Published:Updated:

நேற்று ஜெயலட்சுமி... இன்று நாகராணி!

நடுக்கத்தில் மதுரை போலீஸ்

##~##
நேற்று ஜெயலட்சுமி... இன்று நாகராணி!

'போக்கிரி’ படத்தில் லாரியில் ஒழுகும் தண்ணீரை அடைக்க முயன்று, மொத்தத்தையும் திறந்துவிட்டுத் திருதிருவென விழிப்பாரே வடிவேலு, அப்படி ஒரு நிலைக்கு ஆளாகி இருக்கிறார்கள் மதுரை போலீஸார். இது பெண் விவகாரம் என்பதால் மதுரையே குலுங்கிக் கிடக்கிறது! 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மதுரை ஆரப்பாளையம் குரு தியேட்டர் சந்திப்பில் போலீஸ் சீருடையுடன் நின்றுகொண்டு இருந்தார் ஓர் இளம் பெண். அந்த வழியாக வந்த போலீஸ்காரர் ராஜேஷ் என்பவர் சந்தேகப்பட்டு விசாரித்து, டுபாக்கூர் போலீஸ் என்பதைக் கண்டுபிடித்தார். உடனே இந்த விஷயத்தை போன் போட்டு உயர் அதிகாரி​களுக்குத் தெரிவிக்க... அடுத்து நடந்த சம்பவங்கள் அதைவிட செம கூத்து!

நேற்று ஜெயலட்சுமி... இன்று நாகராணி!

போலீஸ்காரர் ராஜேஷ் கொடுத்த தகவலை அடுத்து, அந்தப் பெண்ணை ஸ்டேஷனுக்கு வரவழைத்தார் கரிமேடு போலீஸ் ஸ்டேஷன்இன்ஸ்​பெக்டர் அசோகன். அந்தப் பெண்ணை விசாரிக்கும் முன்பாகவே ஸ்டேஷன் போலீஸார் பத்திரிகை​யாளர்களுக்கும் போன் போட்டு, போலி பெண் போலீஸைப் பிடித்து இருப்பதாகச் சொல்லிவிடவே... மொத்த பத்திரிகையாளர்களும் ஸ்டேஷனில் ஆஜர்.

'படம் மட்டும் அப்புறம் எடுத்துக் கொள்ளலாம்’ என்று கூறிய போலீஸார், பத்திரிகையாளர்கள் முன்னி​லையில் அந்தப் பெண்ணை விசாரிக்கத் தொடங்க... ''என் பேரு நாகராணிங்க. என்கூட மதுரையைச்

நேற்று ஜெயலட்சுமி... இன்று நாகராணி!

சேர்ந்த நிறைய ஏட்டுகள், எஸ்.ஐ-கள் நட்பா இருக்காங்க...'' என்று எடுத்த உடனேயே அணுகுண்டு வீசத்தொடங்க... விக்கித்துப் போன போலீஸார், 'சரி... சரி, விசாரணையை அப்புறம் வெச்சிக்கலாம். நீ உள்ளே போம்மா...'' என்று மரியாதையுடன் அவரை அனுப்பிவிட்டு, கையைப் பிசைந்தபடி பத்திரிகையாளர்களிடம், 'நீங்க நாளைக்கு வாங்க’ என்று சொல்லி அனுப்பினார்கள்!

அதன் பின் நடந்ததை நம்மிடம் விவரித்தார் ஸ்டேஷன் போலீஸ் சோர்ஸ் ஒருவர். ''அந்தப் பொண்ணு பேரு சுதா என்கிற நாகராணி. விசாரணையில எடுத்த எடுப்புல அந்தப் பொண்ணு, 'புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டரோட ஜீப் டிரைவர் ராஜேஷ் என்னை ஒரு நாள் அழைத்தார்.  அவர்கூட போகாததால் என்னை இப்படி மாட்ட விட்டுட்டார். காக்கைப்பாடினியார் மாநகராட்சிப் பள்ளியில ஒன்பதாவது வரைக்கும் படிச்சேன். அதுக்கப்புறமா ஏழெட்டு வருஷங்களா சும்மாதான் இருக்கேன். ஒரு வருஷத்துக்கு முன்னாடி மதுரை ஆறாவது பட்டாலியன்ல இருந்த முத்துக்குமாரை காதலிச்சேன். பல இடங்களுக்குப்போய் வந்தோம். அதுல கர்ப்பமாகிட்டேன். அவரே என்னை மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போய் மூணு மாச கர்ப்பத்தை கலைச்சார்.

கொஞ்ச நாள் கழிச்சு அவர் தன்னோட நண்பர்களான கார்த்திக், பிரகாஷ், வழிவிட்டான் ஆகியோரை அறிமுகப்படுத்தினார். அவங்களும் போலீஸ்தான். அவங்ககூடயும் ஜாலியா இருந்தேன். பல முறை நாங்க நாலு பேரும் ஒரே ரூமில் குரூப்பா தங்கி இருந்தோம். இந்த விஷயம் என் வீட்டுக்குத்

நேற்று ஜெயலட்சுமி... இன்று நாகராணி!

தெரிஞ்சதும் என்னை விரட்டி  விட்டுட்டாங்க. போலீஸ்காரங்க தொடர்பால பல ஏட்டுங்க, எஸ்.ஐ-கள் பழக்கமும் ஏற்பட்டுச்சு. ஆனா, அவங்க பேர் எல்லாம் எனக்கு ஞாபகம் இல்லை. ஆனா, அந்த ராஜேஷ்தான் இப்படி என்னை ஏமாத்தி மாட்டி விட்டுட்டான்.

முதல்ல அவனை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டுலதான் பார்த்தேன். 'என்னம்மா தனியா நிக்கிற?’ன்னு விசாரிச்சவன்,

நேற்று ஜெயலட்சுமி... இன்று நாகராணி!

50 கொடுத்திட்டு மொபைல் நம்பரையும் எழுதித்தந்தான். அவன் கூப்பிட்டப்ப எல்லாம் போனேன். இப்ப எனக்கு உடம்புக்கு சுகமில்லை. அதனால வரமாட்டேன்னேன். அதுக்கு இப்படி என்னை மாட்டிவிட்டுட்டான் என்று சொன்னாள்...'' என்றார்.

பிறகு, அந்தப் பெண்ணை அண்ணாநகர்போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச்​சென்றார்கள். உதவி கமிஷனர் வெள்ளத்துரை சீரியஸாக விசாரிக்க... இன்னும் பல மோசமான விஷயங்கள் வெளியே வந்தனவாம். இது குறித்து வெள்ளத்​துரையிடம் பேசினோம். 'ஆரப்பாளை​யம் பஸ்நிலையம் அருகே ஒரு பெண் போலீஸ் வேடமிட்டு, பொதுமக்களிடம் வசூல் வேட்டை நடத்தியதாகவும், மக்களே அந்தப் பெண்ணை பிடித்து வைத்திருப்பதாகவும் எனது பழைய டிரைவர் ஒருவருக்கு போனில் சொல்லி இருக்கிறார் போலீஸ்காரர் ராஜேஷ். உண்மையில் நடந்தது வேறு. விசாரணையில், அந்த ராஜேஷ் உட்பட பல போலீஸாருக்கும், தலைமைக் காவலர்களுக்கும் அந்தப் பெண்ணுடன் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்...'' என்றார்.

கரிமேடு இன்ஸ்பெக்டர் அசோகனை சந்தித்தோம். 'அந்தப் பொண்ணோட அக்கா போலீஸ் கான்ஸ்டபிள் செலக்​ஷனுக்கு போய் ரிஜெக்ட் ஆகி இருக்குது. இந்தப் பெண்ணுக்கும் போலீஸ் ஆகணும்னு ஆசை. அதனால போலீஸ் யூனிஃபார்ம் தைச்சு இருக்கு. பஸ்ல இலவசமா போகலாம்; ரோட்டுல கம்பீரமா நடக்கலாம்ங்கிறதைத் தவிர அந்தப் பொண்ணு எந்த வகையிலும் யூனிஃபார்மை மிஸ்யூஸ் பண்ணலை. வயசும் சின்ன வயசு. அதனால ஆள்மாறாட்டம், போலீஸ் சீருடையை தவறாகப் பயன்படுத்தியது போன்ற பிரிவுகளில் வழக்குப் போட்டு கைது பண்ணினோம். பொதுவாகச் சின்ன வயசுப் பொண்ணுங்க, மற்றும் விலைமாதர்களை போட்டோ எடுக்க அனுமதிக்கக் கூடாதுங்கிறது நீதிமன்ற உத்தரவு. அதனாலதான் படம் எடுக்க அனுமதிக்​கலை...'' என்று சட்டப்படி பேசினார் அவர்!

விசாரணை தொடர்ந்தால் இன்னும் என்னென்ன பூதங்கள் எல்லாம் வெளியே வரக் காத்திருக்கின்றனவோ!

- கே.கே.மகேஷ்,  

படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார்