Published:Updated:

டார்ச்சர் போஜன்... நடுங்கும் மாணவிகள்!

கொந்தளிக்கும் கோத்தகிரி

பிரீமியம் ஸ்டோரி
##~##
டார்ச்சர் போஜன்... நடுங்கும் மாணவிகள்!

'உன் மகளும் எம் மகள்தான். பள்ளிக் குழந்தைகளைப் படுத்தியெடுக்கும் பாலியல் குற்றவாளி போஜனை (குற்ற எண்: 138/2011) படுஉக்கிரமாகத் தண்டிப்போம். உழைக்கும் மக்களே ஒன்று கூடுங்கள்!’ - ஜிலீர் பிரதேசமான கோத்தகிரியில், ரௌத்திர டெம்போவை டாப் கியருக்கு ஏற்றி இருக்கின்றன இதுபோன்ற போஸ்டர்கள். 

யார் இந்த போஜன்?

கோத்தகிரி அரசு மேல்நிலைப் பள்ளியில் வரலாறு பாடம் கற்பிக் கும் ஆசிரியர். ஓய்வு பெறும் வயதை நெருங்கிவிட்டவர், தன் பேத்தி போல் பாவிக்க வேண்டிய பள்ளி மாணவிகளிடம் படுகீழ்த்தரமாக நடந்துகொண்டதாக ஊரே குற்றம் சாட்டுகிறது. கடந்த மார்ச் மாதம் ஆசிரியர் போஜனின் அத்துமீறல் குறித்து போலீஸில் புகார் செய்திருந்த வள்ளுவர் காலனியை சேர்ந்த மாணவி சங்கீதாவை (பெயர் மாற்றப்பட்டு உள்ளது) சந்தித்தோம்.

டார்ச்சர் போஜன்... நடுங்கும் மாணவிகள்!

''பாடம் நடத்துறப்ப பக்கத்துல வந்து தொட்டுத் தொட்டுப் பேசுறதுல ஆரம்பிச்சு... எப்பவுமே

டார்ச்சர் போஜன்... நடுங்கும் மாணவிகள்!

அசிங்கமாத்தான் நடந்துப்பார் போஜன் சார். ஏதாவது ஒரு கிளாஸ் ரூம் காலியா இருந்துச்சுன்னா, அந்த ரூமுக்கு ஏதாவது ஒரு பொண்ணைத் தனியா வரச் சொல்லி, 'முத்தம் கொடு, கட்டிப்பிடி’னு டார்ச்சர் பண்ணுவார். போன மார்ச் 3-ம் தேதி என்கிட்டே அப்படி நடந்துக்கிட்டார். ஆனா, நான் அழுதுட்டு வெளியிலே ஓடி வந்துட்டேன். மறுநாள் ஸ்கூலுக்கு லேட்டாப் போனதுக்காக எனக்கு தண்டனை தர்றேன்னு, யாருமே இல்லாத கிளாஸ் ரூமுக்குள்ளே கூட்டிட்டுப் போயி கதவைத் தாழ் போட்டுட்டார். 'ஏன் லேட்டா வர்ற?’னு திட்டிட்டே ரொம்ப அசிங்கமா நடந்துக்கிட்டார். என் கன்னத் தைக் கடிச்சுவெச்சுட்டார், யூனிஃபார்மைக் கழட்டச் சொல்லி அடிச்சார். நான் அவரைத் தள்ளிவிட்டுட்டு கதவைத் திறந்து ஓடி வந்துட்டேன். வீட்டுக்கு வந்து செத்துடலாம்னு முடிவு பண்ணி, துப்பட்டாவை எடுத்து தூக்குப் போடப் போயிட்டேன். ஆனா, எங்க அம்மா பார்த்துத் தடுத்துட்டாங்க. அவங்ககிட்டே விஷயத்தைச் சொல்லி அழுதேன். பிறகுதான் போலீஸ்ல கேஸ் கொடுத்தோம். போஜன் சாரால் என் படிப்பு போச்சு, ஃப்யூச்சரும் போச்சு. என்னை மாதிரியே நிறையப் பொண்ணுங்களுக்கு அவர் டார்ச்சர் கொடுத்திருக்கார்!'' என்று உடைந்து அழுதார்.

டார்ச்சர் போஜன்... நடுங்கும் மாணவிகள்!

நீலமலை அனைத்துத் தொழிலாளர் சங்கச் செயலாளர் பாலனும் ராஜாவும், ''இந்த வரலாற்று ஆசிரியர்

டார்ச்சர் போஜன்... நடுங்கும் மாணவிகள்!

போஜனுக்குப் பின்னாடி அசிங்கமான வரலாறே இருக்குது. ஏற்கெனவே கீழ் கோத்தகிரி ஸ்கூல்ல இப்படி அசிங்கமா நடந்து ட்ரான்ஸ்ஃபர் ஆகியிருக் கார். சோலூர்மட்டம் ஸ்கூலுக்குப் போய், அங்கேயும் இதே வேலையைக் காட்டியிருக்கார். ஸ்கூல் மாறினாலும் தன்னோட புத்தியை மாத்திக்காம, போகும் இடத்துல எல்லாம் பொண்ணுங்களைக் கடிக்கிறது, கட்டிப்பிடிக்கிறதுன்னு மிருகத்தனம் காட்டி இருக்கிறார்.  

போஜனோட டார்ச்சர் தாங்க முடியாம, கிட்டத்தட்ட 11 பொண்ணுங்க டி.சி. வாங்கிட்டு ஸ்கூலைவிட்டுப் போயிட்டாங்க. இவ்வளவு தப்பு பண்ற மனுஷன் மேல் எந்த நடவடிக்கையும்

டார்ச்சர் போஜன்... நடுங்கும் மாணவிகள்!

இல்லை. இதுக்கு முக்கியக் காரணம், இந்தப் பகுதியோட ஆதிக்க சமுதாயத்தைச் சேர்ந்தவர் போஜன். அவரோட சகோதரர் ஒருவர் போலீஸ் துறையில் இருக்கிறதும் ஒரு காரணம்!'' என்கிறார்கள்.

கோத்தகிரி அரசு மேல் நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சுப்பிரமணியனை சந்தித்தோம். ''போஜனை இனத்தின் அடிப்படை யில் காப்பாற்றுகிறோம்னு சொல்லப் படும் குற்றச்சாட்டை அடியோடு மறுக்கிறேன். தன் மேல் போலீஸ்ல புகார் வந்ததும் தப்பி ஓடி, ராமநாத புரம் மாவட்டத்துக்குப் போய் முன் ஜாமீன் வாங்கிட்டு கையெழுத்துப் போட்டுட்டு இருக்கிறதா சொல்றாங்க. ஆனா இதுவரைக்கும் அவர் எங்களுக்கு எந்தத் தகவலையும் தரலை. போஜன் மேல் அந்தப் பொண்ணு புகார் சொன்ன துமே, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு நான் தகவல் கொடுத்துவிட்டேன். சி.இ.ஒ. இதுவரைக்கும் மூணு தடவை மாணவிகளிடம் விசாரணை நடத்தி ஃபைல் ரெடி பண்ணி இருக்கார்...'' என்றார்.

போஜனின் விளக்கத்தைப் பெற நாம் எவ்வளவோ முயன்றோம். ஆனால் அவர் இருக்கும் இடத்தைக்கூட சொல்ல மறுக்கும் அவரது உறவினர்கள், ''சரியாகப் படிக்காத, ஸ்கூலுக்கு லேட்டா வரும் மாணவிகளை அவர் கண்டிப்பார். அதில் டென்ஷனான சில மாணவிகள், இப்படிப் பொய்யாகப் புகார் கொடுக்கிறார்கள். போஜனுக்கு எதிராகச் சொல்லப்படும் குற்றச்சாட்டுகளில் ஒன்றுகூட உண்மை இல்லை!'' என்கிறார்கள்.

பிறகு ஏன் தலைமறைவானாராம்?

- எஸ்.ஷக்தி

படங்கள்: வி.ராஜேஷ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு