Published:Updated:

சின்ன மார்வாடி... பெரிய மார்வாடி!

கோலாரில் சீறிய சீமான்!

பிரீமியம் ஸ்டோரி
##~##
சின்ன மார்வாடி... பெரிய மார்வாடி!

டந்த 10-ம் தேதி, கர்நாடக மாநிலம் கோலார் தங்கவயலில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக மொழிப்போர் தியாகிகள் பொதுக் கூட்டம் முனிசிபல் மைதானத்தில் நடைபெற்றது. 

இந்தக் கூட்டத்தில் பேசிய பேராசிரியர் பால்​நியூமன், ''இலங்கையில் நடந்த இனப் படுகொலையை உலக அரங்குக்குக் கொண்டு சென்றதில் சிங்கள அறிவுஜீவிகளுக்குப் பெரும் பங்கு இருக்கிறது. ஏனென்றால், தமிழ் மக்கள் மீது சிங்கள ராணுவம் செய்த கொடூரத்துக்குப் பரிகாரம் தேட முனைகிறார்கள் அவர்கள். அவர்களிடம் நெருங்கிப் பழகும்போது ஒரு விதக் குற்றஉணர்ச்சி தெரிகிறது. ஆனால், இந்தியாவின் பத்திரிகை ஜாம்பவான் என சொல்லிக் கொள்பவர்கள், அங்குள்ள வதை முகாம்களை பார்த்துவிட்டு, 'உலகிலேயே இது போன்ற வசதியான முகாமை பார்த்ததே இல்லை’ என புளுகுகிறார்கள். நிராயுதபாணியாகப் போராடிய தமிழர்களுக்கு ஆயுதம் கொடுத்து சண்டை போட வைத்ததே முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்திதான். இறுதியாக அவர்களை அழிக்க உதவியதும் இந்தி​யாதான். இந்தியாவின் சுயநலத்துக்காக ஓர் இனத்தையே பலி கொடுத்தது எந்த விதத்தில் நியாயம்?'' என வெடித்தார்.  நிறைவில் பேசிய சீமான், ''மண்ணைப் பொன்னாக்கிய தங்கவயல் தமிழர்களின் வாழ்க்கை மண்ணாகிப் போயிருக்கிறது! உலகில் பாம் போட்டவன் பயங்கரவாதி என்றால், பட்டினி போட்டவன் சர்வதேச பயங்கரவாதி. அப்படிப் பார்க்கும்போது தங்கவயல் தமிழர்களைப் பட்டினி போட்ட இந்தியாதான், சர்வதேச பயங்கரவாதி. நாங்கள் அகிம்சையாகப் போராடிப் பார்த்துவிட்டு, கைகளில் கருவி ஏந்தினோம். அது பயங்கரவாதம் என்றால்... 60 ஆண்டு காலப் போராட்டத்தை அழித்தது என்ன வாதம்?

சின்ன மார்வாடி... பெரிய மார்வாடி!

கர்நாடகத்தில் மானமுள்ள கன்னடர்கள் வாழ்வதால்தான், அரசு அலுவலகங்களின் முன்பும் கன்னடக் கொடி பறக்கிறது, அதன் பிறகுதான் தேசியக் கொடி.

ஆனால், தமிழ் நாட்டில்...? இதைப் பேசினால்கூட தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாயும். எம் இனமே அழிந்தபோது எந்த இந்தியனும் வந்து கேட்கவில்லை... எந்த திராவிடனும் கேட்கவில்லை... நாம்தான் இன்னும் திராவிடன் என்று சொல்லிக்கொண்டு திரிகிறோம். நாம் இனி இந்தியனில்லை... திராவிடன் இல்லை... நாம் தமிழன்.

ஒரு சாதித்​தலை​வர் தன்னு​டைய சாதிக்காரர்களைத்  திரட்டி கருணா​நிதியிடம் ஓடிப்போய் இரண்டு ஸீட்கள் வாங்குகிறார். இதேகாரியத்தை இன்னொரு சாதித்தலைவரும் பார்க்கிறார்.  சின்ன மார்வாடியான கருணாநிதியோ, சோனியா என்கிற பெரிய மார்வாடியிடம் ஒட்டுமொத்த தமிழினத்தையே அடகு வைக்கிறார். இப்படி, காலம்காலமாகத் தமிழரின் தலையெழுத்தை மாற்றானிடமே கொடுத்து வீணாகப் போனது  போதும். இனி வாழ்வது யாராக இருந்தாலும், ஆள்வது தமிழனாக இருக்கட்டும். அது நாம் தமிழராக இருக்கட்டும்!'' என்று முடித்தார்.

ஆக, சீமானுக்கும் நாடாளும் கனவு வந்து​விட்டது.

- இரா.வினோத்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு