Published:Updated:

தற்காலிக டாஸ்மாக்!

அலறும் அந்தியூர்

தற்காலிக டாஸ்மாக்!

அலறும் அந்தியூர்

Published:Updated:
தற்காலிக டாஸ்மாக்!

டாஸ்மாக் என்றாலே பிரச்னைதான்! ஈரோடு மாவட்டம் அந்தியூரிலோ சற்று வித்தியாசமான பிரச்னை.

அந்தியூரில் உள்ள குருநாதசாமி கோயிலில் தேர்த் திருவிழாவும் குதிரை சந்தையும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் நடக்கும். தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா என பல்வேறு மாநிலங்களில் இருந்தும் இந்தத் திருவிழாவுக்கு பக்தர்கள் வருவார்கள். இதற்காக அரசு சார்பில் போக்குவரத்து, கழிப்பறை வசதிகள் என பல்வேறு ஏற்பாடுகள் செய்து தரப்படும். இதில் கடந்த சில ஆண்டுகளாக தமிழக அரசின் டாஸ்மாக் கடையும் தற்காலிகமாகத் திறக்கப்பட்டு வருகிறது. இதுதான் பொதுமக்களை முகம் சுளிக்கவைக்கும். இந்த ஆண்டு டாஸ்மாக் கடையைத் திறக்கக் கூடாது என்ற கோரிக்கையும் கிளம்பியிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தற்காலிக டாஸ்மாக்!

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்திருக்கும் பி.ஜே.பி-யின் ஈரோடு வடக்கு மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் கார்த்திகேயனிடம் பேசினோம். 'தமிழக அளவில் மிகப் பெரிய கோயில் திருவிழா இது. விழா நடக்கும் நாட்களில் லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள். அந்தியூரில் பேரூராட்சியில் உள்ள மூன்று மதுக்கடைகள் உட்பட அந்தப் பகுதியில் மொத்தம் ஏழு மதுக்கடைகள் உள்ளன. இதுதவிர விழாக் காலங்களில் இந்தப் பகுதியில் கோயிலுக்கு மிக அருகில் புதுப்பாளையம் வெள்ளைப் பிள்ளையார் கோயில் பகுதியில் இருக்கும் தனியார் இடத்தில் தற்காலிக டாஸ்மாக் கடை அமைக்கிறார்கள். இதனால் அந்தப் பகுதியில் குடியிருப்பவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். வெளியூர்களில் இருந்து வருபவர்கள் குடித்துவிட்டு இங்கே குடியிருக்கும் மக்களுக்கும், பக்தர்களுக்கு பல்வேறு பிரச்னைகளைக் கொடுக்கிறார்கள். சமூக விரோத செயல்களிலும் ஈடுபடுகிறார்கள்.

தற்காலிக டாஸ்மாக்!
தற்காலிக டாஸ்மாக்!

இப்படி அமைக்கப்படும் தற்காலிக டாஸ்மாக் கடைக்கு பார் வசதி கிடையாது. அதனால், சரக்கு வாங்குபவர்கள் அங்கேயே கோயிலுக்கு அருகில் நின்றபடி குடிக்கிறார்கள். பெண்கள் கோயிலுக்கு வரவே அச்சப்படும் சூழ்நிலையை உருவாக்கிவிட்டார்கள். அங்கே கடைபோடும் வியாபாரிகளுக்கும் பெரும் தொல்லை கொடுக்கிறார்கள். இது அத்தனையும் கடந்த காலத்தில் நடந்தவை. இந்த தற்காலிக கடைக்கு மாவட்ட ஆட்சியர்தான் அனுமதி அளிக்கிறார். இந்த ஆண்டும் அந்த சிக்கல் வரக்கூடாது என்பதற்காகத்தான் முன்கூட்டியே தற்காலிக டாஸ்மாக் திறக்கக் கூடாது என்று மனு கொடுத்திருக்கிறோம்'' என்று சொன்னார்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் சண்முகத்திடம் பேசினோம். ''தற்காலிக டாஸ்மாக் திறக்க நான் அனுமதி எதுவும் தரவில்லை. நீங்கள் குறிப்பிடும் தற்காலிக டாஸ்மாக் கடையால் எந்தப் பிரச்னையும் வந்ததாக என் கவனத்துக்கு இதற்கு முன் வரவில்லை. இப்போதுதான் புகார் வந்திருக்கிறது. நிச்சயம் இந்த ஆண்டு தற்காலிக டாஸ்மாக் திறக்க அனுமதி அளிக்க மாட்டேன்!'' என்றார் உறுதியாக.

நல்லது நடந்தால் சரிதான்!

- மா.அ.மோகன் பிரபாகரன்

படங்கள்: ம.சு.செழியன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism