Published:Updated:

வீரபாண்டியாரிடம் ஆசி வாங்கினாரா செல்வராஜ் எம்.எல்.ஏ.?

சேலம் திகுதிகு

பிரீமியம் ஸ்டோரி
##~##
வீரபாண்டியாரிடம் ஆசி வாங்கினாரா செல்வராஜ் எம்.எல்.ஏ.?

.தி.மு.க. எம்.எல்.ஏ. ஒருவரைப்பற்றி, அந்தக் கட்சியைச் சேர்ந்த ஒருவரே பகிரங்கப் புகார்களை கார்டனுக்கு அனுப்பிய விவகாரம் இது. 

புகார்கள் அனுப்பிய சேலம் மாநகர 48-வது டிவிஷன் அ.தி.மு.க. செயலாளர் மாதவனை சந்தித்தோம். ''சேலம் தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ-வாகவும், அ.தி.மு.க. மாவட்டச் செயலாளராகவும் இருக்கும் எம்.கே.செல்வராஜ், பதவிக்கு வந்ததும் கட்சிக்காரர்களைக் கழற்றிவிட்டுட்டு, கன்னா பின்னாவென்று பணம் பறித்து வருகிறார். கடந்த மாதத்தில் டாஸ்மாக் பார் டெண்டர் விட்டதில் கட்சித் தலைமை, வட்டச் செயலாளர்களுக்குத்தான் முன்னுரிமை கொடுக்கச் சொன்னது. ஆனால், 'நத்தம் விஸ்வநாதனுக்கு 10 கடைகள் கொடுத்தாச்சு, சின்னம்மாவுக்கு 15 கடைகள் கொடுத்தாச்சு. மீதி இருப்பதை நம் கட்சிக்காரர்களுக்கும் கொடுத்தாச்சு. உங்களுக்கு வர்ற உள்ளாட்சித் தேர்தலில்

வீரபாண்டியாரிடம் ஆசி வாங்கினாரா செல்வராஜ் எம்.எல்.ஏ.?

கவுன்சிலர் ஸீட் வாங்கித் தருகிறேன்’ என்று ஏதாவது சொல்லி அனுப்பிவிடுகிறார். ஆனால், யார் யாருக்கு எல்லாம் பார் கொடுத்து இருக்கிறார் என்பதற்கு என்னிடம் ஆதாரத்துடன் பட்டியல் இருக்கிறது. இதில் 14 கடைகளை தி.மு.க-வினருக்குக் கொடுத்து, ஒவ்வொரு கடைக்கும்

வீரபாண்டியாரிடம் ஆசி வாங்கினாரா செல்வராஜ் எம்.எல்.ஏ.?

2 லட்சம் வாங்கி இருக்கிறார்.

இதேபோன்று, சேலம் மாநகராட்சி பில் கலெக்டர்களை வருமானம் உள்ள வார்டுகளுக்கு மாற்ற, ஒவ்வொருவரிடமும் சுமார்

வீரபாண்டியாரிடம் ஆசி வாங்கினாரா செல்வராஜ் எம்.எல்.ஏ.?

2 லட்சம் வாங்கி உள்ளார். இதுவரை 10 பேரை, அவர்கள் கேட்ட வார்டுகளுக்கு மாற்றி இருக்கிறார். பணம் வாங்கிக்கொண்டு, 41-வது டிவிஷன் மாநகர் மாவட்ட தி.மு.க. மாணவர் அணிச் செயலாளர் சேகரின் தம்பி இளங்கோவனையும்

வீரபாண்டியாரிடம் ஆசி வாங்கினாரா செல்வராஜ் எம்.எல்.ஏ.?

மாற்றி உள்ளார். சேலத்தில் இருக்கும் காவல் துறையிலும் கலெக்ஷன் பார்த்து வருகிறார். அழகா புரம் இன்ஸ்பெக்டர் கண்ணன், அஸ்தம்பட்டி கிருஷ் ணன், சேலம் டவுன் அசோகன் ஆகியோரிடம், டிரான்ஸ்ஃபருக்கு

வீரபாண்டியாரிடம் ஆசி வாங்கினாரா செல்வராஜ் எம்.எல்.ஏ.?

5 முதல்

வீரபாண்டியாரிடம் ஆசி வாங்கினாரா செல்வராஜ் எம்.எல்.ஏ.?

7 லட்சம் வரை வாங்கி இருக்கிறார். சேலத்தில் கட்சிக்காகப் பாடுபடும் வழக்கறிஞர்களை விட்டுவிட்டு, பல லட்சங்களை வாங்கிக்கொண்டு சேலம் அரசு சிறப்பு வழக்கறிஞர்கள் நியமனம் செய்ததிலும் தொகை பார்த்துவிட்டார். அவர் நியமித்த தனசேகரன், அருள்புஷ்பராஜ் போன்றவர்கள் கட்சிக்காக எதுவும் செய்யாதவர்கள்.

சூரமங்கலம் முன்னாள் கவுன்சிலர் ரவீந்தரனிடம், 'உன் மனைவி சுதாவை மேயர் ஆக்குகிறேன்’ என்று சொல்லி

வீரபாண்டியாரிடம் ஆசி வாங்கினாரா செல்வராஜ் எம்.எல்.ஏ.?

10 லட்சம் வாங்கி இருக்கிறார். இது கட்சிக்காரர்கள் அனைவருக்குமே தெரியும். சேலத்தில் உள்ள வியாபாரப் பிரமுகர் ஒருவரிடம் அன்பளிப்பாக

வீரபாண்டியாரிடம் ஆசி வாங்கினாரா செல்வராஜ் எம்.எல்.ஏ.?

5 லட்சம் வாங்கிக்கொண்டு கட்சியில் சேர்த்து உள்ளார். இப்படிப் பல வழிகளில் பணத்தைக் கொள்ளை அடித்து வருகிறார்.

கடந்த 2001-ல் இவர் மண்டலத் தலைவர் பதவியை கட்சித் தலைமையிடம் கேட்டார். ஆனால், தலைமை இவருக்குக் கொடுக்காமல், அன்பழ கனுக்குக் கொடுத்ததால், செல்வராஜின் ஆதரவு கவுன்சிலர்கள் ஒன்றுசேர்ந்து அன்பழகனுக்கு ஓட்டு போடாமல் தி.மு.க-வுக்கு ஓட்டு போட்டார்கள். இதனால் தி.மு.க-வில் குணசேரன் மண்டலத் தலைவர் ஆனார். இப்படி, செல்வராஜ் எப்போதும் தி.மு.க-வோடு மறைமுக உறவுவைத்துக்கொண்டு, சேலத்தில் அ.தி.மு.க. கட்சியை ஒழித்து வருகிறார்.

செல்வராஜ் செய்யும் அனைத்துத் தவறுகளும் மறைக்கப்பட்டு, ராவணனுக்கு நெருக்கமாக இருக்கும்

வீரபாண்டியாரிடம் ஆசி வாங்கினாரா செல்வராஜ் எம்.எல்.ஏ.?

மோகனின் தயவால்தான் பதவி தப்பித்து வருகிறது. இதனால் உண்மையான கட்சித் தொண்டர்கள் வேதனை அடைந்துள்ளோம். அதனால்தான் செல்வ ராஜின் செயல்பாடுகளை ஆதாரங்களோடு திரட்டி கட்சித் தலைமைக்கு அனுப்பி இருக்கிறேன்...'' என்றார் காட்டமாக.

செல்வராஜைப் பிடிக்காத மற்றொரு கோஷ்டி யினரோ, ''செல்வராஜ் எம்.எல்.ஏ. ஆனதும் வீரபாண்டி ஆறுமுகத்தை சென்னையில் சந்தித்து ஆசி வாங்கினார். இதைப்பற்றியும் தலைமைக்குப் புகார் கொடுத்து இருக்கிறோம்!'' என்று கடுப் பாகிறார்கள்.

ஒட்டுமொத்தப் புகார்களையும் எம்.கே.செல்வராஜிடம் சொல்லி, விளக்கம் கேட்டோம். ''இந்தப் பொய்யான தகவலை யார் சொன்னது? அவன் என் மேல் புகார் சொல்லறதுன்னா, முதலில் அதை என்னிடம் சொல்லணும். இல்லைன்னா, கட்சித் தலைமைக்குச் சொல்லணும். ஒருத்தன் கட்சியில் நல்லவனா இருக்கக் கூடாது. ஏதாவது கம்ப்ளெயின்ட் கொடுத்து, அவனைக் காலி பண்ணத்தான் பார்ப்பாங்க. கார்ப்பரேஷனில் பில் கலெக்டரை மாற்றியதற்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? அது கமிஷனர், மேயரோட வேலை. நான் எப்படி அதில் தலையிட முடியும்? நான் போய் வீரபாண்டி ஆறுமுகத்திடம் ஆசி வாங்கினேனா? அந்த ஆளை நேரில்கூட பார்த்தது கிடையாது. என் மேல் சொல்லப்படும் புகார்கள் எல்லாம் பொய்யானது. என்னைப்பற்றி அம்மாவுக்கு முழுமையாகத் தெரியும். அதனால், இந்த வீண் பழிச் சொல்லுக்குப் பயம் இல்லை!'' என்றார் கோபமாக!

- வீ.கே.ரமேஷ்

படங்கள்: எம்.விஜயகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு