்கள் மீதே வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது!’ என்று ஜூ.வி. ஆக்ஷன் செல்லுக்கு (044-42890005) தகவல் வரவே, களத்தில் இறங்கினோம். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

நெல்லை மாவட்டத்தில் கந்து வட்டிக்குப் பணம் கொடுத்துவிட்டு சொத்துகளைப் பறிமுதல் செய்யும் சம்பவங்கள், கடந்த காலத்தில் அதிகம் நடந்தன. அப்போது நெல்லை சரக டி.ஐ.ஜி-யாக இருந்த கண்ணப்பன், எஸ்.பி-யாகப் பணியாற்றிய ஆஸ்ரா கர்க் ஆகியோர் கந்து வட்டிக் கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தனர். இதனால் அடங்கிக்கிடந்த கந்து வட்டிக் கும்பல், இப்போது மீண்டும் கைவரிசையைக் காட்டத் தொடங்கி விட்டது.

சொத்தைப் பறிகொடுத்து, திருட்டுப் பட்டம் சுமந்து...

காவல் துறையில் புகார் கொடுத்த நெல்லை டவுனை சேர்ந்த சங்கரலிங்கத்தை சந்தித்தோம். ''எனக்குத் தொழிலில் நஷ்டம் ஏற்பட்ட சமயத்தில் பாபநாசம் என்பவர் மூலமாக சித்திரைப்பாண்டியன் அறிமுகம் ஆனார். அவர், 'உனக்குத் தொழில் செய்ய எவ்வளவு பணம் வேணும்னாலும் கேளு, தர்றேன்’ என்று சொல்ல...

சொத்தைப் பறிகொடுத்து, திருட்டுப் பட்டம் சுமந்து...

5 லட்சம் கடன் வாங்கினேன். முதல் தவணை வட்டியாக

சொத்தைப் பறிகொடுத்து, திருட்டுப் பட்டம் சுமந்து...

75 ஆயிரமும் டாகுமென்ட் செலவு என்ற பெயரில்

சொத்தைப் பறிகொடுத்து, திருட்டுப் பட்டம் சுமந்து...

10,000 எடுத்துக்கிட்டு

சொத்தைப் பறிகொடுத்து, திருட்டுப் பட்டம் சுமந்து...

மீதியைக் கொடுத்தார். அதில் பாபநாசம்

சொத்தைப் பறிகொடுத்து, திருட்டுப் பட்டம் சுமந்து...

15,000 கமிஷன் எடுத்துக்கொண்டார். இந்தத் தொகைக்கு ஈடாக சில பேப்பர்களில் கையெழுத்து வாங்கிக்கிட்டு, என் சகோதரரிடம் இருந்து சில காசோலைகளும் வாங்கினாங்க. நான் மாதா மாதம்

சொத்தைப் பறிகொடுத்து, திருட்டுப் பட்டம் சுமந்து...

75,000 வட்டி செலுத்தி வந்தேன். ஆறு மாதத்துக்குப் பிறகு வட்டி கட்ட முடியாமல் போகவே, என்னைத் தேடிவந்த சித்திரைப்பாண்டியனும் பாபநாசமும் கடுமையா மிரட்டினாங்க. கட்டாயப்படுத்தி சப்-ரிஜிஸ்ட்ரார் ஆபீஸுக்குக் கூட்டிட்டுப் போய், எனது வீட்டை சித்திரைப்பாண்டியன் பெயருக்கு பவர் பத்திரம் போட்டதோடு, பாபநாசம் பெயருக்கு அடமானப் பத்திரமும் போட்டார்கள். சித்திரைப்பாண்டியனின் உறவினரான கொம்பையா என்பவருக்கு ஒரு கிரயப் பத்திரத்தையும் போட்டுப் பதிவு செய்துட்டாங்க. ஒரே நாளில் அடுத்தடுத்து இதைச் செஞ்சாங்க. 'மறுத்தால் குடும்பத்தையே காலி செஞ்சிடுவோம்’னு மிரட்டியதால், எதுவும் செய்ய முடியலை.

தொடர்ந்து என்னால் வட்டி கட்ட முடியாததால், பணத்தை வாங்கிக் கொடுத்த ஏஜென்டான பாபநாசம், என்னைச் சித்திரைப்​பாண்டியன் வீட்டுக்குக் கூட்டிட்டுப் போனார். அங்கு வைத்து என்னிடம் பேசிய சித்திரைப்​பாண்டியன், 'கொஞ்சம் அவசரமா பணம் தேவைப்படுது. அதனால் என் செயினை உன்னோட

சொத்தைப் பறிகொடுத்து, திருட்டுப் பட்டம் சுமந்து...

பெயரில் வைத்துப் பணத்தை எடுத்துக் கொடு. நான் வைத்தால் இன்கம்டாக்ஸ் பிரச்னை’ என்றார். அதை நம்பி, பாபநாசத்துடன் சென்று எனது பெயரில் அடகு வைத்து, பணத்தையும் ரசீதையும் அவரிடம் கொடுத்தேன்.

அதற்கு பிறகும் தொடர்ந்து வட்டி கேட்டு எல்லை மீறி டார்ச்சர் செய்ததால், அவர்கள் மீது கந்து வட்டி சட்டத்தில் போலீஸில் புகார் செய்தேன். ஏற்கெனவே சித்திரைப்பாண்டியன் மீது கந்து வட்டி வழக்கு நிலுவையில் இருக்கு. மறுபடியும் வழக்குப் பதிவு செய்துவிடுவார்களோ என அஞ்சிய அவர், என் மீது நகைத் திருட்டு கொடுத்து விட்டார். நானும் எனது அக்கா மாலாவும் சித்திரைப்பாண்டியன் வீட்டுக்குப் போனதாகவும், அவர் கழற்றி வைத்திருந்த 146 கிராம் எடை கொண்ட செயினைத் திருடி விட்டதாகவும் புகார் கொடுத்து இருக்கிறார். இதற்கு போலீஸாரும் உடந்தை. அந்த நகை எனது பெயரில் முத்தூட் ஃபைனான்ஸில் இருப்பதைக் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறி கைது செஞ்சாங்க. கந்து வட்டிப் பிரச்னையில் சிக்கியதால் சொத்​தையும் இழந்து, திருட்டுப் பட்டத்​தையும் சுமக்கிறேன். தற்கொலை செய்துகொள்ளும் மனநிலைக்கே போயிட்டேன். நண்பர்களின் ஆதர​வால்தான் இன்னிக்கு உசுரோடவே இருக்கேன்...'' என்றவர், உடைந்துபோய் அழுதார்.

தொடர்ந்து பேசிய சங்கரலிங்​கத்தின் வழக்கறிஞர் ஆறுமுகராஜ், ''சொத்துகளை அபகரிக்கும் நோக்கத்​துடன் எதிர்த் தரப்பினர் இப்படி செயல்பட்டு இருக்காங்க. அதனால் இந்த விவகாரம் பற்றி கமிஷனரிடம் புகார் செய்திருக்கோம். அதோடு, இதில் நியாயமான நடவடிக்கை எடுக்கக் கோரி முதல்வரின் தனிப்பிரிவுக்கும் மனு அனுப்பி இருக்கோம். இந்த விவகாரத்தில் எங்கள் பக்கம் உண்மை இருப்பதால், நியாயம் கிடைக்கும் என்று நம்பு​கிறோம்...'' என்றார்.

சித்திரைப்பாண்டியன் தரப்பில் பேசினோம். ''சங்கரலிங்கத்துக்கு கந்து வட்டிக்கு

சொத்தைப் பறிகொடுத்து, திருட்டுப் பட்டம் சுமந்து...

5 லட்சம் கொடுத்ததாகச் சொல்வது பொய்.

சொத்தைப் பறிகொடுத்து, திருட்டுப் பட்டம் சுமந்து...

3 லட்சம் மட்டுமே கடன் வாங்கினார். அவருடைய வீட்டுக்கான கிரயமாக கொம்பை​யாவிடம் இருந்து

சொத்தைப் பறிகொடுத்து, திருட்டுப் பட்டம் சுமந்து...

12 லட்சம் பெற்றார். வீட்டின் கிரயத்தின் மூலம் அவருக்குச் சேரவேண்டிய

சொத்தைப் பறிகொடுத்து, திருட்டுப் பட்டம் சுமந்து...

3 லட்சம் ரூபாயை கொம்பையாவிடம் வாங்கிக் கொள்ளும்படி சித்திரைப்​பாண்​டியனுக்கு பவர் கொடுத்திருந்தார். ஆனால், இப்போது இது மட்டும் இல்லாமல், வெளியில் பலரிடமும் வாங்கி இருக்கும் கடனையும் திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றும் நோக்கத்தில் இப்படி ஒரு ஆதாரமற்ற குற்றச்சாட்டை சொல்கிறார். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளோம்!'' என்றார்கள்.

இந்த விவகாரத்தில் பாரபட்சம் இல்லாமல் விசாரித்து, நிஜத்தின் திசையில் நிற்கவேண்டியது காவல் துறையின் கடமை.

- ஆண்டனிராஜ்

படங்கள்: எல்.ராஜேந்திரன்