Published:Updated:

100 சான்றிதழ்களுக்கு 100 தங்க பிஸ்கட்கள்

சிக்கலில் நெல்லை பல்கலை

பிரீமியம் ஸ்டோரி
##~##
100 சான்றிதழ்களுக்கு 100 தங்க பிஸ்கட்கள்

'நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்​கழகத்தின் தொலைதூரக் கல்வி மையத்தில் பி.எட். சேர்க்கையில் மட்டும் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்திருக்கிறது!’ என்று தொலைதூரக் கல்வி இயக்கத்தின் இயக்குநராகப் புதிதாக பொறுப்பேற்ற ரமேஷ்,  புகார் செய்து உள்ளார்.

 அவரை சந்தித்தோம். ''இந்த பல்கலைக்கழகத்தில் 2010-11-ம் கல்வியாண்டில் பி.எட். மாணவர் சேர்ககையில் சேர்வதற்கு தமிழக கல்லூரிக் கல்வித் துறை விதிமுறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை. மொத்தம் 500 மாணவர்களைச் சேர்ப்பதில் ஒவ்வொரு பாடத்துக்கும் இத்தனை பேர் என்ற விகிதத்தில் இடங்களை ஒதுக்க வேண்டும்.

கணிதத்துக்கு 100, தமிழுக்கு 25 என்று இடங்கள் ஒதுக்கி இருக்க வேண்டும். ஆனால், கணிதத்துக்கு 14 மட்டுமே ஒதுக்கி தமிழுக்கு 376 ஸீட் ஒதுக்கி இருக்கிறார்கள். இந்தக் குறைபாடுகளைக் கண்டுபிடித்து சட்டத் துறை செயலாளர் கதிர்வேலு மற்றும் உயர் கல்வித் துறை செயலாளர் கண்ணன் ஆகியோரிடம் புகார் செய்து உள்ளேன். இதனால் எனக்கு நள்ளிரவில்கூட போனில் கொலை மிரட்டல் வருகிறது...'' என்றார் அச்சத்துடன்.

100 சான்றிதழ்களுக்கு 100 தங்க பிஸ்கட்கள்

கல்லூரி வட்டாரத்தில் பேசிய சிலர், ''பி.எட். சேர்க்கையில் மட்டும்

100 சான்றிதழ்களுக்கு 100 தங்க பிஸ்கட்கள்

10 கோடியைத் தாண்டி சிலர்

100 சான்றிதழ்களுக்கு 100 தங்க பிஸ்கட்கள்

சம்பாதித்து விட்டார்கள். பி.எட். மாணவர் சேர்க்கைக்குக் கடைசி தேதி 2010 டிசம்பர் 22 என பத்திரிகைகளில் விளம்பரம் செய்தார்கள்.

ஆனால், நவம்பர் 18-ம் தேதியே 500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுவிட்டார்கள். மேலும் மூன்று மாவட்ட மாணவர்களின் நலனில் அக்கறை காட்ட வேண்டிய பல்கலைக்கழகம், நாடு முழுவதும் மாணவர்களுக்கு பி.டெக்., எம்.டெக், உள்ளிட்ட படிப்புகளை நடத்துவதாகக் கூறி, தனியாரிடம் அந்த பொறுப்பைக் கொடுத்து உள்ளது. அவர்களும் லட்சக்கணக்கில் வசூல் செய்கிறார்கள்.

அரபு நாடு ஒன்றில் செயல்பட்டு வரும் பல்கலைக்கழகத் தொடர்பு மையத்துக்கு, பெயர் எழுதப்படாத 100 சான்றிதழ்கள் அனுப்பப்பட்டு, அங்கே கூவிக்கூவி விற்பனை செய்து இருக்கிறார்கள். இதற்கு பிரதிபலனாக 100 தங்க பிஸ்கட்கள் கொடுக்கப்பட்​ட​தாகச் சொல்கிறார்கள்...'' என்று ஆக்ரோஷப்பட்டார்கள்.

இதுகுறித்து பல்கலைக் கழகத்தின் பதிவாளரான மாணிக்கத்திடம் பேசினோம். ''இந்த பல்கலைக்கழகத்துக்கு இழுக்கு ஏற்படும் வகையில் நான் பத்திரிகைகளிடம் எதையும் பேச விரும்பவில்லை!'' என்றார்.

இந்த விவகாரம் குறித்து உயர் கல்வித் துறை அமைச்சர் பழனியப்பனிடம் கேட்டதற்கு, ''மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் சபாபதி மோகன் துணைவேந்தராக இருந்த சமயத்தில் நிறைய முறைகேடுகள் நடந்திருக்கிறது. அது பற்றி கடந்த வாரத்தில் எனக்கு தகவல் கிடைத்தது. கல்வித் துறை அதிகாரிகளை கொண்டு விசாரித்து வருகிறோம். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டனை அனுபவித்தே தீர வேண்டும்!'' என்றார்.

- ஆண்டனிராஜ்

படங்கள்: எல்.ராஜேந்திரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு