Published:Updated:

செக்ஸ் வெறியாட்ட போலீஸ்!

'நாங்களே போலீஸ்.... எங்களுக்கு இன்னொரு போலீஸா?''

செக்ஸ் வெறியாட்ட போலீஸ்!

இரண்டு நர்ஸ்களை மிரட்டி, பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளதாக  போலீஸார் மீதே புகார் கிளம்பியுள்ளது. இந்த டீமில் ஒரு எஸ்.ஐ-யும் ஒரு போலீஸ் ஏட்டும் இருந்தனர் என்பதுதான் வேதனை!

விருகம்பாக்கம் பகுதியில் முதியோர்களை வீடுகளுக்கே சென்று கவனிக்கும் பணியை  விமலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மேற்கொண்டு வருகிறார். நர்ஸிங் பயிற்சி முடித்த இளம்பெண்கள் இருவர் அவருடன் தங்கியுள்ளனர்.  கடந்த 1-ம் தேதி விமலா, விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் ஒரு பரபரப்பு புகாரை கொடுத்தார். அதில், ''விபசாரத் தடுப்புப் பிரிவு போலீஸ் என்று கூறிக்கொண்டு இரண்டு பேர் எங்கள் வீட்டுக்கு வந்தனர். 'இங்கு விபசாரம் நடப்பதாக எங்களுக்குத் தகவல் வந்துள்ளது. அதை விசாரிக்க வந்துள்ளோம்’ என்றனர். போதையில் இருந்த அவர்கள் இருவரும் நர்ஸ்களின் கையைப் பிடித்து இழுத்து, 'எங்களுடைய ஆசைக்கு நீங்கள் ஒத்துழைத்தால் இந்த கேஸை அப்படியே மூடி மறைத்துவிடுவோம்’ என்றனர். அவர்கள் இழுத்ததில் இரண்டு நர்ஸ்களின் டிரஸ் கிழிந்தது. உடனே நான், அத்துமீறி நடந்த அந்த இரண்டு பேரையும் 'வீட்டைவிட்டு வெளியே போங்கள். இல்லை எனில்

செக்ஸ் வெறியாட்ட போலீஸ்!

போலீஸ் நிலையத்துக்குத் தகவல் கொடுப்பேன்’ என்றேன்.

அவர்கள், 'நாங்களே போலீஸ்... எங்களைப் பிடிக்க இன்னொரு போலீஸா?’ என்றபடி சென்றுவிட்டனர். பின்னர், அவர்கள் போனில் செக்ஸ் டார்ச்சர் கொடுத்தனர். மீண்டும் வீட்டுக்கு வந்து அவர்கள் இரண்டு நர்ஸ்களிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டனர்'' என்று சொல்லி, அவர்கள் யார் என்பதையும் அடையாளப்படுத்திவிட்டுச் சென்றார்.

இந்த சம்பவம் குறித்துப் புகார் கொடுத்த விமலாவிடம் பேசினோம். ''புகாரை வாபஸ் பெற்றுவிட்டேன்'' என்று மட்டும் கூறினார்.

இதே போலீஸார் பற்றி ஏற்கெனவே துணை நடிகை ஒருவர் புகார் சொல்லியிருந்தார். இதுதொடர்பாக 'இந்திரா பெண் முன்மாதிரி கல்வியாளர்கள்’ என்ற அமைப்பின் செயலாளர் கலைவாணியிடம் பேசினோம். ''விருகம்பாக்கம் செக்போஸ்ட் அருகே ஆட்டோவில் சென்ற ஒரு துணை நடிகையை மிரட்டி இந்த செக்ஸ் வெறியாட்ட போலீஸ் டீம் பாலியல் தொந்தரவு செய்துள்ளது. இது தொடர்பாக கடந்த 4.2.2013-ல் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் போலீஸார் மீது புகார் கொடுத்தோம். வடபழனி போலீஸார், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்தனர். மேலும், இந்த போலீஸ் டீம் இளம்பெண் ஒருவரை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்கள். அந்தப் பெண் தனக்கு மாதவிலக்கு என்று கூறியபோதும் கட்டாயப்படுத்தி அவளிடம் செக்ஸ் வைத்திருக்கிறார்கள். இந்த

செக்ஸ் வெறியாட்ட போலீஸ்!

லட்சணத்தில் போலீஸார் இருந்தால், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எப்படி நியாயம் கிடைக்கும்?'' என்றார் காட்டமாக.

செக்ஸ் வெறியாட்டம் நடத்திய போலீஸார் இரண்டு பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ஆனால், இவர்களுக்குப் பின்னணியில் இருப்பவர்களைக் குறித்து விசாரணை நடத்தப்படவில்லை.  

இதுகுறித்து விருகம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமனிடம் கேட்டதற்கு, ''இது ஆதாரமற்றப் புகார்'' என்றார். ''இரண்டு போலீஸாரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்களே?'' என்று கேட்டோம். ''அதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது'' என்றார். இவ்வாறு சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்களுக்கு கொடுத்த ஆர்டரில், 'பாலியில் தொந்தரவில் ஈடுபட்டனர்’ என்று குற்றச்சாட்டு உள்ளது.

''நான்கு போலீஸ்காரர்கள் சேர்ந்துகொண்டு இதுபோன்ற அட்டூழியங்களைத் தொடர்ந்து செய்து வருகிறார்கள். இது சினிமாக்காரர்கள் சம்பந்தப்பட்ட ஏரியா என்பதால் துணை நடிகைகள், டான்ஸர்கள், நர்ஸ்கள் போன்றவர்களை குறிவைத்து காரியங்களைச் சாதிப்பது இந்த போலீஸ்காரர்களின் வேலை. பெண்கள் யாராவது தனியாக வந்து புகார் சொன்னாலே, இந்த டீம் அவர்களை குறி வைத்துவிடும். இது போன்ற போலீஸ்காரர்களை உயர் அதிகாரிகள் கண்காணித்து களையெடுக்க வேண்டும். இந்த மாதிரியான ஆட்களைக் கண்டுபிடித்து பணிநீக்கம் செய்யாவிட்டால், சென்னை போலீஸாரின் மானம் கப்பல் ஏறிவிடும்'' என்று சொல்கிறார்கள் உள்விவரங்கள் அறிந்தவர்கள்.  

வேலியே பயிரை மேய்ந்தால் மக்கள் என்ன செய்வார்கள்?

- எஸ்.மகேஷ்

அடுத்த கட்டுரைக்கு