Published:Updated:

கான்ட்ராக்டரை மிரட்டினாரா மதுரை மூர்த்தி!

கான்ட்ராக்டரை மிரட்டினாரா மதுரை மூர்த்தி!

பிரீமியம் ஸ்டோரி
##~##
கான்ட்ராக்டரை மிரட்டினாரா மதுரை மூர்த்தி!

துரை புறநகர் மாவட்ட தி.மு.க. செயலாளர் மூர்த்தி மீது பகீர் புகார் ஒன்று கிளம்பி உள்ளது! 

புகார் கொடுத்த சௌந்திர ராஜனைச் சந்தித்தோம். நெடுஞ்​ சாலைத் துறை, பொதுப் பணித் துறையின் முதல் வகுப்பு ஒப்பந்தக்காரர் இவர்.

'நான் 25 வருடங்களாக கான்ட்ராக்ட் தொழில் செய்கி​றேன். அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் எங்களிடம் சதவிகிதக் கணக்கில் கமிஷன் கேட்பது வாடிக்கைதான். ஆனால், கடந்த தி.மு.க. ஆட்சியில் வேலை கொடுக்கும் முன்பே, கமிஷன் வாங்கினார்கள். மதுரை புறநகர் மாவட்டத்தில் நடக்கும் அனைத்து வேலைகளுக்கும் மாவட்ட தி.மு.க. செயலாளர் மூர்த்திதான் பொறுப்பு. அவர் சொல்லாமல் யாருக்கும் கான்ட்ராக்ட் கிடைக்காது என்பதால், அவரைப் போய்ப் பார்த்தேன்.

'சும்மா வந்து கேட்டா எப்படி? பணம் கொடுத்தா, வேலை ஒதுக்கித் தர்றேன்’னு சொன்னார். அதை நம்பி,

கான்ட்ராக்டரை மிரட்டினாரா மதுரை மூர்த்தி!

2010 மார்ச் மாதம் அலங்காநல்லூரில் இருக்கும் என் சொத்தை அடகு வத்து

கான்ட்ராக்டரை மிரட்டினாரா மதுரை மூர்த்தி!

12 லட்சத்தோடு அய்யர் பங்களாவில் இருக்கும் அவருடைய வீட்டுக்குப் போனேன். வீட்டுக்குள்ளே தனியாகக் கூப்பிட்டு பணத்தை வாங்கிக்கொண்டார்.

இப்ப வேலை வரும்... அப்ப வரும்னு காத்துக்கிட்டே இருந்தேன். எதுவும் நடக்க​வில்லை. அதுக்குள் தேர்தல் வந்துவிட்டதால், 'அண்ணே பணத்தையாவது கொடுங்க’ன்னு கேட்டேன். 'அடுத்தும் நம்ம ஆட்சிதான். பொறுமையா இரு’னு சொன்னார். ஆட்சி மாறியதும், பயந்து போய்

கான்ட்ராக்டரை மிரட்டினாரா மதுரை மூர்த்தி!

பணத்தைக் கேட்டு அவசரப்படுத்தினேன். உடனே, 'ஆட்சி மட்டும்​தான்யா போயிருக்கு. நான் இன்னும் மாவட்டச் செயலா​ளர்ங்​கிறது ஞாபகத்தில் இருக்குதுல்ல? ஒழுங்கா ஓடிப்போயிடு, இல்லைன்னா கொன்னுப்புடுவேன்!’னு மிரட்டினார்.

அவரோடு மல்லுக்கட்டி பணத்தை வாங்கும் அளவுக்கு எனக்கு ஆள் பலம் கிடையாது. அம்மா மீது முழு நம்பிக்கை வைத்துத்தான், எஸ்.பி-யிடம் மனு கொடுத்து இருக்கிறேன்...' என்றார் கண் கலங்கியபடி.

இதுபற்றி மூர்த்தியிடம் கேட்டபோது, 'சௌந்திர ராஜனா? அப்படி ஒரு ஆளை நான் பார்த்ததும் கிடையாது. கேள்விப்பட்டதும் இல்லை. நானே ஒரு கான்ட்ராக்டர். நான் எப்படி வெளியாளுக்கு வேலை கொடுப்பேன்? இதில் ஏதோ குழப்பம் இருக்குன்னு நினைக்கிறேன். ஒரு தடவைக்கு இன்னொரு தடவை விசாரிச்சுப் பாருங்க...' என்றார்.

எஸ்.பி. ஆஸ்ரா கர்க்கிடம் கேட்டோம். 'கான்ட்ராக்டர் சௌந்திரராஜன் கொடுத்த புகாரை, விசாரணைக்காக அனுப்பி இருக்கிறேன். புகார் உறுதியானால், நிச்சயம் நட​வடிக்கை எடுப்பேன்!' என்றார் உறுதியான குரலில்.

- கே.கே.மகேஷ்

படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு