Published:Updated:

தொடருமா ராஜாவின் பார்வை?

ஆச்சர்யத்தில் மன்னார்குடி

பிரீமியம் ஸ்டோரி
##~##
தொடருமா ராஜாவின் பார்வை?

ட்சிக் கரை வேட்டி, தோளில் துண்டு, சுற்றிலும் ஏராளமான ஆதரவாளர்கள் என உலா வரும் எம்.எல்.ஏ-க்கள் மத்தியில்,  பேன்ட் - சர்ட், ஷூ, கையில் லேப்டாப் சகிதம் தொகுதிக்குள் வலம் வரும் தி.மு.க. எம்.எல்.ஏவான டி.ஆர்.பி.ராஜாவைப் பார்த்து ஆச்சர்யப்படுகிறார்கள் மன்னார்குடி மக்கள்! 

முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவின் மகனான ராஜா, லண்டனில் எம்.பி.ஏ. முடித்தவர். தஞ்சாவூர் புனல்குளத்தில் கிங்ஸ் பொறியியல் கல்லூரியை நிர்வகித்து வந்தவர், திடீரென அரசியல் அவதாரம் எடுத்து இருக்கிறார்.

'ராஜா எம்.எல்.ஏ. ஆனதும் மன்னார்குடி முழுவதும் ஆய்வு செய்தார். பஸ் ஸ்டாண்ட் பகுதி யில் உள்ள நகராட்சி இலவசக் கழிப்பிடத்தில் துர்நாற்றம் வீச, அதை உடனடியாகச் சுத்தம் செய்து தண்ணீர் வசதி செய்து தர நகராட்சி ஆணையரிடம் தெரிவித்தார். அந்த ஆணையர் அதற்கான முயற்சியில் இறங்கிய நேரத்தில் ஏனோ, அவர் இடமாற்றம் செய்யப்பட்டார். மன்னார்குடியில் இயங்கி வரும் அரசு நூலகம் 1956 முதல் இன்று வரை வாடகைக் கட்டடத்தில்தான் செயல்படுகிறது. அதனால், நகரின் மையப் பகுதியில் புதுக் கட்டடம் கட்ட முனைந்து இருக்கிறார் எம்.எல்.ஏ. இதற்கு என்ன முட்டுக்கட்டை வரப்போகிறதோ தெரியவில்லை...'' என்கிறார்கள் தி.மு.க-வினர்.

தொடருமா ராஜாவின் பார்வை?

மன்னார்குடியைச் சேர்ந்த கலைச்செல்வம், 'முதல் முறை பதவிக்கு வந்திருப்பதால், ராஜா உற்சாகமாக

தொடருமா ராஜாவின் பார்வை?

இருக்கிறார். ஆனால், தி.மு.க. எம்.எல்.ஏ-வாக இருப்பதால் அரசு உதவிகள் கிடைக்காது என்பதைப் புரிந்துகொண்டு, தனது பணத்தில் இருந்து வசதிகள் செய்யப் போவதாகச் சொல்கிறார். கடந்த காலத்தில் எம்.எல்.ஏ. அலுவலகம் பெரும்பாலும் பூட்டியே கிடக்கும். இப்போது அதைத் திறந்து வைத்து, அங்கே மனுக்கள் வாங்குவதற்காக ஒருவரை அமர்த்தி இருக்கிறார். 24 மணி நேரமும் தன்னை நேரடியாகத் தொடர்புகொள்ள பிரத்யேக மாக ஒரு செல்போன் நம்பரை அறிவித்து இருக்கிறார். கூடவே, ஒரு மின் அஞ்சல் முகவரியும், ஃபேக்ஸ் எண்ணும் கொடுத்து உள்ளார். சட்டமன்ற அலுவலகத்தில் வீடியோ கான்ஃபரன்சிங் வசதியும் செய்து உள்ளார்...' என்றார் பூரிப்போடு.

ராஜாவிடம் பேசினோம். 'ஒரு எம்.எல்.ஏ-வுக்கு இருக்கும் அதிகாரத்தை நல்லபடியாக முழுமையாகப் பயன்படுத்துவேன். நிச்சயமாக பணத் தேவைகள் எனக்குக் கிடையாது. தமிழ்நாட்டிலேயே மன்னார்குடியை முன்மாதிரி யான ஒரு சட்டமன்றத் தொகுதியாக மாற்ற முயற்சிக்கிறேன். அதிகாரிகள் ஒத்துழைப்பு தருவார்கள் என நம்புகிறேன். தொகுதிக்குள் எந்தப் பிரச்னை என்றா லும் என்னை யார் வேண்டு மானாலும் அணுகலாம்...' என்கிறார் பொறுப்போடு

அ.தி.மு.க தரப்போ, 'எந்தத் தொகுதியையும் முதல்வர் புறக்கணிக்க மாட் டார். நேற்று வரை அரசியல் பற்றித் தெரியாமல், அப்பா மூலம் திடீரென எம்.எல்.ஏ. ஆகி உள்ளதால் இந்த அலட்டல். இவரது நடவடிக்கைகள் விளம்பர நோக்கத்துக்காக மட்டும்தான்!' என்கின்றனர் கிண்டலாக.

ராஜாவின் நடவடிக்கை ஆரம்ப ஜோராக இல்லாமல், தொடர்ந்து நடந்தால்... தொகுதி மக்களுக்கு நல்லது!

- சி.சுரேஷ், படங்கள்: கே.குணசீலன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு