''நாங்க திருநெல்வேலி அரவு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிப்பு முடிச்சுட்டோம். அதிகாரிகளோட அலட்சியத்தால் இன்னும் பட்டம் வாங்க முடியாமல் தவிக்கிறோம். இதுபற்றி உங்ககிட்ட பேசணும்!''- ஜூ.வி ஆக்ஷன் செல்லில் (044-66802929) இப்படி ஒரு குரல் பதிவாகியிருந்தது.

திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்துள்ள வைரிசெட்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஜீவன்ராஜ் என்பவர்தான் நமக்கு புகார் சொன்னவர். அவரைச் சந்தித்தோம். ''எங்க அப்பா, அம்மா எல்லாம் கூலி வேலை செய்யுறாங்க. எனக்கு, திருநெல்வேலி கவர்மென்ட் மெடிக்கல் காலேஜ்ல ஸீட் கிடைச்சது. 2008-ம் வருடம் கல்லூரியில் சேர்ந்த நான், தேர்வு எழுதி 2013 பிப்ரவரி மாதம் டாக்டர் படிப்பை முடிச்சிட்டேன். அடுத்து பயிற்சி மருத்துவர் பயிற்சியையும் கடந்த மார்ச் மாதம் முடிச்சேன். கல்லூரியில் டி.சி வாங்க போனப்பதான், 'மருத்துவம் படிக்கிற மாணவர்களுக்கு நடத்தப்படும் சான்றிதழ் விசாரணைக்கு உன்னோட சாதிச் சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்கள் குறித்து விசாரிக்க, உங்க ஊர் கலெக்டர் அலுவலகத்துக்கு அனுப்பியிருக்கோம். அவங்க அறிக்கை அனுப்பலை. பலமுறை நாங்கள் கடிதம் அனுப்பியும் அவங்ககிட்ட இருந்து பதில் இல்லை. அந்த அறிக்கை வந்தாதான் நீங்க டாக்டரா பதிவுசெய்ய முடியும்’னு சொன்னாங்க. கல்லூரி முதல்வர் உட்பட எல்லோரையும் பார்த்தேன். எந்த பிரயோஜனமும் இல்லை.

அதுக்குப் பிறகு கடந்த மே மாதம் 25-ம் தேதி ஆர்.டி.ஓ அலுவலகத்துல நேர்ல ஆஜராகச் சொல்லி எனக்குக் கடிதம் வந்தது. போய் ஆர்.டி.ஓ-வைப் பார்த்தேன். 'விசாரணை முடிஞ்சிடுச்சு. அனுப்பிடுறோம்’னு சொன்னார். ஆனா, இதுவரைக்கும் அறிக்கை கல்லூரிக்கு வரவே இல்லை. என்னோடு படிப்பை முடிச்சவங்க எல்லாம் தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சிலில் பதிவுசெய்து, டாக்டராக வேலை பாக்குறாங்க. ஆனா, நான் வேலைக்கும் போக முடியாம, மேற்படிப்புக்கும் விண்ணப்பிக்க முடியாம தவிக்கிறேன்'' என்று கலங்கினார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த கௌரி என்ற மாணவிக்கும் இதே பிரச்னை. அவரிடமும் பேசினோம். 'வேதாரண்யத்தை அடுத்த மரைஞாயநல்லூர் கிராமம் எங்களுடையது. அப்பா விவசாயம் பார்த்து கஷ்டப்பட்டுதான் என்னை டாக்டருக்குப் படிக்க வெச்சார். எங்க தலைமுறையிலேயே காலேஜுக்குப் போய் படிக்கிறது நான்தான். படிப்பு முடிஞ்சுடுச்சு. ஆனா, என்னோட சாதிச் சான்றிதழ் விசாரணைக்காக கலெக்டர் ஆபீஸுக்கு அனுப்பியிருக்காங்களாம். அவங்க இன்னும் அறிக்கை அனுப்பல. செப்டம்பரில் அரசு மருத்துவர் பணிக்குத் தேர்வு இருக்கு. அந்தத் தேர்வைகூட எழுத முடியாத சூழ்நிலையில நாங்க இருக்கோம். எங்களைப்போலவே தூத்துக்குடியைச் சேர்ந்த சித்ராவும் விக்னேஷ்வரியும் பாதிக்கப்பட்டிருக்காங்க. படிக்கிற பசங்களுக்காக முதல்வர் எவ்வளவோ உதவி பண்றாங்க. எங்களுக்கும் அவங்கதான் வழிகாட்டணும்'' என்று கண்ணீருடன் கோரிக்கை வைத்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீ முரளிதரனிடம் பேசினோம். ''எல்லா மாணவர்களுக்குமே இப்போது இதுபோன்ற அறிக்கையைக் கேட்கிறார்கள். உடனுக்குடன் அவர்களின் சான்றிதழை சரிபார்த்து அனுப்ப உத்தரவிட்டு இருக்கிறேன். நீங்கள் குறிப்பிடும் மாணவருக்கு ஏன் தாமதமானது என்று உடனடியாக அதிகாரிகளிடம் விசாரிக்கிறேன். அவருக்கு சான்றிதழ் கிடைக்க ஏற்பாடு செய்கிறேன்'' என்று உறுதியாகச் சொன்னார்.

நாகை, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்கள் கவனத்துக்கும் இந்த விஷயத்தைக் கொண்டுசென்றிருக்கிறோம். எல்லோருக்கும் உடனடியாக சான்றிதழ் கிடைத்தால் அவர்களின் மருத்துவப் படிப்பு நிறைவடையும். அவர்களின் மருத்துவ சேவையும் தொடங்கும்!

மாணவர்களின் பதற்றத்தைப் போக்குங்க ஆபீஸர்ஸ்!

- சி.ஆனந்தகுமார்

படங்கள்: என்.ஜி.மணிகண்டன்