Published:Updated:

தீராத சிக்கலில் பழங்குடி மக்கள்!

சத்தியமங்கலம் சோகம்

பிரீமியம் ஸ்டோரி

'வீரப்பன் தேடுதல் வேட்டை தொடங்கி இன்று வரையிலும் சத்தியமங்கலம் வனப் பகுதி மக்களுக்குப் பிரச்னைகள் தொடர்கதையாகவே இருக்கின்றன. இப்போது அதிரடிப் படையினரால் பழங்குடி மக்கள் பெரும் சிக்கலில் இருக்​கிறார்கள்’ என்று ஜூ.வி. ஆக்ஷன் செல்லில் (044-42890005) தகவல் வரவே, விசாரித்தோம்.

தீராத சிக்கலில் பழங்குடி மக்கள்!

சத்தியமங்கலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மோகன்குமார், ''2008-ம் ஆண்டு

##~##
சத்தியமங்கலம் வனப் பகுதி வன விலங்குகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டபோது, வனத்தைச் சார்ந்து வாழும் பழங்குடி மக்களுக்கு ஏகப்பட்ட நெருக்கடிகள். இந்த மக்களின் கால்நடைகளை மேய்க்கத் தடை போட்டார்கள். இதனால், இவர்களின் வாழ்க்கை கால்நடைகளைப் போலவே நொண்டிக்கொண்டு இருக்கிறது. அடிப்படை வசதிகளான சாலை, மின்சாரம் போன்றவற்றை நிறைவேற்றத் தடை செய்துவிட்டார்கள். இங்கு கடம்பூர் மலைப் பகுதியில் மல்லியம்மன் துர்க்கம் என்ற வன செட்டில்மென்ட் கிராமத்தில் சாலை வசதியே இல்லை. டி.என்.பாளையம் வனச்
தீராத சிக்கலில் பழங்குடி மக்கள்!
சரகத்துக்குட்பட்ட விளாங்கோம்பையில் காட்டாற்று வெள்ளத்தால் காணாமல் போன நான்கு பாலங்களைக் கட்டிக்​கொடுக்கவே இல்லை. புலிகள் சரணா​லயத்துக்காக விதிக்கப்படும் நிபந்தனைகளில், பழங்குடி மக்கள் தங்கள் வாழும் உரிமை மற்றும் வாழ்வு ஆதாரத்தையே இழந்து தவிக்கின்றனர். இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை குறைவதால், அவற்றைப் பாதுகாக்க சரணாலயங்கள் அமைப்பது சரிதான். அதற்காக பழங்குடி மக்களின் வயிற்றில் மண் அள்ளிப்போடுவதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். ஈரோடு மண்டல வனப் பாதுகாவலர் அருண், வனப் பாதுகாவலராக இல்லாமல் வனத்தை ஆள்பவராகவே இருக்கிறார்; பழங்குடி மக்கள் மீது ஆதிக்கம் செலுத்த ஆசைப்படுகிறார். அவரிடம் இருக்கும் ஆதிக்க சிந்தனைதான் இப்​போது ஏற்பட்டுள்ள பிரச்னைக்குக் காரணம்!'' என்றார் ஆதங்கத்தோடு.

ஈரோடு மாவட்ட வன அலுவலர் சதீஷ்குமாரைத் தொடர்பு​கொண்​டோம். ''சத்தியமங்கலம் வனப் பகுதி புலிகள் சரணாலயம் ஆக்கப்படுவதற்கான முன்மொழிவுதான் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. இந்தப் பகுதியில் 18 புலிகளே இருப்பதாக கணக்கிடப்பட்டு உள்ளது. இந்த சரணலாயத்துக்கும், மக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் எவ்விதத் தடையும் இல்லை. அவர்களின் வாழ்க்கை நொடிந்து போய்விட்டது என மற்றவர்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. நிச்சயம் பழங்குடி மக்களை எங்கள் துறையே பாதுகாக்கும். அவர்களும், வனத்தைக் காக்க வனத் துறையினருக்கு தோள் கொடுக்க வேண்டும்!'' என்றார்.

பழங்குடி மக்களும் வனத்தில் ஒரு பகுதியே என்பதை அரசு மறந்துவிடக் கூடாது.

- கி.ச.திலீபன், படங்கள்:க.தனசேகரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு