விடிந்தால் சுதந்திரதினம். நாடே கொண்டாட்டத்தில் திளைத்திருக்க... பெரம்பலூரில் குண்டு வெடித்து நிலையகுலைய வைத்தது.

பெரம்பலூர் பேருந்து நிலையத்தில் பயணிகளை அடைத்துக்கொண்டு இரவு 7.40 மணிக்கு துறையூரை நோக்கிப் புறப்பட்டது கே.ஆர்.டி என்ற தனியார் பஸ். சரியாக 14 கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்ததும் ஈச்சம்பட்டி என்ற இடத்தில் பஸ் நின்று பயணிகளை இறக்கிவிட்டுக் கிளம்பியபோதுதான் டிரைவரின் இருக்கைக்குப் பின்புறத்தில் 'டமார்’ என்ற சத்தத்துடன் பயங்கரமாக வெடித்தது. பலத்த காயங்களுடன் ஒன்பது பேர் பெரம்பலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நல்லவேளையாக உயிர் சேதம் எதுவும் இல்லை.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த செல்வராஜிடம் பேசினோம். ''டிரைவருக்குப் பின்னாடி ரெண்டு ஸீட் தள்ளி நான் உட்கார்ந்திருந்தேன். திடீர்னு டமார்னு சத்தம் கேட்டுச்சு. கால்ல இருந்து ரத்தம் கொட்ட ஆரம்பிச்சிடுச்சு. எனக்கு ரத்தம் பார்த்ததும் மயக்கம் வந்துடுச்சு. பெரம்பலூர் கடைத் தெருவில் ஏறிய ரெண்டு பேருதான் சீட்டுக்கு அடியில பையை வெச்சுட்டு பாளையத்துல இறங்கிட்டாங்கன்னு சொன்னாங்க. மத்தபடி எனக்கு எதுவும் தெரியலைங்க!'' என்று பதற்றத்துடன் சொன்னார்.

போலீஸ் வட்டாரத்தில் சிலரிடம் பேசியபோது, ''இரண்டு லிட்டர் கூல்டிரிங்ஸ் பாட்டிலில் பெட்ரோல் நிரப்பி, பாட்டிலின் மூடிப் பகுதியில் டெட்டனேட்டரை வைத்து பேட்ரிகளும், சர்க்யூட் போர்டும் செய்து இணைத்துள்ளனர். ரிமோட் மூலம் இதனை வெடிக்க வைக்கும் அளவுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். அவர்களின் டார்கெட் ஈச்சம்பட்டி அல்ல. ஏனென்றால் இங்கே ரிமோட்டில் வெடிக்க வைக்கவில்லை. பேருந்தில் ஏற்பட்ட உராய்வினால் வெடித்திருக்கிறது. துறையூரில் ஆர்.எஸ்.எஸ் தலைமையில் மூன்று நாட்கள் பயிற்சி வகுப்புகள் தொடங்கியுள்ளன. இதில் பல முக்கிய நிர்வாகிகள் கலந்துகொள்கிறார்கள். இந்தக் கூட்டத்தைக் குறிவைத்து அந்தப் பஸ்ஸில் வெடிகுண்டை வைத்திருக்கலாம். பஸ் துறையூர் வந்ததும் ரிமோட் மூலம் வெடிக்க வைக்கத் திட்டமிட்டிருக்கலாம் என சந்தேகமாக இருக்கிறது'' என்றனர்.

மாவட்ட எஸ்.பி சோனல் சந்திராவிடம் பேசினோம். ''குண்டு வெடிப்புச் சம்பவம் பற்றி விசாரிக்க 10 தனிப்படைகள் அமைத்துள்ளோம். ஆர்.எஸ்.எஸ் அமைப்பை அச்சுறுத்த வேண்டும் என்றால், அதற்கு ஏன் பெரம்பலூரில் குண்டு வைக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. இதற்கு வேறு ஏதேனும் காரணம் இருக்கலாம். எப்படி இருந்தாலும் விரைவில் நிச்சயம் குற்றவாளிகள் பிடிபடுவார்கள்'' என்றார்.

போலீஸார் இன்னும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!

- எம்.திலீபன், ர.ரஞ்சிதா