கடந்த 10-8-14 தேதியிட்ட ஜூ.வி. இதழில் 'ஆக்கிரமிப்பை அகற்றினால் அவ்வளவுதான்!’ என்ற தலைப்பில் வெளியான செய்தி குறித்து தனது விளக்கத்தை அனுப்பியுள்ளார், டாக்டர் அம்பேத்கர் இரவு பாடசாலையின் சட்ட ஆலோசகர் பி.சாரநாத்.

அதில், ''மயிலாப்பூர் ரோசரி சர்ச் சாலையில் இருந்த, இரவு நேர பாடசாலை கட்டடம் என்று குறிப்பிடப்படும் டாக்டர் அம்பேத்கர் இரவு பாடசாலை கடந்த 30 ஆண்டுகளாக இந்திய குடியரசு கட்சியைச் சேர்ந்த இதே பகுதியிலுள்ள சுகுமார் என்பவரால் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை அந்த இடத்தில் எந்த வித சமூக விரோத செயலோ, போக்குவரத்தில் இடையூரோ, விபத்தோ ஏற்பட்டதாக வழக்கு பதிவு இல்லை. அப்பகுதி மக்களின் நலனுக்காகவும் அவர்களின் ஆதரவுடனும் பாடசாலை செயல்பட்டு வந்தது. இதே பாடசாலையை ஒட்டி அதே நடைபாதையில் கோயிலும் உள்ளது. மக்களின் ஆதரவுடனேயே கோயிலும் பாடசாலையும் இயங்கி வந்தது. இந்த இடத்தில் கட்டடம் கட்டி பிளாட்களை விற்பனை செய்ய வந்தவர் ஆல்வின்ராஜா. தான் கட்டும் அப்பார்ட்மென்ட் அருகில் பாடசாலை இயங்குவது தன்னுடைய வியாபாரத்துக்கோ அந்தஸ்துக்கோ இழுக்கு என்ற எண்ணத்தில் கடந்த 13-12-13 அன்று நடு இரவில் சமூக விரோதிகள் துணைக்கொண்டு இரவோடு இரவாக இடித்து தரைமட்டமாக்கினார். இதனால் ஆல்வின்ராஜா மற்றும் அவரது ஆட்கள் மீது 10-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பாடசாலையை இடிக்க வழக்கு தொடர்ந்திருக்கும் இம்மானுவேல்ராஜ், ஆல்வின்ராஜாவின் ஆள். புதிதாக கட்டப்பட்ட அம்பேத்கர் இரவு பாடசாலையை மீண்டும் இடிக்கப் பணியாற்றுகிறார்.

ஆக்னஸ் என்பவர், பாடசாலையை ஆல்வின்ராஜா மற்றும் அவரது ஆட்கள் கடந்த 13-12-13 அன்று இடித்தபோது அதைக் கண்டித்து மக்களோடு இணைந்து சாலை மறியல் செய்தவர். ஆனால், இப்போது பாடசாலையை இடிக்க வேண்டும் என்று கூறுகிறார். இடையில் என்ன மாற்றம் நடந்தது என்று அவர்தான் விளக்க வேண்டும். சுமார் 30 ஆண்டுகளாக எவ்வித பிரச்னையும் இல்லாமல் இயங்கி வந்த பாடசாலை இப்போது மட்டும் ஏன் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் பிரச்னைக்குள்ளாக்கப்பட வேண்டும்?'' என்று குறிப்பிட்டுள்ளார்.