'இந்தியா, பாகிஸ்தான் பிரச்னைகூட முடிவுக்கு வந்தாலும் வரும். ஆனால், அமைச்சர் எம்.சி.சம்பத்துக்கும் கடலூர் நகரமன்றத் தலைவருக்கும் இடையே உள்ள பிரச்னை முடிவுக்கே வராது போலிருக்கிறது'' என்று புலம்புகின்றனர் அ.தி.மு.க-வினர்.

''கடந்த 2012-14-ம் ஆண்டில் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் சுமார் இரண்டரை கோடி ரூபாய் மதிப்பில் கடலூர் நகராட்சியில் பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன'' என்று சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சம்பத் சொல்ல... ''இல்லை. இல்லை. நகராட்சிக்கு உட்பட்ட இடத்தில் எந்தப் பணியும் செய்யவில்லை'' என்று போர்க்கொடி தூக்கியுள்ளார் நகரமன்றத் தலைவர் சுப்ரமணி.

இதுகுறித்து கடலூர் நகரமன்றத் தலைவர் சுப்ரமணியிடம் பேசினோம். ''நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் பணிகளை மேற்கொள்ள வேண்டுமானால், முதலில் நகராட்சிக்குத்தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும். மற்ற துறைகள் மூலம் செய்வது என்றால், நகராட்சியிடம் அனுமதி கேட்க வேண்டும். நாங்கள் நகரமன்றத்தைக் கூட்டி, வார்டு கவுன்சிலர்களிடம் ஒப்புதல் கேட்டு, தீர்மானத்தை நிறைவேற்றி அதற்கான அனுமதியும், அந்தப் பணிகளுக்கான இடத்தையும் கொடுப்போம். நகராட்சியால் பணிகளைச் செய்ய முடியாத சூழ்நிலையில், அவர்கள் வேறு துறையிடம் ஒப்படைக்கலாம். 'தானே’ புயல் வந்தபோதுகூட நகராட்சியின் மூலம்தான் எல்லா பணிகளையும் மேற்கொண்டோம்.

சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சம்பத், பொதுப்பணித் துறை மூலம் இரண்டரை கோடி ரூபாய்க்கு நகராட்சியில் பணிகளை முடித்துள்ளோம் என்கிறார். ஆனால், 2012-13-ம் ஆண்டில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், நகராட்சியில் எந்தப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. நகராட்சிக்குச் சொந்தமான சாலைகள், வடிகால் வாய்க்கால்கள் மற்றும் பிற வேலைகளை, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பொதுப்பணித் துறையினர் மூலம் மேற்கொண்டதற்கான விவரங்கள் நகராட்சியில் இல்லை'' என்றார் காட்டமாக.

கட்சிக்காரர்கள் சிலர் நம்மிடம், ''கடலூர் சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான எம்.சி.சம்பத்துக்கும், நகரமன்றத் தலைவர் சுப்ரமணிக்கும் ஆரம்பத்தில் இருந்தே பிரச்னைதான். இது தொடர்பாக மேலிடத்துக்கு ஏகப்பட்ட புகார்கள் அனுப்பியாச்சு. எந்த விசாரணையும் இல்லை. இவங்க சண்டையால நகராட்சியும் தொகுதியும்தான் இப்போ கோமா ஸ்டேஜ்ல கிடக்கு.

கடலூர்ல சட்டமன்ற அலுவலகம் என்று பேருக்கு இருக்கு. அதை ஒரு நாள்கூட திறந்ததும் இல்லை; அமைச்சர் அந்த அலுவலகத்துக்கு வந்ததும் இல்லை. இந்த நிலையில் உள்ள அந்த அலுவலகத்துக்கு, தேவையில்லாம லட்சங்களை செலவுசெஞ்சு பொதுமக்கள் அமர ஒரு ஷெட் போட்டிருக்காங்க. மக்கள் பணத்தை இப்படி தேவையில்லாம வீணடிக்கிறாங்க. பயணியர் விடுதிக்கு மட்டும்தான் அமைச்சர் வருவார். அதனால, பொதுமக்கள் மனு கொடுக்க பயணியர் விடுதியைத்தான் தேடி அலையுறாங்க.

நகராட்சியில் அனுமதி வாங்காம அமைச்சர் ஆதரவாளர்கள் கட்டடங்கள் கட்டியிருக்கிறாங்க. அதை இடிக்கச் சொல்லி உள்ளூர் திட்டக் குழுமம் ஆர்டர் போட்டது. ஆனா, அதை யாரும் காதுல போட்டுக்கல. இப்ப தொகுதியில் இரண்டரை கோடிக்கு வேலை செய்திருக்கிறதா சொல்றாங்க. அந்தப் பணிகள் சிலவற்றை செய்யாமலேயே பில் போட்டு எடுத்திருக்கிறதா சொல்றாங்க. எந்தப் பணியையும் பகிரங்க ஏலம் விடாமல் அமைச்சரின் பினாமி ஒருத்தர்கிட்ட மட்டுமே கொடுத்திருக்காங்க'' என்கிறார்கள்.

'எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் நகராட்சி பகுதியில் பணிகள் செய்யப்பட்டிருக்கிறதா?’ என்று பொதுப்பணித் துறை பொதுத்தகவல் அலுவலர் சாந்தியிடம் பேசினோம். ''சட்டமன்ற உறுப்பினர் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சித் தலைவர் ஆணைக்கிணங்க, கடலூர் நகராட்சிக்கு உட்பட்ட இடத்தில், நகராட்சி அனுமதி இல்லாமலேயே சிமென்ட் சாலைகள், தார் சாலைகள், வடிகால் வாய்க்கால்கள், புதிய கட்டடங்கள், நியாயவிலைக் கடை மற்றும் கழிப்பறைகள் கட்டுதல் என இரண்டரை கோடி ரூபாய்க்குப் பணிகள் மேற்கொண்டுள்ளோம்'' என்றார்.

அமைச்சர் எம்.சி.சம்பத் சட்டமன்ற கூட்டத்தொடரில் இருந்ததால் அவரிடம் பேச முடியவில்லை. அவரின் உதவியாளர் ராஜசேகரிடம் இதுகுறித்து பேசினோம். ''சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் பணிகள் மேற்கொள்ள நகராட்சியிடம் அனுமதி வாங்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. அதுமட்டும் இல்லாமல் 25 லட்ச ரூபாய்க்கு மேல் பணி இருந்தால்தான், பகிரங்க ஏலம் விடப்படும். ஒப்பந்தக்காரர்களின் கிரேடை வைத்துதான் பணிகளை அவர்களிடம் கொடுத்துள்ளோம். பினாமி என்று சொல்வதெல்லாம் தவறான தகவல்'' என்றார்.

நல்லா இருக்கு உங்க சண்டை!

- கபூபாலன்

படங்கள்: எஸ்.தேவராஜன்