விவகாரமான சர்ச்சைகளுக்கும் தீர்க்க முடியாத வழக்குகளுக்கும் பெயர் பெற்றவர்கள் புதுச்சேரி போலீஸார். கைமீறிய கையூட்டு, ரவுடிகளுடன் தொடர்பு, கட்டப்பஞ்சாயத்து என பல குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருந்த நிலையில், பல முக்கியக் குற்றச் சம்பவங்களைத் துப்பு துலக்காமல் காலம் தாழ்த்தி வருவதிலும் முன்னணி வகிக்கின்றனர்.

குட்டியூண்டு மாநிலம்தான் என்றாலும், அரை கிலோ மீட்டருக்கு ஒரு காவல் நிலையத்தை புதுச்சேரியில் காண முடியும். நிலைமை இப்படி இருந்தும், இங்கு பதியப்படும் வழக்குகளின் எண்ணிக்கை மிகக் குறைவு. முடிந்த வரை போலீஸாரே பஞ்சாயத்து செய்து துட்டு பார்ப்பது இங்குள்ள காக்கிகளுக்கு கைவந்த கலை. இதன் உச்சகட்டமாக குற்றவாளிகள் போலீஸுக்கு பார்ட்டி வைக்கும் அளவுக்கு அவர்களுக்குள் பந்தம் இறுகியுள்ளது.

இதுகுறித்து அ.தி.மு.க எம்.எல்.ஏ-வான அன்பழகனிடம் பேசினோம்.

''மக்களிடம் புதுச்சேரி காவல் துறை அதன் நம்பகத்தன்மையை இழந்து பல வருடங்களாகின்றன.

ஆட்சியாளர்களுக்கு ஆதரவாகவும், குற்றவாளிகளுக்கு துணைபோவதுமாக இருந்ததன் விளைவு இது. பல குற்றச் செயல்களில் கொலையாளிகளைத் தப்பவிட்டு வேடிக்கை பார்ப்பதே காவல் துறையில் தொடர்கதையாக உள்ளது.

2012-ல் அரியாங்குப்பத்தில் கமலா என்பவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். அதை விசாரித்த அரியாங்குப்பம் போலீஸார் குற்றவாளியைப் பிடிக்க முடியாமல் வழக்கை சிஐடி பிரிவுக்குத் தள்ளிவிட்டனர். இப்போது சிஐடி பிரிவில் கமலா கொலை வழக்கு தூசுப்படிந்து கிடக்கிறது. கடந்த வருடம் ரெயின்போ நகரை சேர்ந்த மணிஷ்குமார் ஜெயின் என்பவருடைய மகன் நீரஜ் ஜெயின் மர்ம நபர்களால் கடத்தப்பட்டான். பணம் கேட்டு மிரட்டிய கும்பல், 23 மணி நேரத்தில் சிறுவனை விடுவித்துவிட்டனர். இந்தச் சம்பவம் நடந்து எட்டு மாதங்களாகின்றன. இதுவரை போலீஸாரால் சின்னத் துரும்பைக்கூட அசைக்க முடியவில்லை.

கடந்த ஏப்ரல் மாதத்தில் பேருந்து நிலையம், காவல் நிலையம் உள்ள பிரதான சாலையில் உள்ள அடகுக்கடையில் அதன் உரிமையாளர் ரத்தேஷ் ஷியாம் பட்டப்பகலில் கொடூரமாகக் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அந்த வழக்கும் அப்படியே கிடக்கிறது. போலீஸாரின் இந்த மந்தப்போக்கால் கடத்தல், கொலை வழக்குக் குற்றவாளிகள் சுதந்திரமாக சுற்றி வருகின்றனர்'' என்றார் ஆதங்கத்தோடு.

''சிறுவன் நீரஜ் ஜெயின் கடத்தல் வழக்கில் வில்லியனூர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் மீது போலீஸாருக்கு அதிக சந்தேகம். அவரை போலீஸ் நெருங்கியபோது சென்னையில் இருந்து அரசியல் பலம்கொண்ட தலைவர் சிபாரிசு செய்ததுதான் உச்சக்கட்ட கொடுமை. அடகுக்கடை அதிபர் கொலையில் இதுவரை ஒரு பவுன் நகைகூட புதுச்சேரியை தாண்டிச் செல்லவில்லை. குற்றவாளிகள் இங்குதான் உள்ளனர். அது போலீஸாருக்கும் தெரியும். உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவரின் தம்பி ஒருவர் மீது சந்தேகம் வலுத்துள்ளது. முக்கிய அரசியல் புள்ளியின் குறுக்கீடு இருப்பதால், போலீஸார் அவரைக் கைதுசெய்யவில்லை'' என்று அடித்து சொல்கின்றனர் விவரமறிந்தவர்கள்.

காவல் துறை அதிகாரி ஒருவரிடம் பேசினோம். ''95 சதவிகித காவல் துறை அதிகாரிகள் ஊழலில் மலிந்தவர்கள். ரூரல் டிராஃபிக்கில் உள்ள 'குணமான’ அதிகாரி, லாஸ்பேட்டை சர்க்கிளில் உள்ள 'பெருமாள் பெயர் கொண்ட’ அதிகாரி ஆகியோர் காவல் துறைக்கு தகுதியே இல்லாதவர்கள். ரவுடிகளோடு இணைந்து இவர்கள் காலி மனைகளை ஆக்கிரமிப்புசெய்யும் போக்கு கடந்த சில மாதங்களில் அதிகரித்துள்ளது. 'பாம்’ வழக்கில் தொடர்புடைய முக்கிய ரவுடியுடன் லாஸ்பேட்டை சர்க்கிள் அதிகாரி செய்யும் வேலைகளுக்கு அளவே இல்லை. காலி மனைகளை ஆக்கிரமிப்பு செய்வது அவரது சைடு பிசினஸ். புதுச்சேரி பல்கலைக்கழக ஊழியர் ஜெயராமன் கொலை வழக்கு நீர்த்துப் போவதற்கு முக்கிய காரணம், இந்த அதிகாரிதான். மூன்று அடுக்குமாடி சொகுசு வீடு ஒன்றை அரியாங்குப்பத்தில் இப்போது இழைத்து வருகிறார்.

ரெட்டியார்பாளையத்தில் பணியாற்றும் சரக்கு பி.சி-தான் ஊழலில் மலிந்த உயர் அதிகாரிகளுக்கு செல்லப் பிள்ளை. சூதாட்டம், விபசாரம் எல்லாமே அவர் கட்டுப்பாட்டின் கீழ்தான் நடக்கிறது. சில எஸ்.பி-களே சரக்கு பி.சி-யிடம் மாமூல் பெற்று வருகின்றனர். நல்ல மாமூல் கொட்டும் ஏரியாவான வடக்கு பகுதி எஸ்.பி போஸ்ட்டிங்கை எல்லா எஸ்.பி-க்களும் கடுமையாக முட்டி மோதிப் பார்த்தனர். இப்போது, அந்த 'சாமி’ போலீஸ் செமையாக கல்லா கட்டி வருகிறார். பதவி மீது காட்டும் ஆர்வத்தைக் குற்றவாளிகளைக் கண்டுப்பிடிப்பதில் காட்டினாலே விடை தெரியாத பல வழக்குகள் முடிந்திருக்கும்'' என்கிறார் அவர்.

இந்த விவகாரம் தொடர்பாக டிஜிபி காமராஜைச் சந்தித்தோம். ''போலீஸ் அதிகாரிகள் ரவுடிகளோடு இணைந்து மிரட்டினாலோ, புகார் கொடுத்த பிறகு நடவடிக்கை எடுக்கவில்லை என்றாலோ பொதுமக்கள் தாராளமாக என்னிடம் நேரடியாக வந்து புகார் கொடுக்கலாம். வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் விரைவில் கைதுசெய்யப்படுவார்கள்'' என்று உறுதியளித்தார்.

பார்ப்போம்.

- நா.இள.அறவாழி

படங்கள்: ஜெ.முருகன்