முதல்வர் அறிவித்த திட்டத்தை எதிர்த்து போர்க்கொடி பிடிக்கிறார்கள் விவசாயிகள். விவசாயிகளுக்கு ஆதரவாக கம்யூனிஸ்ட் கட்சிகளும் களமிறங்க, ரணகளப்படுகிறது புதுக்கோட்டை.

கடந்த 2013-ம் ஆண்டு நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, 110 விதியின் கீழ் புதுக்கோட்டையில் தொழில் பூங்கா தொடங்கி அதில் உலர் தோல் தொழிற்சாலை உட்பட்ட தொழில்கள் தொடங்கப்படும் என அறிவித்தார். புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டார்கோவில் ஒன்றியத்தைச் சேர்ந்த பலையூர், நல்லபுடையான் பட்டி, வத்தனாக்கோட்டை, தெம்மாவூர், சின்ன ஊரணிப்பட்டி, ரவுசாப்பட்டி, காரடிவயல், பாப்புடையான்பட்டி, வடுதாவூர் ஆகிய கிராமங்களில் இருக்கும் விவசாய நிலங்களைத் தேர்வு செய்திருக்கும் அதிகாரிகள், இப்போது ஆய்வுப்பணியை தொடங்கியிருக்கிறார்கள். இதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என அந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகளும், அவர்களுக்கு ஆதரவாக சி.பி.எம் மற்றும் சி.பி.ஐ கட்சியினரும் கடந்த வாரம் போராட்டத்தில் குதித்தனர்.

இதுகுறித்து பேசிய விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பின் தலைவர் இராம.தீர்த்தார், ''புதுக்கோட்டை மாவட்டத்துக்குத் தொழில் பூங்கா வருவதை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், அதற்காக விவசாயமே அத்துப்போகும் நிலையில் இருக்கும் புதுக்கோட்டை மாவட்டத்தில், விவசாய நிலங்களைக் கையகப்படுத்த வேண்டாம் என்றுதான் சொல்கிறோம். இந்த மாவட்டத்தில் அரசு நிலங்கள் அதிகம்

இருக்கிறது. அதில் ஒரு இடத்தில் தொழில் பூங்கா அமைக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய கோரிக்கை'' என்றார்.

சி.பி.எம் மாவட்டச் செயலாளரான சின்னத்துரை, ''புதுக்கோட்டை மாவட்டத்தில் எப்போது மழை வரும், எப்போது வறண்டுபோகும் என்பதே தெரியாது. வருடத்தில் ஒருநாள் கடுமையான மழை பெய்தால்கூட, இந்த வருடத்துக்கான மழை பெய்துவிட்டதாக அதிகாரிகள் கணக்குக் கொடுத்துவிடுகிறார்கள். காய்ந்துபோன கண்மாய், வறண்டுபோன வாய்க்கால், 450 அடிக்கு கீழ் நீர்மட்டம் என்பதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், விவசாயிகளிடம் இருக்கும் சிறிதளவு விழிப்பு உணர்வால்தான் விவசாயம் செய்து வருகிறார்கள். அதையும் அவர்களின் உயிராக நினைத்து செய்வதால்தான், புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயமே இருக்கிறது. அந்த நிலங்களையும் அரசு கையகப்படுத்தி தொழில் பூங்கா அமைத்துவிடக் கூடாது. அரசின் தரிசு நிலங்களை கையகப்படுத்தி தொழில் பூங்கா அமைக்க வேண்டும்.

அதோடு, தொழில் பூங்காவில் என்னென்ன தொழில் தொடங்கப்போகிறார்கள் என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். தோல் தொழிற்சாலை போன்ற தொழில் தொடங்கினால் சுற்றுச்சூழல் பிரச்னை ஏற்பட்டு, ஒட்டுமொத்த மாவட்டத்திலும் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படும். இதை எல்லாம் அரசு செய்துதர வேண்டும். இதே கோரிக்கையை வலியுறுத்தி, வரும் வாரத்தில் மொத்த விவசாயிகளையும் ஒன்றுதிரட்டி கந்தர்வக்கோட்டையில் உண்ணாவிரதம் இருக்கப்போகிறோம்'' என்றார்.

தொடர்ந்த சி.பி.ஐ மாவட்டச் செயலாளரான செங்கோடன், ''வேளாண் கல்லூரிகள் தொடங்க 110 விதியின் கீழ் அறிவித்த முதல்வர், விவசாய நிலங்களைக் கையகப்படுத்தி தொழில் பூங்கா தொடங்க அனுமதிப்பது சரியல்ல. புதுக்கோட்டை மாவட்டத்தில் ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் ஆயிரக்கணக்கான ஏக்கர் அரசு புறம்போக்கு மற்றும் தனியார் நிலங்களை ஆக்கிரமித்து வைத்திருக்கிறார்கள். அதை இனம் கண்டு, அந்த இடத்தில் தொழில் பூங்கா தொடங்க வேண்டும்'' என்றார்.

இதுகுறித்து தொழில் துறை அமைச்சரான தங்கமணியிடம் பேசினோம். ''தொழில் பூங்கா அமைப்பதற்கு நிச்சயம் விளைநிலங்களை கையகப்படுத்த மாட்டோம். தரிசு நிலங்களை தேர்வுசெய்து அதில்தான் தொழில் பூங்கா அமைக்கப்படும்'' என்றார்.

நல்லது!

- வீ.மாணிக்கவாசகம்