Published:Updated:

முதல்வர் வீட்டுக்குப் பின்புறம்... ஒரு நம்பர் லாட்டரி கனஜோர்!

முதல்வர் வீட்டுக்குப் பின்புறம்... ஒரு நம்பர் லாட்டரி கனஜோர்!

பிரீமியம் ஸ்டோரி
முதல்வர் வீட்டுக்குப் பின்புறம்... ஒரு நம்பர் லாட்டரி கனஜோர்!

''மயிலாப்பூர் பகுதியில் ஒரு நம்பர் லாட்டரி விற்பனை கொடிகட்டிப் பறக்கிறது. லாட்டரி மோகத்தில் சிக்கி சீரழியும் மக்களைக் காப்பாற்றுங்கள்'' - இப்படியோர் கடிதம் நமது அலுவலகத்துக்கு வர, அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த அந்த இடங்களுக்கு நேரில் சென்றோம்.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் குளம் - ஆர்.கே.மடம் சாலை... மக்கள் காலை வேளையில் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்க, அதே வேகத்தில் அங்கே கூல்டிரிங்ஸ் கடை அருகில் ரோட்டோரம் ஸ்டூல், டேபிள் போட்டு ஒருவர் உட்கார்ந்து இருந்தார். அவருக்கு இரண்டு கையாட்கள். அவர்களை ஒரு கும்பல் மொய்த்துக்கொண்டிருந்தது.

முதல்வர் வீட்டுக்குப் பின்புறம்... ஒரு நம்பர் லாட்டரி கனஜோர்!

அதில் ஒருவரைத் தள்ளிக்கொண்டு போய் பேச்சுக் கொடுத்தோம். ''சார், நான் ஒரு கட்டடத் தொழிலாளி. தினமும் காலையிலேயே இங்க வந்த பிறகுதான், வேலைக்குப் போவேன். 70 ரூபாய் கொடுத்து ஒரு டிக்கெட் வாங்குவேன். நாம விரும்புற எண்ணை எழுதி ஒரு ரசீது தருவாங்க. மொத்தமுள்ள ஆறு

முதல்வர் வீட்டுக்குப் பின்புறம்... ஒரு நம்பர் லாட்டரி கனஜோர்!

நம்பரில் கடைசி மூன்று நம்பர்கள் அடிப்படையிலதான் பரிசு. கடைசி நம்பர் மட்டும் விழுந்தா, 100 ரூபாய். கடைசி இரண்டு நம்பர் விழுந்தா, ஆயிரம் ரூபாய். கடைசி மூன்று நம்பர் விழுந்தா, 25 ஆயிரம் ரூபாய் பரிசு. கமிஷன் 2,500 ரூபாய் போக, மீதி தொகையைத் தந்துடுவாங்க. காலை 6 மணி முதல் மத்தியானம் ரெண்டு மணி வரை இந்த டிக்கெட் விற்பனை நடக்கும். மாலை 3 மணிக்கு மேல் ரிசல்ட். போன்லேயே ரிசல்ட்டைத் தெரிஞ்சுக்குவேன். தவிர, முன்பு இருந்த பழைய லாட்டரி சீட்டு போலவே, 'தங்கம், நல்ல நேரம், குமரன், குயில், ரோஜா, விஷ்ணு’ன்னு லாட்டரி சீட்டுகளும் இங்கே கிடைக்குது'' என்றார் அவர்.

''ஒரு துண்டு சீட்டுல இந்த லாட்டரி சீட்டு பெயரையும் ஆறு நம்பரையும் தேதி போட்டு எழுதி தந்துடுவாங்க. 60 ரூபாய், 100 ரூபாய், 200 ரூபாய், 400 ரூபாய், 500 ரூபாய்ன்னு விலைகள்ல  இந்தச் சீட்டுகள் கிடைக்குது. பரிசுத் தொகையும் ஒரு லட்சத்துல இருந்து 15 லட்சம் ரூபாய் வரை உண்டு. இவங்ககிட்ட லாட்டரி வாங்கினா, ஏமாத்த மாட்டாங்க. நம்பர் லாட்டரியில் ஒரு தடவை எனக்கு 25 ஆயிரம் ரூபாய் விழுந்தது'' என்றார் இன்னொருவர்.

கோழிப்பண்ணை கிரவுண்ட், ஆலயம்மன் கோயில் முதல்வர் வீட்டுக்கு பின்புறம் இருக்கும் தேனாம்பேட்டை போயஸ் ரோடு ஆகிய பகுதிகளிலும் இந்த லாட்டரி சீட்டு வியாபாரம் நடத்தப்படுகிறதாம். மயிலை பகுதியில் இந்த லாட்டரி சீட்டு தொழிலை சூரியன் பெயரைக் கொண்ட ஒருவரும்  நகைச்சுவை நடிகர் பெயரைக் கொண்ட ஒருவரும்தான் என்கிறார்கள். இவர்களுக்கு ஜெயமான ஆளுங்கட்சி பிரமுகர் ஒருவர் எல்லாமுமாக இருந்து தொழிலை நடத்த உதவி செய்கிறாராம்.  தினமும் பல லட்சங்கள் புழங்கும் இந்தத் தொழிலில் எந்தப் பிரச்னையும் வராமல் இருக்க பல லட்சங்கள் மாதா மாதம் கைமாறுகிறதாம்.

அதுசரி... இந்தத் தொழில் எப்படி நடக்கிறது?  

''இன்டர்நெட் வழியாகத்தான் இந்தத் தொழில் நடக்கிறது. நம்பர் லாட்டரிக்கு தலைமையகம் கேரளாதான் என்கிறார்கள். நம்பர் லாட்டரியில் கடைசி மூன்று எண்கள்தான் பரிசுக்கு உரியது. அதுபோல லாட்டரி சீட்டுகளிலும் ஆறு எண்கள் எழுதித்தருவார்கள். அந்த எண்களில் பரிசுக்குரிய எண்கள் மறுநாள் காலை பிரின்ட்-அவுட்டாக இவர்கள் வைத்திருப்பார்கள். அதைப் பார்த்து பரிசைத் தெரிந்துகொள்ளலாம். சென்னையில் பல இடங்களில் இருந்து லாட்டரி சீட்டு வாங்க ஆட்கள் வருகிறார்கள். வெளியூர்களில் இருந்துகூட எஸ்.எம்.எஸ் முறையில் நம்பரை அனுப்பி லாட்டரி டிக்கெட், ஒரு நம்பர் சீட்டு எடுக்கிறார்கள்'' என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.  

தேவை இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இளங்கோ, ''லட்சக்கணக்கான அடித்தட்டு மக்கள், லாட்டரி புதைமணலில் மாட்டிக்கொண்டு தத்தளித்ததைக் கண்ட முதல்வர் ஜெயலலிதா அவர்கள், கடந்த 2003-ம் ஆண்டு ஜனவரி 8-ம் தேதி தமிழகத்தில் அனைத்து விதமான லாட்டரி சீட்டு விற்பனையையும் தடைசெய்தார். முதல்வர், தடைசெய்தாலும், பல்வேறு பெயர்களில் லாட்டரி சீட்டு தொழில் நடந்துகொண்டுதான் இருக்கிறது. முதல்வர் தடை உத்தரவு காற்றில் பறக்கிறது' என்றார்.

முதல்வர் கவனிப்பாரா?

- அலெக்ஸாண்டர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு