Published:Updated:

அ.தி.மு.க.வினரை ஆதரிக்கிறாரா கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர்.?

அறிவாலயம் சென்ற பகீர் கடிதம்

அ.தி.மு.க.வினரை ஆதரிக்கிறாரா கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர்.?

அறிவாலயம் சென்ற பகீர் கடிதம்

Published:Updated:
அ.தி.மு.க.வினரை ஆதரிக்கிறாரா கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர்.?

விருதுநகர் மாவட்ட தி.மு.க-வின் ஒட்டுமொத்த நிர்வாகிகள் எழுதுவதாக கருணாநிதி, ஸ்டாலின் உள்ளிட்டவர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் விருதுநகர் தி.மு.க மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பற்றி பகிரங்கமாகப் பல்வேறு குற்றச்சாட்டுகள் சொல்லப்பட்டு உள்ளன.

அந்தக் கடிதத்தின் சாராம்சம் இதுதான்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அ.தி.மு.க.வினரை ஆதரிக்கிறாரா கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர்.?

''கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரனை உடனடியாக மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் இவரால்தான் தி.மு.க மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டது.  

கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், அ.தி.மு.க-வில் இருந்து வந்தவர். மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் பதவியை, அ.தி.மு.க-வில் இருந்து இவரோடு வந்த தனுஷ்கோடியின் மகன் தனுஷ்குமாருக்கு கொடுத்தார். மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் பதவியை, அ.தி.மு.க-வில் இருந்து வந்த தனது மருமகன் ராஜகுருவுக்கு அளித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர் பதவியை, அ.தி.மு.க-வில் இருந்து வந்த தனது தம்பி சுப்புராஜுக்குக் கொடுத்தார். இப்போதைய ஒன்றியச் செயலாளர்களில் மூன்று பேர் அ.தி.மு.க-வில் இருந்து வந்தவர்கள். இப்போதைய நகரச் செயலாளரும்  அ.தி.மு.க-வில் இருந்து வந்தவர். இப்படி அ.தி.மு.க-வில் இருந்து வந்தவர்களுக்கே முக்கியத்துவம் அளிக்கிறார். உண்மையான தி.மு.க-வினரைப் புறக்கணிக்கிறார்.

சிவகாசி வனராஜையும் சிவகாசி சந்திரனையும் மோதவிட்டுள்ளார். வெம்பக்கோட்டை ஒன்றியச் செயலாளர் கனிராஜையும் தாயில்பட்டி சந்தானத்தையும் மோதவிட்டுள்ளார். இவரின் செயல்பாட்டால் முன்னாள் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் கே.வி.கந்தசாமி பி.ஜே.பி-யில் சேர்ந்துவிட்டார். திருவல்லிபுத்தூர் நகரச் செயலாளர் சிவக்குமார் இயக்கத்தைவிட்டே ஒதுங்கிவிட்டார். இவரின் பிரித்தாளும் சூழ்ச்சியையும் நாடகத்தையும் அருப்புக்கோட்டை தொகுதி மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர். வரக்கூடிய தேர்தலில் இவர் தலைகீழாக நின்றாலும் தோல்வியடைவது உறுதி'' - இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர் மீதான தி.மு.க-வினரின் குற்றச்சாட்டுகள் பற்றி அவரின் கருத்துகளை அறிய அவரைச் சந்தித்தோம். ''இதுபற்றி நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. என் மீது புகார் அனுப்பியவர்களிடம் போய் கேளுங்கள்'' என்று கோபத்துடன் சொன்னார்.

கே.கே.எஸ்.எஸ்.ஆரின் ஆதரவாளர்களிடம் பேசினோம். ''கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கட்சியில் இணைந்து மாவட்டச் செயலாளர் ஆனது முதல் முக்கிய தி.மு.க நிர்வாகிகளை அரவணைத்துதான்

அ.தி.மு.க.வினரை ஆதரிக்கிறாரா கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர்.?

கட்சி நடத்துகிறார். அதே நேரம், தன்னை நம்பி வந்த ஆதரவாளர்களைக் காப்பாற்றுவது அவரது கடமை என்று நினைக்கிறார். அதனால்தான் அருப்புக்கோட்டை நகரச் செயலாளர் ஏ.கே.மணி, நகராட்சி சேர்மன் சிவப்பிரகாசம் போன்றவர்களுக்கு பதவிகள் வாங்கித் தந்திருக்கிறார். கே.கே.எஸ்.எஸ்.ஆர். மாவட்டச் செயலாளர் ஆனதும், தங்கப்பாண்டியனின் மகன் தங்கம் தென்னரசுவுக்கும் அவருக்கும் இடையே சண்டை மூட்டிவிட சிலர் முயன்றனர். ஆனால், அண்ணாச்சி தங்கம் தென்னரசுவை அரவணைத்துப் போவதால்தான், இதுவரை மாவட்டத்தில் எந்தப் பிரச்னையும் இல்லை. மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளராக இருந்த தங்கம் தென்னரசுவை மு.க.ஸ்டாலின் அணியில் சேர்த்தவரே அண்ணாச்சிதான். இப்போது மு.க.ஸ்டாலினின் நம்பிக்கைக்கு உரியவர்கள் பட்டியலில் தங்கம் தென்னரசும் இடம் பெற்றுவிட்டார்.  காழ்ப்பு உணர்ச்சி இருந்தால் அண்ணாச்சி இப்படி செய்வாரா?

கே.கே.எஸ்.எஸ்.ஆர் தனது உறவினர் களுக்கு முக்கியத்துவம் தருகிறார் என்ற குற்றச்சாட்டிலும் உண்மை இல்லை. அவருக்கு நாராயணன், ரமேஷ் என்று இரு மகன்கள். இருவரும் பிசினஸ் செய்கின்றனர். இதில் ரமேஷை மட்டும் மாவட்ட இளைஞர் அணியில் சேர்த்துவிட்டார். ஆனால், முக்கிய பொறுப்புகள் எதுவும்  வாங்கித் தரவில்லை'' என்றனர்.

விரைவில் நடக்க இருக்கும் தி.மு.க உட்கட்சித் தேர்தல் அமைதியாக நடக்குமா என்பதுதான் விருதுநகர்வாசிகளின்  கவலை.!

- எம்.கார்த்தி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism