கோயில் வாசலை அடைத்தது தொடர்பாக அ.தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ தரப்புக்கும், கோயில் நிர்வாக அலுவலருக்கும் தகராறு ஏற்பட... முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியதாக, அந்த அதிகாரியை சஸ்பெண்ட் செய்துள்ளது அறநிலையத் துறை.

சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கலில் மலைமேல் அமைந்துள்ளது ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோயில். அந்தக் கோயிலுக்கு கிழக்கு, தெற்கு என்று இரண்டு வாசல்கள் உள்ளன. இதில் கிழக்கு வாசல் வழியாக கோயிலுக்குச் செல்ல முடியாத அளவுக்கு மாடி வீடுகள், கடைகள் என்று ஆக்கிரமிப்புகள். எனவே, தெற்கு வாசல் வழியாகவே பக்தர்கள் கோயிலுக்குச் சென்று வருகின்றனர்.

ஸ்ரீவில்லிப்புத்து£ர் மடாவர் வளாகம் வைத்தியலிங்க சுவாமி கோயில் நிர்வாக அதிகாரியான அஜீத், கடந்த பிப்ரவரி மாதம் திருத்தங்கல் ஸ்ரீநின்ற நாராயணன் பெருமாள் கோயில் பொறுப்பு அதிகாரியாகப் பதவியேற்றுள்ளார். கோயிலைச் சுற்றியிருந்த ஆக்கிரமிப்புகளைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், அதை அகற்றும் முயற்சியில் இறங்கினார். ஆக்கிரமிப்பாளர்களில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க-வைச் சேர்ந்த சிலரும் அடக்கம் என்பதால், அஜீத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது.

இந்த நிலையில், 'முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசினார்’ என்று சமீபத்தில் கோயில் நிர்வாக அலுவலரான அஜீத்தை, இந்து அறநிலையத் துறை சஸ்பெண்ட் செய்துள்ளது.

ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ள சிவகாசியைச் சேர்ந்த வக்கீல் முருகன், ''ஸ்ரீநின்ற நாராயண பெருமாள் கோயிலில் கடந்த 2004-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது கோயிலில் திருப்பணி செய்கிறோம் என்று சொல்லி அ.தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ பாலகிருஷ்ணன் தலைமையில் ஒரு கோஷ்டியினர் உள்ளே நுழைந்தனர். செங்கமலத் தாயார் பக்த பரிபாலன சபா என்ற டிரஸ்ட்டை ஆரம்பித்தனர். அப்போது முதல் கோயிலுக்கு தெற்கு வாசல் வழியாக வரும் பக்தர்களிடம், கோயில் திருப்பணிக்கு என்று லட்சக்கணக்கில் பணம் வசூலித்து வருகின்றனர். இதைத் தடுக்க, அந்த வாசல் கதைவைப் பூட்டினார் அஜீத். உடனே உள்ளூர் அமைச்சரான கே.டி.ராஜேந்திரபாலாஜியிடம், கோயில் நிர்வாக அலுவலர் அஜீத் மீது புகார் செய்தனர். அமைச்சர் ராஜேந்திரபாலாஜி இந்தப் பிரச்னையில் தலையிடவும், கோயில் நிர்வாக அலுவலர் அஜீத்தை சமீபத்தில் சஸ்பெண்ட் செய்துள்ளது இந்து அறநிலையத் துறை'' என்றார்.

இதுபற்றி சிவகாசியைச் சேர்ந்த அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ-வான பாலகிருஷ்ணன், ''கிழக்கு வாசல் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதை விட்டுவிட்டு, பக்தர்கள் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தும் தெற்கு வாசலை மூடக் கூடாது என்று நிர்வாக அலுவலர் அஜீத்திடம் சொன்னோம். இதில்தான் பிரச்னை ஏற்பட்டது. 'முதல்வர் ஜெயலலிதாவே நேரில் வந்து சொன்னாலும், தெற்கு வாசலை திறக்க மாட்டேன்’ என்று கோயில் நிர்வாக அலுவலர் அஜீத் சொல்லியிருக்கிறார். இதை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியின் கவனத்துக்குக் கொண்டுசென்றோம்'' என்றார்.

கே.டி.ராஜேந்திரபாலாஜியிடம் பேசினோம். ''தெற்கு வாசலை பல ஆண்டுகளாகப் பக்தர்கள் பயன்படுத்துகின்றனர். திடீரென்று கோயில் நிர்வாக அதிகாரி அஜீத் தன்னிச்சையாக தெற்கு வாசலை மூடிவிட்டார். நியாயம் கேட்கப் போனவர்களிடம் முதல்வர் பற்றி அவதூறாகப் பேசியுள்ளார். உயர் அதிகாரிகளிடம் ஆலோசிக்காமல் தெற்கு வாசலை மூடியதற்காக அவரை சஸ்பெண்ட் செய்துள்ளனர்'' என்றார்.

- எம்.கார்த்தி

படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்