Published:Updated:

முதியோர் உதவித்தொகை வாங்கியவருக்கு வயது 20

வேலூர் புரோக்கர்கள் அட்டூழியம்

பிரீமியம் ஸ்டோரி
##~##
முதியோர் உதவித்தொகை வாங்கியவருக்கு வயது 20

முதியோர் மற்றும் கணவரை இழந்தவர்களுக்கு அரசு உதவித் தொகை வழங்குகிறது. ஆனால், பெரும்பாலான இடங்களில் புரோக்கர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் பிடியில் இந்தத் திட்டங்கள் சிக்கி இருப்பதால், ஏராளமான முறைகேடுகள்! வேலூர் மாவட்டத்தில் காட்பாடி, கொணவட்டம், மேல்மொணவூர் போன்ற பகுதிகளில் இந்தத் திட்டத்தில் எக்கச்சக்கத் தில்லுமுல்லுகள் நடக்கின்றன என்று ஜூ.வி. ஆக்ஷன் செல் எண்ணுக்குத் (044-42890005) தகவல் கிடைத்தது. விசாரணையில் இறங்கினோம். 

மேல்மொணவூர் சென்று முக்கியப் பிரமுகர்களிடம் பேசினோம். ''எங்கள் ஊரில் ஏராளமானவர்கள் முதியோர் உதவித் தொகை பெற்று வருகின்றனர். இவர்களில் 50% பேர் 20 வயதில் இருந்து 30 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதுதான் அதிர்ச்சி. 60 வயதுக்கு மேற்பட்டோர்தான் முதியார் உதவித் தொகை பெறத் தகுதியானவர்கள் என்பது அரசு விதிமுறை. ஆனால், வேலூர் மாவட்டத்தில் இந்த விதிமுறைகள் காற்றில் பறக்கின்றன. உதவித் தொகை வாங்கித் தருவதற்கு என்றே சில புரோக்கர்கள்

முதியோர் உதவித்தொகை வாங்கியவருக்கு வயது 20

இருக்கிறார்கள். அவர்களிடம்

முதியோர் உதவித்தொகை வாங்கியவருக்கு வயது 20

4,000 முதல்

முதியோர் உதவித்தொகை வாங்கியவருக்கு வயது 20

6,000 வரை கொடுத்தால் போதும். அவர்களே ஆவணங்களைத் தயார்செய்து உதவித் தொகை பெறுவதற்கான உத்தரவும் வாங்கித் தந்துவிடுகிறார்கள். இவற்றைக் கண்காணிக்க வேண்டிய தாசில்தார் என்ன செய்கிறார் என்று தெரியவில்லை. மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை முதல், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் உதவித் தொகை வரை எல்லாவற்றுக்கும் லஞ்சம் கொடுத்தால் போதும், தகுதி இருக்கிறதோ... இல்லையோ உதவித் தொகை பெறுவதற்கான உத்தரவு கிடைத்துவிடுகிறது!'' என்றனர்.

அரசின் எந்த ஒரு திட்டத்திலும் பயன் பெற வேண்டும் என்றால், கிராம நிர்வாக அலுவலரின் சான்றிதழ் அவசியம். அதனால், இது குறித்து வி.ஏ.ஓ-க்கள் என்ன சொல்கின்றனர் என விசாரித்தோம்.

பெயர் வெளியிட வேண்டாம் என்ற கோரிக்கை யோடு நம்மிடம் பேசியவர்கள், ''உதவித் தொகை வழங்கலாம் எனப் பரிந்துரை செய்து, வி.ஏ.ஓ. கையெழுத்துப் போட வேண்டிய இடத்தில், அரசியல் செல்வாக்கு உள்ள புரோக்கர்களே வி.ஏ.ஓ-க்களின் போலிக் கையெழுத்தைப் போட்டு விடுகின்றனர். ரப்பர் ஸ்டாம்ப்பை அவர்களே செய்து வைத்து உள்ளனர். வேலூர் மாவட்டத்தின் பல கிராமங்கள் உண்மையில் எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. அரசியல்வாதிகள் விண்ணப்பங்களைக் கொண்டு வந்து, 'இங்கே கையெழுத்துப் போடுங்க!’ என்று அதிகாரமாகக் கேட்கிறார்கள். அது என்ன விண்ணப்பம் என்றுகூட எங்களைப் பார்க்கவிடுவது இல்லை. கையெழுத்துப் போடவில்லை என்றால், 'வி.ஏ.ஓ. ஆபீஸுக்கு ஒழுங்காக வருவது இல்லை... குடித்துவிட்டுத்தான் வருகிறார்’ என்று, கலெக்டருக்கு மனு அனுப்புகின்றனர்.

முதியோர் உதவித்தொகை வாங்கியவருக்கு வயது 20

காட்பாடி பகுதியில் நிலைமை மிக மோசம். கொணவட்டம் பகுதியில், கணவனால் கைவிடப்பட்

முதியோர் உதவித்தொகை வாங்கியவருக்கு வயது 20

டோருக்கான உதவித் தொகையை தகுதி இல்லாத பலர் வாங்கி உள்ளனர். இந்த விஷயம் மேல் அதிகாரிகள் வரை நிறையப் பேருக்குத் தெரியும். ஆனால், யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. உதவித் தொகை விவகாரத்தில் கிராம நிர்வாக அலுவலர்களின் கைகள் கட்டப்பட்டு உள்ளன. அரசியல்வாதிகள், அமைச்சர்கள் பேரைச் சொல்லி மிரட்டுகின்றனர். ஆட்சி மாறியும் காட்சி மாறாத விவகாரத்தில் இதுவும் ஒன்று.

வேலூரில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இது போன்ற புரோக்கர் வேலை செய்து வந்த ஒருவர், கண்ணமங்கலம் அருகே

முதியோர் உதவித்தொகை வாங்கியவருக்கு வயது 20

25 லட்சம் செலவில் வீடு கட்டி உள்ளார். இவ்வளவு பெரிய வீடு கட்டும் அளவுக்கு அவருக்கு எந்த வசதியும் கிடையாது. புரோக்கர் தொழில் செய்து சம்பாதித்தது மட்டுமே இவ்வளவு என்றால், உதவித் தொகை திட்டங் களில் முறைகேடு எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை யோசித்துப் பாருங்கள். வருவாய்த் துறையில் தரகர்களை ஒழித்தால்தான், அரசுத் திட்டங்கள் உரியவர்களுக்குச் சென்று சேரும். தாலுக்கா அலுவலகங்கள் புரோக்கர்களின் கூடாரங்களாக மாறிவிட்டன. புதிதாக நியமிக்கப்பட்டு உள்ள வி.ஏ.ஓ-க்கள் அரசியல்வாதிகளின் மிரட்டல்களால், வேலூர் மாவட்டத்தில் இருந்து வேறு மாவட்டங்களுக்கு மாறுதல் கிடைக்குமா என்று விசாரிக்கும் நிலைக்கு சென்றுவிட்டனர்!'' என்று ஆதங்கத்தைக் கொட்டினர்.

இதுபற்றி, வேலூர் தாசில்தார் புஷ்பராணியிடம் பேசினோம். ''நீங்கள் சொல்வதுபோன்று ஒரு புகார் எனக்கு இதுவரை வரவில்லை. நீங்கள் சொல்லித்தான் கேள்விப்படுகிறேன். மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகைத் திட்டத்தில் 18 வயது முதல் 65 வயது வரை உதவித் தொகை வழங்கப்படுகிறது. அதைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல், இளம் வயதினர் முதி யோர் உதவித் தொகை பெறுவதாகச் சொல்லி இருக்கலாம். எனது கண்காணிப்பில் எந்த தவறும் நடக்கவில்லை. இருந்தாலும் நான் விசாரிக்கிறேன். முதியோர் மற்றும் விதவை உதவித் தொகையை தகுதி இல்லாத யாராவது வாங்குவது தெரிந்தால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கிறேன்!'' என்றார்.

முறைகேடுகள் ஒரு புறம் இருக்கட்டும். இன்று கிராம நிர்வாக அலுவலரின் கையெழுத்தைப் போலியாகப் போடுபவர்கள், நாளை கலெக்டர் கையெழுத்தையும் போட மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? உடனே, அதிரடி நடவடிக்கைகள் தொடங்கட்டும்!

- கே.ஏ.சசிகுமார்

படங்கள்: ச.வெங்கடேசன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு