சமீபகாலமாக சர்ச்சையில் சிக்கும் போலீஸாரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வேலியே பயிரை மேய்ந்த கதையாகப் புகார் கொடுக்க வந்த பெண்களிடமே சில போலீஸார் அத்துமீறி இருக்கிறார்கள். விருகம்பாக்கம், கிண்டி போலீஸாரின் அட்டூழியங்களை, பாதிக்கப்பட்டவர்கள் புகாராகக் கொடுத்துள்ளனர். மற்ற போலீஸ் நிலையங்களில் நடப்பதை பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் புகார் எதுவும் கொடுக்கப்படவில்லை. இருப்பினும் உளவுப்பிரிவினர் ஒவ்வொரு போலீஸ் நிலையங்களில் நடக்கும் அக்கிரமங்களைப் பட்டியல் போட்டு உயர் அதிகாரிகளிடம் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் சென்னையில் போலீஸாரை இடம்மாற்றம் செய்யும் படலம் தொடங்கியிருக்கிறது.

கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி டி.ஜி.பி ராமானுஜம் 15 உதவி கமிஷனர்களை அதிரடியாக இடமாற்றினார். அடுத்தநாள் ஒன்பது இன்ஸ்பெக்டர்கள் இடம்மாற்றப்பட்டனர். போலீஸ் அதிகாரிகள் இடம்மாற்றத்துக்குப் புகார்களே காரணம் என்கிறது போலீஸ் வட்டாரங்கள்.

உளவுப்பிரிவு போலீஸாரைத் தவிர மற்ற போலீஸார் ஒரு போலீஸ் நிலையத்தில் மூன்றாண்டுகளுக்கு மேல் பணியாற்றக் கூடாது என்பது நடைமுறை. ஆனால், அதையும் மீறி வடபழனி சரகத்தில் பலர் ஆறு ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றுகின்றனர். இப்படி பல ஆண்டுகளாக ஒரே போலீஸ் நிலையத்தில் பணியாற்றுவதால் அங்கு தவறுகள் சர்வசாதாரணமாகிவிடுகிறது. நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் சூழ்நிலை உருவாகிறது. கடந்த சில தினங்களுக்கு முன், சென்னையில் ஒரே நாளில் ஒன்பது செயின் பறிப்புச் சம்பவங்கள் அரங்கேறி, பொதுமக்களை பீதிக்குள்ளாக்கியது.

மேலும் பழிக்குப்பழியாக ரவுடிகள் கொலை, அம்பத்தூரில் இந்து முன்னணிப் பிரமுகர் கொலை என கொலைப் பட்டியலும் நீண்டன. வழிப்பறி, கொள்ளையும் சென்னை மட்டுமல்லாமல் அதையொட்டி உள்ள புறநகர் பகுதிகளிலும் அதிகரித்தன. இத்தகைய சம்பவங்கள் சட்டம் - ஒழுங்கு சீராக இல்லை என்பதைச் சுட்டிக்காட்டின. இதற்கு முதல்கட்ட நடவடிக்கையாக போலீஸ் அதிகாரிகள் இடம்மாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இப்போது சென்னையில் இடம் மாற்றப்பட்டுள்ள 15 உதவி கமிஷனர்களில் பெரும்பாலானவர்கள் மீது தொடர்ச்சியாக புகார்கள் வந்திருக்கின்றன. கோயம்பேடு சரகத்தில் இந்தக் குற்றச்சாட்டு அதிகம். இதனால், அந்தச் சரகத்தில் உள்ளவர்கள் ஒட்டுமொத்தமாகப் பந்தாடப்பட்டுள்ளனர். இன்ஸ்பெக்டர்களைப் பொறுத்தவரைக்கும் முதலில் நடவடிக்கை எடுக்கப்பட்டது விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில்தான். இதற்குக் காரணம் விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் போலீஸாரின் அத்துமீறல்கள் அதிகம் என்கிறார்கள். இதைக் கட்டுப்படுத்த தவறியதாக அங்கு பணியாற்றிய இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை பாய்ந்தது.

இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ''சென்னையில் உள்ள போலீஸ் நிலையங்களில் சட்டம் ஒழுங்குப் பிரச்னையும், க்ரைம் ரேட்டும் சமீபகாலமாக அதிகரித்துள்ளன. தினமும் போலீஸ் நிலையங்களுக்கு புகார் கொடுக்க வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன. ஆனால் பெரும்பாலான புகார்கள் போலீஸ் நிலையங்களில் முறையாக விசாரிக்காமல் கிடப்பில் போடப்படுகின்றன. இவர்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு படையெடுக்கின்றனர்'' என்றார்.

கோயம்பேடு பகுதியில் இருந்தவர் மேல் ஏற்கெனவே கந்துவட்டி கும்பல் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தது. இப்போது அவரும் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு இடம் மாற்றப்பட்டு இருக்கிறார். வில்லிவாக்கத்தில் இருந்த ஒருவரின் உறவினர்கள் பலர் கந்துவட்டித் தொழிலில் உள்ளனர். அவர்கள் மீதான புகார்கள் வரும்பட்சத்தில் இந்த போலீஸ் அதிகாரி அவர்களைக் காப்பாற்றி வந்ததாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. இதற்காக அவர் இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இன்ஸ்பெக்டர் ஒருவர் மீது கே.கே.நகர் பியூட்டி பார்லர் சம்பவ குற்றச்சாட்டு காரணமாகவும், ஆவடி டேங்க் ஃபேக்டரி இன்ஸ்பெக்டர் மீது கைதி தற்கொலை முயற்சி மற்றும் மாமூல் குற்றச்சாட்டு காரணமாகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது முதல்கட்ட நடவடிக்கை. போலீஸ் அதிகாரிகளின் அடுத்தக்கட்ட டிரான்ஸ்ஃபர் பட்டியல் இன்னும் சில தினங்களில் வெளியாகும்'' என்றார்.

காவல் துறையில் உள்ள கறுப்பு ஆடுகளை உடனுக்குடன் களை எடுத்தால் மட்டுமே சட்டம் - ஒழுங்கு சீராக இருக்கும்.

- எஸ்.எஸ்.எம்.