Published:Updated:

''அடுக்கடுக்காகப் புகார்கள்... அசைக்க முடியாத காமராஜ்!''

கொந்தளிக்கும் திருவாரூர் அ.தி.மு.க.

''அடுக்கடுக்காகப் புகார்கள்... அசைக்க முடியாத காமராஜ்!''

கொந்தளிக்கும் திருவாரூர் அ.தி.மு.க.

Published:Updated:
''அடுக்கடுக்காகப் புகார்கள்... அசைக்க முடியாத காமராஜ்!''

''பதினைந்து ஆண்டுகளாக மாவட்டச் செயலாளர். சசிகலாவின் தம்பி திவாகரனோடு சேர்ந்துகொண்டு தனக்குப் போட்டியாக யாரையெல்லாம் நினைத்தாரோ, அவர்களையெல்லாம் கட்சியைவிட்டே ஒழித்துவிட்டார். திவாகரனை ஜெயலலிதாவுக்குப் பிடிக்காமல் போனதும், திவாகரனின் ஆதரவாளர்கள் என்று முத்திரை குத்தி பலரையும் கட்சியை விட்டு நீக்க வைத்தார். இதுவரை 16 முறை அமைச்சர்களை மாற்றிய முதல்வர். 17-வது முறையாக எங்கள் மாவட்ட அமைச்சரை மாற்ற மாட்டாரா?'' என்ற தொணியில் உணவு அமைச்சர் காமராஜ் மீதான ஒரு புகார் கடிதத்தை ஜெயலலிதாவுக்கு அனுப்பியிருக்கிறார்கள் திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க-வினர்.  

அமைச¢சர் காமராஜ் மீதான புகார் கடிதத்திலிருந்து...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''உங்களால் கோபுரத்தில் உட்கார வைக்கப்பட்ட ஒரு சுயநல அரசியல் பிரமுகரின் இரட்டை வேடத்தைத்

''அடுக்கடுக்காகப் புகார்கள்... அசைக்க முடியாத காமராஜ்!''

தோலுரித்துக் காட்டவே இந்தக் குமுறல் கடிதம் என ஆரம்பமாகிறது... அமைச்சரை சந்திக்க காலை 8 மணிக்குச் சென்றால், கலெக்டரை காலை 8 மணிக்கெல்லாம் சென்று பார்க்க முடியுமா? நானும் ஓர் அரசு துறையைச் சார்ந்தவன், எதற்கு காலையிலேயே வீட்டுக்கு வருகிறாய்? என்று தொண்டர்களை அவமானப்படுத்துகிறார். மாவட்டத்திலுள்ள பல்வேறு கூட்டுறவுச் சங்க பொறுப்புகள், கான்ட்ராக்ட் வேலைகளை உறவினர்களுக்கு 80 சதவிகிதம், பினாமிகளுக்கு 15 சதவிகிதம், எதிர்கட்சியினருக்கு 5 சதவிகிதம் என ஒதுக்குகிறார். அமைச்சரின் நெருங்கிய உறவினர்கள் 5 பேருக்கு மட்டுமே கான்ட்ராக்ட் வேலைகளைக் கொடுத்து வருகிறார்(பெயர் விவரங்கள் இணைப்பு). கருணாநிதியின் குடும்ப அரசியலையே இவர் மிஞ்சி விட்டார். ஆனால், கட்சி நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டங்களுக்கு நகர, ஒன்றிய பொறுப்பாளர்களையே செலவு செய்யச் சொல்கிறார். எதுவும் கேட்டால் பதவி, கட்சியை விட்டு நீக்க¤விடும் அளவுக்கு பயத்தை உருவாக்கி உள்ளார். அமைச்சர் மீதான புகார் குறித்து தலைமைக்குக் கடிதம் அனுப்பினால், யார் அனுப்பினார்களோ, அவர்களிடமே அப்புகார் கடிதத்தைத் திருப்பிக் கொடுத்து மிரட்டுகிறார்...'' என்று நீளும் அக்கடிதத்தில்... ''சாதாரண நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவராக அரசியலுக்கு வந்தவர், இப்போது பெரிய செல்வந்தராக வலம் வருகிறார். அமைச்சரிடம் சிபாரிசுக்காக சந்திக்க வரும் கட்சியினரை கேவலமாக திட்டுவதோடு, தன்னை யாரும் அசைத்துக்கூட பார்க்கமுடியாது என்று கொக்கரிக்கிறார். கட்சிக்காரர்களை அடிமைபோல் நடத்துகிறார். தி.மு.க-வினரை எதிர்த்து அரசியல் செய்யவில்லை, அ.தி.மு.க-வினரை எதிர்த்துதான் அரசியல் செய்கிறார். திருவாரூர் மாவட்ட தி.மு.க-வின் முக்கிய பிரமுகருக்கு கான்ட்ராக்ட் வேலைகளைக் கொடுத்துள்ளார். நம் கட்சிக்காரரான வீரசேகரனின் இடத்தை இங்குள்ள கட்சிக்காரர்களே  அபகரித்துவிட்டார்கள். இந்த விஷயத்தில் அமைச்சர் கண்டுகொள்ளவில்லை. ஒருகட்டத்தில் மனம் வெறுத்துப்போன வீரசேகரன் மன்னார்குடி கட்சி அலுவலகத்துக்குள் தீக்குளித்து இறந்த சோக சம்பவமும் நடந்தது. இப்படிக்கு, தங்களின் 25 ஆண்டு கால உண்மை தொண்டர்கள் என¢று முடிகிறது அந்தக் குமுறல் கடிதம்.

திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க-வினரிடம் பேசினோம், எங்கள் மாவட்டத்தில் நன்னிலம், திருவாரூர், மன்னார்குடி தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க நன்னிலத்தில் மட்டுமே ஜெயித்தது. மற்ற இரண்டு தொகுதிகளில் தி.மு.க ஜெயித்தது. நன்னிலத்தில் ஜெயித்த  காமராஜுக்கு அமைச்சர் பதவி கிடைத்தது. முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் ஞானசுந்தரம், சீனிவாசன், சிவராஜமாணிக்கம், அழகு திருநாவுக்கரசு, கலைஞரை எதிர்த்து போட்டியிட்ட

எம். ஆர் என்கின்ற ராஜேந்திரன் ஆகியோர் இப்போது கட்சியிலே எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. எல்லாம் இவரால் ஓரங்கட்டப்பட்டவர்கள்தான். அ.தி.மு.க அமைச்சர்களில் இவருக்குத்தான் அதிகமான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.  இதுகுறித்து ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்குக் கடிதம் அனுப்பியும், எந்த நடவடிக்கையும் அமைச்சர் மீது எடுக்கவில்லை'' என்றார்கள்.

அமைச்சர் காமராஜின் ஆதரவாளர்களிடமும் பேசினோம்... ''கட்சிக்கு எதிராக ஈடுபட்டு, கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சிலர் வேண்டுமென்றே அமைச்சர் மீது தொடர்ந்து குற்றம் சாட்டுகிறார்கள்'' என்றார்கள்.  

புகார் குறித்து அமைச்சர் காமராஜிடமே கேட்டோம், ''என்மீது சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானது. தொடர்ந்து இதுபோன்ற புகார் கடிதங்களை எழுதி வருகிறார்கள் என்னுடைய அரசியல் வாழ்க்கையைப் பிடிக்காதவர்கள். கட்சியினரை தவிர வேறு யாருக்கும் நான் எந்த வேலையையும் கொடுத்ததில்லை. என்னுடைய உறவினர்களுக்கு நான் கான்ட்ராக்ட் வேலைகளையெல¢லாம் கொடுக்கவே இல்லை. அது சுத்த பொய்யான தகவல்'' என¢று கூலாக சொல்லி முடித்தார்.

ஜெயலலிதா என்ன தீர்ப்பு சொல்லப்போகிறாரோ?    

- ஏ.ராம்

படம்: கே.குணசீலன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism