சென்னை, விருகம்பாக்கம் காவல் நிலையத்தை வாஸ்துபடி மாற்றியமைத்துள்ளதாக ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது. காவல் நிலையத்தைத் துரத்தும் பிரச்னைகளில் இருந்து தப்பவே இந்த வாஸ்து பரிகாரம் என்று சொல்லப்படுகிறது.

விருகம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில்தான் சினிமா வி.ஐ.பி-க்கள் பலரும் வசிக்கின்றனர். அவர்கள் தொடர்பான ஏகப்பட்ட பசையான பஞ்சாயத்துகள் இங்கு விசாரணைக்கு வரும். அந்த விசாரணைகள், அதனைத் தொடரும் விவகாரங்கள் மூலம் சில சிக்கல்களில் மாட்டும் சூழ்நிலையும் போலீஸாருக்கு வரும்.

இங்கு பணியாற்றிய கடவுள் பெயர் கொண்ட சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் லஞ்ச ஒழிப்பு போலீஸில் சிக்கி முதலில் பிரச்னைக்குப் பிள்ளையார் சுழிப் போட்டார். அடுத்து அங்கு பதவியேற்ற எந்த இன்ஸ்பெக்டரும் நீண்ட காலம் தாக்குப்பிடிக்க முடியவில்லை. இந்த நிலையில், காவல் நிலையத்தில் கைதி ஒருவர் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சமீபத்தில் இங்கு பணியாற்றிய குமரேசன், ராஜா ஆகிய இருவர், விபசார போலீஸ் எனக் கூறி இரண்டு நர்ஸ்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட... அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அடுத்து, கொலை கைதி ஒருவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைதுசெய்யாமல் இருக்க மாமூல் கேட்டதாக இன்ஸ்பெக்டர் ஜெயராம் மீது புகார் கிளம்பியது. இந்தப் புகாரின் எதிரொலியாக காவல் நிலையம் முற்றுகையிடப்பட்டது. அவரும் இடம் மாற்றப்பட்டார்.

''இப்படி கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏதாவது ஒரு பிரச்னையில் சிக்கும் விருகம்பாக்கம் காவல் நிலையத்தை வாஸ்து சாஸ்திரப்படி மாற்றியமைக்க அங்கு பணியாற்றும் பெண் போலீஸ் ஒருவர் முடிவு செய்து, அதற்கான உத்தரவையும் உயர் அதிகாரிகளிடம் வாய்மொழியாகப் பெற்றுள்ளார். அதன்படி, விருகம்பாக்கம் காவல் நிலைய நுழைவு வாயிலை இடித்துவிட்டு, மற்றொரு இடத்தில் மாற்றி அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இனிமேல், அங்கு பணியாற்றும் போலீஸாருக்கு எந்தப் பிரச்னைகளும் வராது என்று போலீஸார் நம்புகின்றனர்'' என்கிறார்கள் விவரமறிந்த வட்டாரத்தினர்.

இதுகுறித்து வடபழனி உதவி கமிஷனர் சுப்புராஜிடம் பேசினோம். ''விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் வரவேற்பாளர் அமர்வதற்காகப் பணிகள் நடந்து வருகிறது. வாஸ்து சாஸ்திரப்படி பணிகள் எதுவும் நடக்கவில்லை'' என்றார்.

இதோ... வாஸ்துக்கும் ஒரு சர்ச்சை கிளம்பிடுச்சே... விருகம்பாக்கம் காவல் நிலையத்தை பிரச்னைகள் விடாதுதான்போல!

- எஸ்.மகேஷ்

படம்: ஜெ.வேங்கடராஜ்