சமீபத்தில் உள்ளாட்சி நிதி தணிக்கைத் துறை, திருவண்ணாமலை மாவட்ட பேரூராட்சிகளில் ஆடிட்டிங் செய்தது. இந்த ஆடிட்டிங் முறையாக நடத்தப்படவில்லை என்று கவுன்சிலர்கள் போர்க்கொடி தூக்க, இப்போது மாவட்டமே சூடாகிக் கிடக்கிறது.

'பேரூராட்சிகளில் அரசு முறையாக தணிக்கை நடத்த வேண்டும்’ என்று பேரூராட்சி மன்ற உறுப்பினர்களை திரட்டி போராடிவருகிறார் பேரூராட்சி மன்ற உறுப்பினரும், உள்ளாட்சிகளின் ஊழல் ஒழிப்பு முன்னணி இயக்கத்தின் செயலாளருமான திருமூர்த்தி. அவரிடம் பேசினோம். ''தணிக்கை என்பது வருடத்துக்கு ஒருமுறை, உள்ளாட்சி நிதி தணிக்கைத் துறையால் ஒவ்வொரு பேரூராட்சியிலும் நடத்தப்பட வேண்டும். ஆனால், கடந்த 2011 முதல் 2013 வரை என்று மூன்று வருடத்துக்கும் சேர்த்து திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து பேரூராட்சிகளிலும் தணிக்கை செய்தது. அப்போது அந்தந்த செயல் அலுவலர்கள், சுமார் 14 கோடி ரூபாய்க்கும் மேல் கையாடல் செய்திருப்பது தெரியவந்தது. ஆனால், கையாடல் செய்தவர்கள் மீது இதுவரையில் எந்த நடவடிக்கையும் இல்லை.

வருடத்துக்கு ஒருமுறை தணிக்கை செய்தால்தான், இதுபோன்ற கையாடல்களைத் தடுக்க முடியும். அதுமட்டும் இல்லாமல் தணிக்கை துறையானது ஒரு பில் எங்கு வாங்கியது, யாரால் வாங்கப்பட்டது என்பதை எல்லாம் பார்ப்பது இல்லை. வெறும் கூட்டல் கழித்தல் வேலைகளை மட்டும் செய்துவிட்டு, தணிக்கையை முடித்துவிடுகிறது.

பேரூராட்சியில் எந்த ஒரு பணிக்கும் சுமார் 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் போனால், அதை டெண்டர் விடவேண்டும். ஆனால், அரசின் விதிமுறையை மீறி முறைகேடாக, செயல் அலுவலர்களே அந்தப் பணத்தை எடுத்து வேலையை செய்கின்றனர். இதற்கு அரசு தடை விதிக்க வேண்டும். தவறு செய்திருக்கும் செயல் அலுவலர்களை அரசு சஸ்பெண்ட் செய்து, வரம்புக்கு மீறி எடுத்த பணத்தை

ரெக்கவரி செய்ய வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து பேரூராட்சிகளையும் கணக்கிட்டால், ஒரு வருடத்துக்கு அரசாங்க பணமும் மக்கள் வரிப்பணமும் 500 கோடிக்கு மேல் கையாடல் செய்யப்படுகிறது. இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் விரைவில் வழக்குத் தொடர உள்ளேன்'' என்றார்.

ஊழல் ஒழிப்பு முன்னணி இயக்கத்தின் தலைவரும், பேரூராட்சி மன்றத்தின் உறுப்பினருமான சித்ரா, '' வேட்டவலம் பேரூராட்சியில் தணிக்கையின்போது செயல் அலுவலராக இருந்தவர் கணேசன். பேரூராட்சியில் கொசுக்களை அழிக்க திருவண்ணாமலை துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகத்தின் மூலம் பைரித்தியம் மருந்து (கொசு மருந்து) இலவசமாக வழங்கப்பட்டது. ஆனால், அந்த மருந்தை பணம் கொடுத்து வாங்கியதாக செலவு சீட்டு வைத்தார். அதேபோன்று மின்கம்பங்களுக்கு கிளாம்பு செட் வாங்கியது, குடிநீர் திட்ட உதிரிப் பாகங்கள் வாங்கியது, நிதி மாற்றம் செய்தது, பேரூராட்சிக்குத் தேவைப்படும் நீர்த்தச் சுண்ணாம்பு கதர் கிராம தொழில் வாரியத்திடம் வாங்காமல், தனியாரிடம் வாங்கியது என, பல வேலைகளுக்குப் பொய்யான பில் வைத்து கோடிக்கணக்கான ரூபாய் கொள்ளையடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் கடையே இல்லாத பெயரில் பில் தயாரித்துள்ளார். அந்த பில்லை எல்லாம் தணிக்கைத் துறை ஆய்வே செய்யவில்லை. இதுபோன்ற நடவடிக்கை குறித்து பல போராட்டங்கள் நடத்திய பிறகு, கணேசனை கண்ணமங்கலம் பேரூராட்சிக்கு இடமாற்றம் செய்தார்கள். அங்கேயும் இதே வேலையைத்தான் செய்யப்போகிறார். அதனால்தான் அவர் கொடுத்த போலியான பில் எல்லாவற்றையும் வணிகவரித் துறையிடம் ஒப்படைத்துள்ளோம்'' என்றார்.

இந்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து செயல் அலுவலர் கணேசனிடம் கேட்டோம். ''நாங்கள் செய்யும் வேலைகளுக்கு மன்றக் கூட்டத்தில் தீர்மானம் போட்டு, அதில் கவுன்சிலர்களும் தலைவரும் கையெழுத்து போட்டுள்ளார்கள். பொய்யான பில் எதுவுமே இல்லை. நாங்கள் வாங்கும் பொருள்களுக்கு கிராஸ் செக்தான் சம்பந்தப்பட்ட கடைகளுக்குக் கொடுத்துள்ளோம்'' என்றார்.

வேட்டவலம் பேரூராட்சி மன்றத் தலைவர் ஜனார்த்தனம், ''மக்கள் பணிக்காகத்தான் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினோம். ஊழல் செய்வதற்கு அல்ல. செயல் அலுவலர் கணேசன் ஊழல் செய்தார் என்பது உண்மைதான். அதற்கான ஆதாரம் என்னிடமும் உள்ளது'' என்றார்.

இதுகுறித்து உள்ளாட்சி நிதி சிறப்பு தணிக்கைத் துறை உதவி ஆய்வாளர் நீலமேகத்திடம் பேசினோம். ''தீர்மான நகலில் வைக்கப்படும் பில் மட்டுமே எங்களுக்குக் கணக்கு. மற்றபடி அந்த பில் எந்தக் கடையில் வாங்கப்பட்டது, யாரால் வாங்கப்பட்டது என்பதை பார்ப்பதற்கு எங்களுக்கு அதிகாரம் இல்லை. மற்றபடி, எங்கள் பணிகளை நாங்கள் சிறப்பாகத்தான் செய்துள்ளோம்'' என்றார்.

எது எப்படியோ, கொள்ளைபோவது மக்கள் வரிப்பணம்தானே?

- க.பூபாலன்

படங்கள்: கா.முரளி