'நில அபகரிப்பு வழக்கு சீசன் இன்னும் முடியலையா?’ என அதிர்கிறார்கள் முன்னாள் மாண்புமிகுக்கள். அறநிலையத் துறைக்குச் சொந்தமான நிலத்தை கிரையம் வாங்கி மோசடி செய்திருப்பதாக ஏற்கெனவே அழகிரி மீது புகார் கூறப்பட்டுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி மீதும் புகார் கிளம்பியுள்ளது.

''திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் மற்றும் சிதம்பரம் நடராஜர் திருக்கோயில்களுக்குச் சொந்தமான 9 ஏக்கர் 33 சென்ட் நிலம், கோவை - கண்ணம்பாளையத்தில் உள்ளது. அது அரசு அதிகாரிகளின் ஆதரவுடன் அபகரிக்கப்பட்டுள்ளது. இப்போது அந்த இடத்தில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, அவரது தலைமையிலான விஜயலட்சுமி அறக்கட்டளையின் மூலம் செயல்பட்டு வரும் கலைஞர் கருணாநிதி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி எனும் கல்லூரியை நடத்தி வருகிறார். இது தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என திருத்தொண்டர்கள் சபையின் நிறுவனத் தலைவர் ராதாகிருஷ்ணன், தமிழக தலைமை செயலாளரிடம் புகார் கொடுத்தார். இந்த நிலையில், கடந்த 8-ம் தேதி காலை, அறநிலையத் துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் போலீஸாரோடு அந்தக் கல்லூரிக்கு ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொள்ள வர, பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திருத்தொண்டர்கள் பேரவை ராதாகிருஷ்ணனிடம் பேசினோம். ''தமிழகம் முழுவதும் சட்டவிரோத ஆக்கிரமிப்பில் இருக்குற திருக்கோயில் நிலங்களை மீட்கணும் என்ற நோக்கத்துல தொடங்கப்பட்டதுதான் இந்தத் 'திருத்தொண்டர்கள் சபை.’ கோயம்புத்தூர் மாவட்டம், கண்ணம்பாளையத்துல 9.33 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளதா தகவல் கிடைச்சது. ஆவணங்களை வெச்சு விசாரிச்சப்போ, கடந்த 1898-ம் ஆண்டு கண்ணம்பாளையம் கிராமத்தில் கருப்பண்ண கவுண்டர் என்பவர், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீப சமராதனை செய்யவும், சிதம்பரம் நடராஜர் திருக்கோயிலில் வில்வ அர்ச்சனை செய்யவும் அவரோட 9.33 ஏக்கர் நிலத்தில் கிடைக்குற வருமானத்தை எழுதி வெச்சுடறார். இந்தச் சொத்தை அபகரிக்கணுங்கற சதித்திட்டத்தோட கருப்பண்ண கவுண்டர்களின் வாரிசுகள் ரத்தினசாமி, சதாசிவம் ஆகியோர், அறநிலையத் துறைக்கோ, கோயிலுக்கோ தகவல் தெரிவிக்காம, தன்னிச்சையா கீழமை நீதிமன்றத்துல வழக்கு தொடர்ந்து விற்பனை செய்ய அனுமதி வாங்கியிருக்கிறாங்க. பிறகு அந்த நிலத்தை 14.04 லட்சத்துக்கு வித்துட்டாங்க. 2007-ம் வருஷம் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமியின் 'விஜயலட்சுமி பழனிசாமி அறக்கட்டளை’க்காக அந்த இடத்தை வாங்கி கல்லூரி கட்டியிருக்காங்க.

இது சட்ட விரோதம். இந்த நிலம் ஏறக்குறைய 50 கோடி ரூபாய். இந்த நிலம் விற்கப்பட்டப்ப பொங்கலூர் பழனிசாமி அமைச்சரா இருந்தார். எனவே அதிகாரிகள் துணையில்லாமல் இது நடந்திருக்காது. எனவே நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்கணும்'' என்றார்.

இது தொடர்பாக பொங்கலூர் பழனிசாமியின் மகளும், விஜயலட்சுமி அறக்கட்டளை மற்றும் கலைஞர் தொழில் நுட்பக் கல்லூரியின் துணைத் தலைவருமான இந்து, ''நீதிமன்ற அனுமதி வாங்கிதான் நிலம் வித்திருக்காங்க. நிலத்தை விற்பனை செய்ததில் கிடைத்த தொகையை வங்கியில் டெபாசிட் செஞ்சு, கோயிலுக்கு செய்ய வேண்டியதை செஞ்சுட்டு வர்றாங்க. நாங்க காலேஜ் விரிவாக்கத்துக்காக, மூணாவது பார்ட்டியாதான் இந்த நிலத்தை வாங்கியிருக்கோம். இதை முழுக்க முழுக்க அரசியல் காழ்ப்பு உணர்ச்சியாலதான் செய்யறாங்க. முறையான அனுமதியோட வந்து விசாரிக்கட்டும்'' என்றார்.

இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், ''முறையான தகவல் தெரிவிக்காமல், கோயில் நிலத்தை சட்டவிரோதமாக விற்றதாகப் புகார் எழுந்துள்ளது. விசாரித்து வருகிறோம்'' என்றனர்.

நில அபகரிப்புப் பிரிவு இதனை விசாரணைக்கு எடுத்தால், பொங்கலூர் பழனிசாமிக்கு சிக்கல்தான்!

- ச.ஜெ.ரவி

படங்கள்: தி.விஜய்