Published:Updated:

பேங்க் மேனேஜரை மிரட்டினாரா தி.மு.க. சேர்மன்?

ராணிப்பேட்டை ரகளை

பிரீமியம் ஸ்டோரி
##~##
பேங்க் மேனேஜரை மிரட்டினாரா தி.மு.க. சேர்மன்?

''தி.மு.க-வினர் மீது தேவை இல்லாத பொய் வழக்குகளை அ.தி.மு.க. அரசு போட்டுக்கொண்டு இருக்கிறது. நாங்கள் எதனைக் கண்டும் பயப்பட மாட்டோம்!'' என பொதுமேடைகளில் கர்ஜித்து வருகிறார் ஸ்டாலின். இந்த நிலையில், தி.மு.க-வை சேர்ந்த ராணிபேட்டை நகராட்சி சேர்மன் கிருஷ்ணமூர்த்தியை போலீஸ் கைது செய்து, வேலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளது! ராணிப்பேட்டையில் உள்ள விஜயா வங்கி மேலாளரையும் வங்கி ஊழியர்களையும் மிரட்டியதாகத்தான் இவர் மீது வழக்கு. 

இதுகுறித்து, ராணிப்பேட்டை விஜயா வங்கி ஊழியர்களிடம் விசாரித்தோம்.

''இந்த வங்கி இருக்கும் காம்ப்ளக்ஸ், சேர்மன் கிருஷ்ணமூர்த்திக்குச் சொந்தமானது. இரண்டு வருடங்களுக்கு முன் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும்

பேங்க் மேனேஜரை மிரட்டினாரா தி.மு.க. சேர்மன்?

45 லட்சம் வங்கியில்  கடன்

பேங்க் மேனேஜரை மிரட்டினாரா தி.மு.க. சேர்மன்?

வாங்கினார். அந்தக் கடன் தவணைகளை முறையாகச் செலுத்தாமல் இருந்தார். தவணை செலுத்தாத நபர்களுக்குக் கடிதம் மூலம் தகவல் கொடுப்போம். அதுவும் ஒரு எல்லை வரைதான். பிறகு  நோட்டீஸ் அனுப்புவோம். இது போலத்தான் வங்கி விதிமுறைப்படி கிருஷ்ணமூர்த்திக்கும் நோட்டீஸ் அனுப்பினோம். ஆனால், கடந்த 11-ம் தேதி நாங்கள் அனுப்பிய நோட்டீஸை எடுத்துக்கொண்டு கோபமாக எங்க ஆபீஸுக்கு வந்தார். நேராக மேனேஜர் அறைக்குப் போய், கண்டபடி கத்த

பேங்க் மேனேஜரை மிரட்டினாரா தி.மு.க. சேர்மன்?

ஆரம்பித்தார். நாங்கள் நிலைமை மோசமாவதைக் கண்டு, உள்ளே சென்று அவரை சமாதானப்படுத்தி, விஷயத்தை விளக்கினோம்.ஆனாலும் அவருக்குக் கோபம் குறையவில்லை. பக்கத்தில் இருந்த நோட்டு, பேப்பர் போன்றவற்றைத் தூக்கி வீச ஆரம்பித்தார். மிகவும் மோசமான கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தினார். இனி சரிப்பட்டு வராது என்ற நிலையில்தான் நாங்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தோம்...'' என்றனர் வெறுப்பாக.

பேங்க் மேனேஜரை மிரட்டினாரா தி.மு.க. சேர்மன்?

ராணிப்பேட்டை அ.தி.மு.க-வினரோ, ''கிருஷ்ணமூர்த்தி மீது இப்போதுதான் முதல் புகார் பதிவாகி இருக்கிறது. இனிமேல் எல்லோரும் பயப்படாமல் வெளியேவந்து உண்மையைச் சொல்வார்கள். கடந்த தி.மு.க. ஆட்சியில் இவர் பண்ணாத அராஜகம் இல்ல. கந்துவட்டி, பஞ்சாயத்து, நிலங்களை அபகரிப்பது என எல்லாக் கெட்ட பேரும் இவர் மேல் இருக்கிறது. நாங்களும் போதுமான ஆதாரங்​களை வைத்துள்ளோம்!'' என்றனர் உறுதியாக.

கைது குறித்து தி.மு.க. உடன்பிறப்புகளிடம் பேசியபோது, ''அவர் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அப்பட்டமான பொய். அன்று அவர் வங்கியில் எந்தத் தகராறும் செய்யவில்லை! அவரை மாட்டி விடுவதற்காகப் போடப்பட்ட நாடகம்!'' என்கிறார்கள்.

ராணிப்பேட்டை டி.எஸ்.பி. லாவண்​யாவிடம் பேசினோம். ''மிரட்டல், அரசு ஊழியரைப் பணி செய்யவிடாமல் தடுத்தல் போன்ற பல்வேறு பிரிவுகளில் வழக்குப் போட்டு உள்ளோம். யாரையும் பழிவாங்க எடுக்கப்பட்ட நடவடிக்கை கிடையாது!'' என்றார்.

- கே.ஏ.சசிகுமார்

படங்கள்: ச.வெங்கடேசன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு