Published:Updated:

''விலங்குகளுக்குத் தெரிந்த நாகரிகம்கூட மனிதர்களுக்கு இல்லை!''

வண்டலூர் கோபம்

''விலங்குகளுக்குத் தெரிந்த நாகரிகம்கூட மனிதர்களுக்கு இல்லை!''

வண்டலூர் கோபம்

Published:Updated:
''விலங்குகளுக்குத் தெரிந்த நாகரிகம்கூட மனிதர்களுக்கு இல்லை!''

வனவிலங்குகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்ட மிருகக் காட்சிசாலைகள், இப்போது காதல்காட்சி சாலைகளாக மாறிவருகின்றன.

இதோ வண்டலூர் உலா...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''ஆசியாவில் மிகப் பெரியதும், இந்தியாவின் முதல் வனவியல் பூங்காவுமான இந்த பூங்கா முதல்வர் கட்டுப்பாட்டில் உள்ளது. யானைகளுக்கு புத்துணர்வு முகாம் அமைத்தது முதல் வண்டலூர் பூங்கா புலிக்குட்டிக்கு பெயர் வைப்பது வரை முதல்வரே முன்னின்று ரசித்து செய்வார். வனவிலங்குகள் மீது முதல்வருக்கு தனிப்பாசம் உண்டு. ஆனால், வனத்துறை ஊழியர்கள் அங்குள்ள விலங்குகள் மீது அந்த அளவுக்கு அக்கறை காட்டுவது இல்லை'' என்கின்றனர் பூங்காவின் உள்விவரம் அறிந்தவர்கள்.

''விலங்குகளுக்குத் தெரிந்த நாகரிகம்கூட மனிதர்களுக்கு இல்லை!''

எந்தப் பக்கம் திரும்பினாலும் காதல் (!) ஜோடிகள். ஒவ்வொரு நிழல் கூடத்திலும் குறைந்தது நான்கு ஜோடிகளாவது தஞ்சம் அடைந்திருக்கின்றன. கூச்சமே இல்லாமல் புதர்களிலும் வழித்தட ஓரங்களிலும் சரஸம் புரிகிறார்கள். கூண்டில் இருக்கும் சிறுத்தை, புலி, சிங்கம் போன்ற விலங்குகளை கம்பி வேலிக்கு வெளியே நின்று உறுமும் மனிதர்களும், பிளாஸ்டிக் பாட்டில்களை விலங்குகள் உள்ள பகுதியில் வீசும் மிருக குணம்கொண்ட மனிதர்களுக்கும் அங்கே பஞ்சம் இல்லை. அத்துமீறுபவர்களைக் கேட்கவும் ஆட்கள் இல்லை.  

''விலங்குகளுக்குத் தெரிந்த நாகரிகம்கூட மனிதர்களுக்கு இல்லை!''

ஊழியர் ஒருவரிடம் பேசினோம். ''கடந்த முறை புலிக் குட்டிகளுக்குப் பெயர் வைக்க முதல்வர் வந்தபோது வெள்ளைப் புலி கூண்டுக்கு மிக அருகே நின்று பார்த்தார். அதன் கூண்டுகள் இரும்பில் செய்யப்பட்டதால் துருப்பிடித்து இருந்ததது. உடனே அதிகாரிகளிடம் அவற்றை எவர்சில்வரில் மாற்ற சொன்னார். அதற்கான செலவுகளையும் உடனே ஒதுக்கித்தர அந்த இடத்திலேயே உத்தரவிட்டார். ஆனால் பழைய இரும்பு கூண்டுகளை டெண்டர் விடாமல் அதிகாரிகள் அவர்கள் விருப்பம்போல விற்றுவிட்டார்கள். இதில் அதிகாரிகளுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக மின்சார ஒயர்களைத் திருடியதாக ஒருவரை மட்டும் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர். அதுபோல் டிக்கட் கவுன்டரில் போலியாக நுழைவுச் சீட்டை அவர்களே அச்சடித்து விநியோகித்து வந்ததால், மூன்று ஊழியர்களை நிறுத்திவிட்டார்கள். உரிய நடவடிக்கை எடுத்து வண்டலூர்  பூங்காவை பாதுகாக்க வேண்டும்'' என்று ஆதங்கப்பட்டுக் கொண்டார்.

மதுரையைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி மோகன், ''வண்டலூர் வனவியல் பூங்காவைப் பார்க்கணும்னு என்னோட பசங்களுக்கு ரொம்பநாள் ஆசை. எந்தப் பக்கம் போனாலும் காதலர்கள் கூட்டமாகவே இருக்கிறது. பள்ளி மாணவர்களும் கல்லூரி மாணவர்களும் வகுப்புக்குப் போகாமல் ஜோடியாகவே வந்துவிடுகிறார்கள். நான்கு சுவருக்குள் செய்ய வேண்டியதை இங்கே செய்கிறார்கள். விலங்குகளுக்குத் தெரிந்த நாகரிகம்கூட மனிதர்களுக்குத் தெரியவில்லை' என்றார் வேதனையாக.

வனத்துறை உதவி இயக்குநர் சுதாகரை சந்தித்தோம். ''இங்குள்ள எலக்ரானிக் மெஷினில் எத்தனை பேர் வருகிறார்கள் என்ற விவரம் நாள் ஒன்றுக்கு ஐந்து முறை எஸ்.எம்.எஸ் மூலம் அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்படும். போலி டிக்கெட் விற்பனைக்கு வாய்ப்பே இல்லை.

''விலங்குகளுக்குத் தெரிந்த நாகரிகம்கூட மனிதர்களுக்கு இல்லை!''

விலங்குகள் சிறுநீர் கழிப்பதால் இரும்பில் உள்ள கூண்டுகள் துருப்பிடித்துவிடுகின்றன. அவற்றில் விலங்குகள் உரசும்போது காயம் ஏற்பட வாய்ப்புள்ளதால் எல்லா கூண்டுகளையும் எவர்சில்வர் கூண்டுகளாக மாற்றுபடி முதல்வர் சொன்னார். அந்தப் பழைய இரும்புகளும் முறைப்படி டெண்டர் விடப்பட்டன. மின் ஒயர்களை திருடும்போதே அவற்றைத் திருடியவரை காவல் துறையில் ஒப்படைத்துவிட்டோம். காதலர்களைக் கட்டுப்படுத்த எங்களால் முடியாது. அது எங்களின் வேலையும் இல்லை'' என்று விளக்கம் அளித்தார்.

விலங்குகளின் இடத்தை மனிதர்களிடத்தில் இருந்து காப்பாற்றியாக வேண்டும்.

- பா.ஜெயவேல்

படங்கள்: அ.பார்த்திபன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism