Published:Updated:

இடிக்கப்படுமா அழகிரியின் சைபர் பார்க்?

மதுரை அதிரடி

பிரீமியம் ஸ்டோரி
##~##
இடிக்கப்படுமா அழகிரியின் சைபர் பார்க்?

ர்ச்சைக்குரிய மூன்று விவ​காரங்களால்... மதுரை மாநக​ராட்சியே குலுங்​குகிறது! 

மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில், ''கடந்த ஐந்து ஆண்டுகளின் மாநகராட்சி நிர்வாக முறைகேடுகளை விசாரிக்க வேண்டும்...'' என தி.மு.க. துணை மேயர் மன்னனின் மனைவி பெயரில் கட்டப்படும் காம்ப்ளெக்ஸ் தொடர்பாகப் பிரச்னையைக் கிளப்​பினார், அ.தி.மு.க-வின் மாமன்றக் குழுத் தலைவர் சாலைமுத்து.

அடுத்து, மாட்டுத்தாவணி அருகே கட்டப்பட்டுள்ள மு.க.அழகிரிக்கு சொந்தமான தயா சைபர் பார்க் கட்டடம் விதிகளுக்குப் புறம்பாகக் கட்டப்பட்டதால், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரச்னை எழுப்பினார், மார்க்சிஸ்ட் கட்சியின் மாமன்றக் குழுத் தலைவர் கணேசன். இந்தப் புகார்கள் குறித்து, 'விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். அடுத்ததாக, காமராஜர்புரத்தில் கட்டி முடித்த மண்ணெண்ணெய் பங்க்கைத் திறக்க அனுமதி கேட்டு, தி.மு.க-வின் கிழக்கு மண்டலத் தலைவர் வி.கே.குருசாமி பிரச்னை கிளப்பினார். 'அனுமதிக்கப்பட்ட இடத்துக்கும் கூடுதலான இடத்தை ஆக்கிரமித்து உள்ளனர்’ எனச் சொல்லி, அனுமதி மறுக்கப்பட்டது.

இடிக்கப்படுமா அழகிரியின் சைபர் பார்க்?

இந்த விவகாரங்கள் தொடர்பாகப் பேசிய சாலைமுத்து, ''மாநகராட்சியில் அத்தனையும் ஊழல். மன்னன், தன் மனைவி பெயரில் கட்டும் காம்ப்ளெக்ஸில் அனுமதிக்கப்பட்ட பிளானை மீறிட்டாங்க. பாதைக்காக

இடிக்கப்படுமா அழகிரியின் சைபர் பார்க்?

சிந்தாமணி கால்வாயில் பாலம் போட்டு இருக்கிறார் மன்னன். இதை பொதுமக்கள் எதிர்த்ததால், அனுமதியை கேன்சல் செய்தது பொதுப் பணித் துறை. ஆனாலும் அந்தக் கட்டடம் தொடர்பாக மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை. 500 மீன் கடைகளுக்கு சமீபத்தில் அனுமதி கொடுக்கப்பட்டதில், ஒவ்வொரு கடைக்கும் தலா

இடிக்கப்படுமா அழகிரியின் சைபர் பார்க்?

25 ஆயிரம் வசூல் நடந்தது. கிடைச்ச வரை லாபம்னு தி.மு.க-காரங்க சுருட்ட ஆரம்பிச்சுட்டாங்க. இதுக்கு எல்லாம் பதில் சொல்லியே ஆகணும்!'' என்றார்.

மார்க்சிஸ்ட் தலைவர் கணேசன், ''தயா சைபர் பார்க் கட்டடத்துக்கு இடைஞ்சல்னு சம்பைக்குளம் சுடுகாட்டை இடிச்சு அப்புறப்படுத்த நினைச்சாங்க. மக்களைத் திரட்டிப் போராடித் தடுத்தோம். சுடுகாட்டில் இருந்து 150 அடி தூரம் கட்டடம் இருக்கக் கூடாது என்ற விதியை மீறி, தயா சைபர் பார்க் கட்டப்பட்டு உள்ளது!'' என்றார்.

இதனிடையே, ''மண்ணெண்ணெய் பங்க் திறக்கக் கோரி மக்களைத் திரட்டி, சாகும் வரை

இடிக்கப்படுமா அழகிரியின் சைபர் பார்க்?

உண்ணாவிரதப் போராட்டம் இருப்பேன்...'' என குருசாமி அறிவித்தார். உடனே சம்பந்தப்பட்ட இடத்துக்குச் சென்ற மாநகராட்சி கமிஷனர் செபாஸ்டின், ''விதி மீறிக் கட்டப்பட்டதால்தான் பங்க் திறக்க முடியவில்லை. இதுக்குக் காரணம், மண்டலத் தலைவர் குருசாமிதான்!'' என்று மக்களிடம் சொல்ல, ஆடிப்போன குருசாமி, ''என்ன சார், என்னையக் கோத்துவிடுறீங்க?'' என்று கோபமானார்.

அப்போது, ''மண்ணெண்ணெய் வாங்க வந்தப்ப என் 10 பவுன் செயினை அத்துட்டாங்க சார்!'' என்று ஒரு பெண்மணி சொல்ல... ''அதை யார் பறிச்சு இருப்பாங்கன்னு மண்டலத் தலைவருக்குத் தெரியும். அவரையே கேளுங்க!'' என்று கமிஷனர் சொல்ல... டென்ஷனான குருசாமி, ''என்ன சார், இப்பிடிப் பேசுறீங்க?'' என்று எகிறத் தொடங்கினார்.

''உங்க ஏரியா என்பதால், உங்க ஆளுங்கதானே எடுத்து இருப்பாங்க... உங்களுக்குத் தெரியாமலா இருக்கும்?'' என்று அசராமல் அடித்த கமிஷனர், பொதுமக்கள் நலன் கருதி மண்ணெண்ணெய் மையத்தைத் திறக்க அனுமதி அளித்தார். விதி மீறலைக் கண்காணிக்காத மாநகராட்சி உதவிப் பொறியாளர் காமராஜை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டார்.

இடிக்கப்படுமா அழகிரியின் சைபர் பார்க்?

நம்மிடம் பேசிய குருசாமி, ''மண்ணெண்ணெய் பங்க்கைத் திறக்கச் சொன்னா, அந்த ஆளு என் மேல சேற்றை வாரி இறைச்சிட்டார். கமிஷனரே இந்த பங்க்கை மூணு முறை இன்ஸ்பெக்ஷன் பண்ணியிருக்கார். அப்பெல்லாம் விதி மீறல் தெரியலையாமா? 'செயினை அறுத்தது யாருன்னு மண்டலத் தலைவரைக் கேளுங்க’ன்னா, நான் என்ன களவாணிப் பயலா? இதுக்காக மான நஷ்ட வழக்குப் போடுவேன்!'' என்று கொதித்தார்.

மன்னன், இலங்கைக்குச் சென்று இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். ''காம்ப்ளெக்ஸ் கட்டடப் பிரச்னையில் மன்னன் கோர்ட்டுக்குப் போய் இருக்கிறார். நிச்சயம் நியாயம் கிடைக்கும். தயா சைபர் பார்க் விவகாரத்தில் இம்மியளவும் விதிமுறைகள் மீறப்படவில்லை!'' என்றனர்.

கமிஷனர் செபாஸ்டின், ''துணை மேயருக்கு சொந்தமான கட்டடம் பிளானை மீறி இருப்பதால், நோட்டீஸ் கொடுத்தோம். கோர்ட்டில் ஸ்டே வாங்கி இருக்கிறார். அதை உடைக்கும் வேலை நடக்கிறது. தயா சைபர் பார்க்குக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பே பெர்மிஷன் கொடுத்து உள்ளனர். சுடுகாட்டுக்கு 150 அடி தூரத்தில் கட்டடங்கள் இருக்கக் கூடாதுன்னு ஹெல்த் ஆபீஸர் சொல்கிறார். அந்த வரம்புக்குள் வருகிறதான்னு பார்த்துத்தான் நடவடிக்கை எடுக்கப்படும். மண்ணெண்ணெய் பங்க்கில், அனுமதித்ததைவிட கூடுதலான இடம் ஆக்கிரமித்து உள்ளனர். இதற்குக் காரணம், குருசாமி. அந்த உண்மையைத்தான் சொன்னேன். உடனே, செயினைப் பறிகொடுத்த பெண்ணை என்னிடம் கைகாட்டினார். அதனால், பறிச்சது யாருன்னு எனக்கு எப்படி தெரியும்? மண்டல தலைவர்கிட்டயே கேளுங்கன்னு சொன்னேன்...'' என்றார்.

மாநகராட்சியில் இன்னும் என்னென்ன வண்டவாளங்கள் வெளிவரப் போகுதோ?

- குள.சண்முகசுந்தரம்

படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு