ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் புகழ்பெற்ற முருகன் ஆலயம் உள்ளது. கடந்த 7-ம் தேதி அந்தக் கோயிலுக்கு பிரமாண்டமான முறையில் கும்பாபிஷேகம் நடந்த கையோடு, 12-ம் தேதி பௌர்ணமி அன்று சாமி கும்பிட வந்த சதீஷ்குமார் என்ற பக்தர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

திருப்பூரில் உள்ள சதீஷ்குமார் வீட்டுக்குச் சென்றோம். அவரது மனைவி பிரேமா நம்மிடம் பேசும் மனநிலையில் இல்லை. சதீஷ்குமாரின் தாயார் கலாராணி, ''என் மகன் சதீஷ்குமாருக்கு 30 வயதுதான் ஆகிறது. சிறிய பனியன் கம்பெனி நடத்திக்கிட்டு இருந்தான். அவன் மகன் பிரதீப்புக்கு இரண்டரை வயது. 12-ம் தேதி பவுர்ணமி அன்று சென்னிமலை கோயிலுக்கு அவன் உட்பட ஆறு பேர் போயிருந்தோம். சாமி கும்பிட்டுவிட்டு, அன்னதானக் கூடத்துக்குப் பக்கத்தில் அமர்ந்து சாப்பிட்டுக்கிட்டு இருந்தோம். சதீஷ் சாப்பிட்டுட்டு பக்கத்துல இருந்த மேல்நிலைத் தொட்டியில் நிரம்பி வழிந்த நீரில் கைகழுவச் சென்றான். அங்கிருந்த இரும்பு ஏணியைப் பிடித்தவன், 'ஆ...’ன்னு அலறினான். அடுத்த விநாடி எல்லாம் முடிஞ்சுடுச்சு. மூச்சு பேச்சு இல்லாம கீழே கிடந்தான். நாங்க அவ்வளவு சத்தம் போட்டும் யாரும் உதவிக்கு முன்வரலை. அங்கிருந்த பக்தர் ஒருத்தர், அவரோட கார்ல என் மகனை ஏத்திக்கிட்டு மலையில இருந்து கீழே கொண்டுவந்தார். ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டுவந்தோம். அங்கிருந்த டாக்டர் பரிசோதிச்சுப் பாத்துட்டு, என் மகன் இறந்துட்டதா சொன்னாரு. எங்களுக்கு இருந்த ஒரே மகன் இறந்துட்டதால, எங்க குடும்பம் அநாதையாகிடுச்சு'' என்று கூறியவர், மேற்கொண்டு பேச இயலாமல் அழ ஆரம்பித்தார்.

சதீஷ்குமாரின் தந்தை அருணாச்சலம், ''என் மகன் இறந்ததும், சென்னிமலை போலீஸ் ஸ்டேஷன்ல புகார் கொடுத்தோம். ஆனா, இதுவரை அந்தப் புகார் மேல நடவடிக்கை எடுக்கலை. அறநிலையத் துறை சார்பா, எந்த ஒரு அதிகாரியும் எங்களைத் தொடர்புகொள்ளலை. கும்பாபிஷேகம் நடந்த அன்னைக்கு இதுபோல மின்கசிவு இருந்திருந்தா, எவ்வளவு பெரிய அசம்பாவிதம் நேர்ந்திருக்கும்னு எண்ணிப் பார்க்கக்கூட முடியலை. ஆதரவு இல்லாம இருக்கும் எங்க குடும்பத்துக்கு, நீதி கிடைக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்'' என்றார்.

சதீஷ்குமாரின் உறவினர் பிரகாஷ், ''சம்பவம் நடந்து நான்கு நாட்கள் ஆகியும், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்ல. அந்த ஏணியில் கடந்த ரெண்டு மாதங்களா மின்கசிவு இருந்திருக்கு. இதுகுறித்து கோயில் நிர்வாகத்திடம் பலமுறை புகார் செய்யப்பட்டு இருக்குது. ஒரு நடவடிக்கையும் எடுக்காம இருந்திருக்காங்க. சம்பவம் நடந்த சமயத்துலகூட கோயில்ல முதலுதவி செய்ய யாரும் இல்லை. கவனக்குறைவா செயல்பட்ட அதிகாரிகளைப் பணிநீக்கம் செய்யணும். அவர் மனைவி பிரேமாவுக்கு வயது 27. குழந்தையையும் குடும்பத்தையும் அவர்தான் காப்பாற்ற வேண்டி இருக்கு. அதனால, அவருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலைக்கு ஏற்பாடு செய்து தந்தா பயனுள்ளதா இருக்கும்'' என்றார்.

இதுகுறித்து மலைக்கோவிலின் நிர்வாக அலுவலர் பசவராஜன், ''அந்த இடம் கட்டுமானப் பணியாளர்கள் பயன்படுத்தி வந்த பகுதி. அங்கு அவர்கள் பயன்படுத்திய மின்சார வயர்களில் டேமேஜ் இருந்த காரணத்தால், மின்கசிவு ஏற்பட்டுள்ளது. இதற்கு முன் வந்த புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இது யாரும் எதிர்பாராத ஒரு விபத்து. கும்பாபிஷேகத்தில் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால், அதற்காக விபத்துக் காப்பீடும் செய்துள்ளோம். அதில் இருந்து பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். இந்த சம்பவத்தின் காரணமாக பூமிநாதன், அறிவழகன் இரண்டு கோயில் ஊழியர்களின் மேல் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' என்றார்.

இதுகுறித்து பெருந்துறை டி.எஸ்.பி பாஸ்கரன், ''இது ஒரு எதிர்பாராத விபத்து. எஃப்.ஐ.ஆரில் இது மின்கசிவால் ஏற்பட்ட மரணம் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இதற்கு துறைரீதியான நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது'' என்றார்.

இழப்பீடு கொடுப்பதுடன், இனி இப்படி இழப்புகள் ஏற்படாத வகையில் நடவடிக்கையும் எடுக்கப்பட வேண்டும்.

- மா.அ.மோகன் பிரபாகரன்